Wednesday, January 20, 2010

பெயரில்லாதவை - 20/01/2010

சென்ற வாரம் எழுதிய இந்த கவிதைக்கு நிறைய்ய்ய புதிய நண்பர்களிடமிருந்து (நிறைய என்றால் நான்கு, ஐந்து எனக் கொள்க) வாழ்த்துகள் வந்தன. அதில் ஒரு நண்பர் ("பிரபல", "பிராபள" போன்ற அடைமொழிகளில் பெரிய ஈடுபாடு இல்லாததால், அவற்றை தவிர்க்கிறேன்) எனக்கு அவர் எழுத்தில் இருக்கும் நெருக்கம் போலவே, தனக்கும் என்னிடம் இருக்கிறது என்று எண்ணும்படியாக (?) ஒரு மறுமொழி இட்டிருந்தார். ஆனால் அவர் இடுகை ஒன்றில் வாசித்த "நகைமுரண்" என்ற வார்த்தை தான் அந்த கவிதைக்கான விதை என சொல்ல நினைத்து, சொல்லவில்லை, இங்கே சொல்கிறேன். அவர்..... அட போங்கப்பா, சூரியனுக்கே டார்ச்சா !  "நகைமுரண்" என நீங்களே கூகுளிட்டுப் பாருங்கள், அவர் பெயர் தான் முதலில் வருகிறது.

*********************************************************

ரொம்ப நாளா ஒரு சந்தேகம். பல பதிவுகளை வாசிக்கும் போது, "சுவற்றில்"  என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டு வருவதை கவனிக்கிறேன். உதாரணமா, "சுவற்றில் படங்களை மாட்டினார்", "சுவற்றில் வெள்ளை அடித்தார்" - இந்த மாதிரி. ஆனா போன ஜென்மத்துல பள்ளிக்கூடத்துல படிக்கும் போது, "சுவற்றில்" என்ற பதம் தவறு, "சுவரில்" என்பது தான் சரி என்று சொல்லிக் கொடுத்ததா ஞாபகம். எந்த பதம் சரி, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

*********************************************************

சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த நகைச்சுவையின் தமிழாக்கம் " சுட்டி-குட்டி".

டீச்சர் : வெப்பம் அதிகமானதும், திடப்பொருளாகும் ஒரு திரவத்தை சொல்லு?
சுட்டி : "தோசை மாவு".

டீச்சர் : Al2O3 னா அலுமினா. சரி சுட்டி, Fe2O3 னா என்ன சொல்லு?
சுட்டி : "ஃபிலோமினா"

டீச்சர் :  இல்பொருள்உவமைஅணி என்றால் என்ன?
சுட்டி :  ஜம்பலக்கடி பிம்பா !
டீச்சர் :  சுட்டி, நீ சொல்றது ஒரு எழவும் புரியல.
சுட்டி :  சேம் டு யூ, மிஸ்.

*********************************************************

இந்த வாரம் எனது "ட்விட்டில் ஹிட்"

"பட்டுப் பாரம்பர்யத்தில் பத்தாயிரம் ரூபாய்க்கு எடுத்தாலும், வீட்டுக்கு வந்து விட்டுட்டு வந்த புடவையைப் பற்றியே புலம்புவது மனைவியர் மரபு."

*********************************************************

இனிவரும் நாட்களில் "பெயரில்லாதவை"கள் அடிக்கடி வர இருப்பதால் (ஒரு நம்பிக்கை தான்), இந்த இடுகை முதல் பெயரில்லாதவை "தேதியிட்டு" வருகிறது. 

தங்கள் கருத்துக்களை தவறாது தெரிவியுங்கள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.

*********************************************************

8 comments:

  1. அன்பின் பாலகுமார்

    பெயரில்லதவை நன்று நன்று - மிகவும் ரசித்தேன்

    தொடர்க

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சீனா ஐயா.

    ReplyDelete
  3. "பெயரில்லாமல்" பட்டையைக் கிளப்ப வாழ்த்துகள்.. கொஞ்ச நாள் கழிச்சு இப்போத்தான் மொத்தமா இடுகைகளை படிக்கிறேன் பாலா.. கோபல்ல கிராமம் இப்போதுதான் வாங்கியுள்ளேன்.. பகிர்வுக்கு நன்றி.. எனக்கு என்னமோ தந்தை பற்றிய கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது..:-)))

    ReplyDelete
  4. "பெயரில்லாதவை" என்பதே பன்மை; அங்கே எதற்காகக் 'கள்'ளேற வேண்டும்?

    ReplyDelete
  5. @கார்த்தி.

    வருகைக்கு நன்றி.

    //எனக்கு என்னமோ தந்தை பற்றிய கவிதை ரொம்பப் பிடித்திருக்கிறது..:-))//

    மகிழ்ச்சி.

    @பெயரிலி

    வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.

    "பெயரில்லாதவை" என்பது பல்வேறு சின்ன, சின்ன செய்திகளின் ஒரு தொகுப்புக்கான தலைப்பு. இதே போல நிறைய தொகுப்புகள் என்பதற்காக "பெயரில்லாதவை"கள்...
    சரியா?

    ReplyDelete
  6. //டீச்சர் : Al2O3 னா அலுமினா. சரி சுட்டி, Fe2O3 னா என்ன சொல்லு?
    சுட்டி : "ஃபிலோமினா"//

    நானா இருந்தாலும் இதை தான் சொல்லியிருப்பேண்ட் தல!

    :)

    ReplyDelete
  7. ungal peyarilathavai peyar illaamaleye pugal perugirathu..

    ரொம்ப நாளா ஒரு சந்தேகம். பல பதிவுகளை வாசிக்கும் போது, "சுவற்றில்" என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டு வருவதை கவனிக்கிறேன். உதாரணமா, "சுவற்றில் படங்களை மாட்டினார்", "சுவற்றில் வெள்ளை அடித்தார்" - இந்த மாதிரி. ஆனா போன ஜென்மத்துல பள்ளிக்கூடத்துல படிக்கும் போது, "சுவற்றில்" என்ற பதம் தவறு, "சுவரில்" என்பது தான் சரி என்று சொல்லிக் கொடுத்ததா ஞாபகம். எந்த பதம் சரி, தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

    nadaimuraiyil ippadi pesi pazhahittom.....suvaril thaan correct..ithu maadhiri neraiya irukku....

    ippa ellaam LKG vaandugal thaan joke super a adikiraanga.. :)

    ReplyDelete
  8. "சுவரில்" is crct

    //சேம் டு யூ, மிஸ்.//
    ஆனாலும் ரொம்ப தைரியம் தான் இப்படிக்கு இதை நெஜமாவே sklஇல் சொல்ல இயலாதோர் சங்கம்

    ReplyDelete