Monday, November 24, 2008

பெயரைக் கொடுக்கும் வள்ளல்கள் ! (கிறுக்கனிஸம் - 0)

எங்க கல்லூரி வாழ்க்கைல, நாங்க பண்ண கிறுக்குத்தனமான விஷயங்களை கொஞ்சம் உண்மை, அப்புறம் நிறைய கற்பனை, அப்புறம் கொஞ்சம் உண்மை கலந்து எழுதலாம்னு இருக்கோம்...
நாங்கன்னா, நாங்க ஏழு பேரு...
கிறுக்கன், மட்டை, காடு, வாய்க்கா, காந்தி, டுபுக்கு, பொறுப்பு.
"கிறுக்கன்"
- தலைப்புக்கு பெயர்க்காரணமே இவன் தான். ஆனா ரொம்ப தன்னடக்கம் உள்ளவன். எவ்வளவு கிறுக்குத்தனம் பண்ணாலும் ஒன்னுமே தெரியாத மாதிரி அமைதியா இருப்பான். யாரு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான், ஏன்னா இவன் ரொம்ம்ம்ம்ப நல்லவன் !
"மட்டை"
- "இந்த பூனையும் பச்சை தண்ணீர் குடிக்குமா?" ன்னு கேக்குற அளவு அமைதியான பையன். மட்டையா மடங்கிருவான். இரன்டாம் காட்சிக்கு, இவங்க தியேட்டர்ல பிட்டு படம் ஓட்டும் போது கூட நிதானம் இழக்காம சரியா 5 நிமிஷத்துல மெயின் படத்த மறுபடியும் போட்டுருவான், அந்த அளவு யோக்கியன்.
"காடு"
- பேசுறத பார்த்தா முரடன்னு தோனும். கல்லூரில எல்லாரும் காட்டுப்பயன்னு தான் சொல்லுவாங்க. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப பயந்தவன். அதை வெளியே காட்டிக்காம இமேஜ் மெயின்டெயின் பண்ணனுமே, அதனால அப்பைக்கப்ப ஏதாவது சவுன்டு விட்டுகிட்டே இருப்பான்
"வாய்க்கா"
- எங்களோட கடைசியா வந்து சேர்ந்தவன். நாங்கெல்லாம் ஓட்டி, ஓட்டியே Close Frind ஆகிட்டான். Hostel ல சிங்கம் மாதிரி சவுன்டு விடுவான், Class Room க்கு போய், பொண்ணுங்களை பார்த்தவுடனே ....."மியாவ் !!!"
"காந்தி"
- இவனுக்கு ஏன் தான் காந்தினு பேரு வச்சோமோ, மனசுக்குள்ள "உத்தமர்" காந்தின்னே நினைப்பு. வாயத்திறந்தா அட்வைஸ் மழைய நிறுத்த முடியாது. ஆனாலும் அப்பைக்கப்ப ஓஷோ பத்தியெல்லாம் சொல்லுவான்.
"டுபுக்கு"
- இவன் மனசுக்குள்ள தான் ஒரு ஹீரோ மெட்டீரியல் ன்னு நினைப்பு. ஆனா மெட்டீரியலை தைக்கிறதுக்கு முன்னாடியே நாசமாப்போனான். எஙளோட Maximum COmedy இவன வச்சு தான் நடக்கும். இவன ஏத்தி விட்டு, சூடாக்கி, அந்த சூட்டுல குளிர் காயுறதுன்னா பசங்களுக்கு அப்படியொரு சுகம்!
"பொறுப்பு"
-இவனுக்கு தான் கருத்து சொல்லாட்டி, உலகத்துல எந்த விஷயமும் முடிவுக்கு வராதுன்னு அப்படியொரு நம்பிக்கை. தெரியாதவஙகிட்ட பேசவே மாடான், தெரிஞ்சவங்க கிட்ட பேசினா, நிறுத்தவே மாட்டான்.
So, எங்க ஏழு பேரோட பார்வையில் , எங்க கல்லூரி வாழ்க்கை தான் இந்த "கிறுக்கனிஸம்".
இதை யாராவது (முழுதும் படிக்கும் வரை பொறுமை இருந்து) படித்து விட்டு, இது "Five Point Someone" மாதிரி இருக்குது, இல்ல, அது அளவு இல்ல, இது வேற மாதிரி இருக்குது என்றெல்லாம் சொன்னால், அவர்களின் அறியாமையை எண்ணி
 நாங்கள் சிரிக்கின்றோம் !!!
:) வாங்க, "கிறுக்கனிஸம்" தொடங்குகிறது...!
எச்சரிக்கை: இந்த தொடர்ல வரப்போற சாகசம் எல்லாம் நாங்க பண்ணது ன்னு நினைச்சு, எங்கள கும்ம வராதீங்க.. இதுல்ல வர்ற Nick name மட்டும் தான் எங்களோடது. Incidents எல்லாம் சும்மா ரூம் போட்டு உக்கார்ந்து யோசிச்சது .... ஒரு popularity க்காக எங்க பட்டப் பெயரைக் கொடுத்து உதவின வள்ளல்கள் நாங்க... (குத்து விளக்கு ஏத்த வந்திருக்குற, வரப் போற வீட்டு அம்மணிகள் தயவு செஞ்சு கவனிச்சிக்கோங்க ! , அப்பாடா, We the Escape...)
பெயரைக் கெடுக்கும் வள்ளல்கள் ! :) :) :)
இன்னும் கிறுக்குவோம்...

Saturday, November 15, 2008

ரசிகப்பெருமக்களே! "கிறுக்கனிஸம்" படிக்க ரெடியா !

நண்பர்களே !
விரைவில் எதிர்பாருங்கள், உங்கள் கல்லூரி வாழ்கையின் சொல்லப்படாத கிறுக்குத்தனங்கள் எங்கள் பார்வையில், நமது "நட்பு வட்டாரம் " மற்றும் "சோலை அழகுபுரம்" வலைப்பூக்களில் .....
(பெரிய பட்ஜெட் படம் ல, அதான் ரெண்டு தியேட்டர்ல ரிலீஸ்!)

தலைப்பு : "கிறுக்கனிஸம்"

என்ன, தலைப்பு சுமாரா தான் இருக்குன்னு பார்க்குறீங்களா, கவலையே படாதீங்க ! கதையும் சுமாரா தான் இருக்கும். :) ஆனா, நீங்கெல்லாம் தொடர்ந்து Comments கொடுப்பது மூலமா, ஸ்வாரஸ்யமா கொண்டு போக முடியும்னு "நாங்க" நம்புறோம் .

(வந்ததிலிருந்து "நாங்க", "நாங்க" ன்னு சொல்றியே டா, "நாங்க" ன்னா யாரு டா ?)

ஐயோ, அதுக்குள்ள ரசிகர்கள் அன்புத்தொல்லையா ? பொறுங்கப்பா சொல்லுவோம் ல !
அன்பார்ந்த ரசிகப்பெருமக்களே !
ரசிகர் மன்றம் விண்ணப்பங்கள் Stock தீர்ந்து போச்சு, தயவுசெய்து பொறுமை காக்கவும்
எங்களைப் பற்றிய அறிமுகம், வெகு விரையில் உங்கள் அபிமான வலைப்பூக்களில் .......

கடைசியா ஒரு சின்ன அறிவிப்பு...
யார் யார் இத படிக்கிறீங்கன்னு ஒரு Attendance, மறக்காம போட்டுட்டு போங்கப்பா.... பின்னாளில் சரித்திரம் உருவாகும் போது, அதன் முதல் பக்கத்தில் உங்க பேரும் இடம் பெறனும்ற நலல எண்ணத்துல தான் சொல்றோம்.

மீண்டும்... விரைவில் சந்திப்போம் !
Friday, November 7, 2008

வலி

எட்டுத்திக்கும் கட்டி ஆள்வதாய், என்
அடிமைத் தொழிலுக்கு அர்த்தம் சொல்ல
பத்துத் திண்ணை போதாது
பேசத்தெரியாத அப்பாவுக்கு !

போன வருஷம் வீட்டுப் பசுவுக்கு
ரெட்டைப் பிரசவம் பார்த்தும்,
பேச்சியம்மன் படித்துறையில் 
ரெட்டைப் பாம்பை பிடிச்சதும்
பேசிப் பேசி தீரவில்லை
புத்திசாலி அண்ணனுக்கு !

தங்கச்சி வீட்டப் போல
தன் புருசனும் அடிச்சிருந்தா
ஆயிரம் ரூபா காசுக்குப் பதில் 
அரைப்பவுனா கிடைச்சிருக்குமே...
உள்ளூர பெருங்கவலை 
உடன்பிறந்த பெரியவளுக்கு !

செண்ட் பாட்டிலும் ஜிகினா சட்டையும்
பார்த்து பார்த்து பூரிக்கிறான் 
என் பாசக்கார சின்னத்தம்பி !

"பாதி உடம்பா ஆகிட்டியேப்பா,
திரும்பி போய்த்தான் ஆகணுமா....!"

நான் பசியோடு படுத்ததெல்லாம் 
பக்கத்திலிருந்து பார்த்தாளோ ....
நான் பட்ட வலிக்கு எல்லாம் 
இவ நெஞ்சில் தழும்பிருக்குமோ ?

குரல் உடைந்து அழறாளே,
என் கூறுகெட்ட தாய் மட்டும் ...


Thursday, November 6, 2008

நீங்க I.T ஆளா, பார்த்திருவோமா ?* உங்க டூவீலர், பெட்ரோல் ரிசர்வ் ஆகி நின்னுட்டா கூட, ரீபூட் பண்ணி சரி பண்ணிரலாமானு யோசிச்சிருக்கீங்களா ?


* உங்களோட மொபைல் போன்ல ctrl+c, ctrc+v  Function இல்லேன்னு எப்பவாது கவலைப்பட்டு இருக்கீங்களா ?


* நீங்க கொஞ்சம் மந்தமா இருந்த ஏதோ ஒரு சமயத்துல, யாரோ உங்க பேரை கேட்கும் போது suresh_43@..... ன்னு சொல்ல ஆரம்பிச்சு பாதில நிறுத்தி இருக்கீங்களா ?


* உங்க வீட்டு போன்ல "9" அடுச்சுட்டு, ஆபரேட்டர் Answer பண்ணுவாங்கன்னு Wait பண்ணிட்டு இருந்திருக்கீங்களா ?


* தியேட்டர்க்குப் போகும் போது கூட, Entrance ல, டிக்கெட்க்குப் பதிலா உங்க ஆபீஸ் I.D.Card அ காமிச்சுட்டு, அப்பறம் அசடு வழிஞ்சிருக்கீங்களா ?


* தியேட்டர்ல படம் பார்த்துட்டு இருக்கும் போது, டைம் பார்க்கணும்னு தோணுனா, டக்னு, திரையோட Right Bottom Corner ல, Clock அ தேடுனீங்களா?


* டி.வி ரிமோட்ல, சேனல்ல இருந்து, DVD க்கு மாற, Alt+Tab Functionஅ தேடிட்டு இருந்தீங்களா ?


* எங்க பாட்டிய "C.P.U" ல Admit பண்ணி இருக்காங்க, இன்னும் 2 நாள்ல "Dispatch" பண்ணிருவாங்கன்னு எப்பவாது சொல்லி இருக்கீங்களா ?


* மொபைல் போன்ல ஏன் Recycle Bin  இல்லேன்னு எப்பவாது யோசிச்சிருக்கீங்களா ?


* "Bug" ங்கிற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் மூட்டைப்பூச்சி தான்னு உங்களுக்கு தெரியலையா ?


* உங்க வீட்டு சாவிய காணாம்னு ரொம்ப நேரம் தேடும் போது, உங்க இடது கை சுண்டு விரல் Ctrl Key யையும், ஆள்காட்டி விரல் "F" Key யையும் தானா தேடுதா ?
மேலே சொன்ன பிரச்சனை எல்லாம் உங்களுக்கு இருந்தா........ இத படிச்சவுடன் யாருக்காவது Forward பண்ணனும்னு கை பரபரத்தா, நீங்க நிச்சயம் I.T ஆளு தான் !!!!


(knot got from a forwarded mail from a friend! :) )

Wednesday, November 5, 2008

பதிவர்களே ! என் முடிவு சரிதானா ?

எல்லாருக்கும் வணக்கம்ங்க !

நான் பாட்டுக்கு சிவனேன்னு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு அமைதியா தாங்க இருந்தேன்.. சுமார், ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆர்குட் ல பராக்கு பார்த்துட்டு இருந்தப்ப, யாரோ ஒரு கதைய எங்கருந்தோ சுட்டுப்போட்டுருந்தாங்க. ரொம்பத்தெளிவா, சோர்ஸ் எதுன்னு போடாம விட்டுட்டாங்க. கதை வழக்கமா இருக்குற கதை மாதிரி இல்லாம, close to heart இருந்த மாதிரி ஒரு feeling.

அப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு மெயில் ல அதே கதை forward ஆகி வந்திருந்தது. ஆனா இப்போ சோர்ஸ் கொடுத்திருந்தாங்க. அந்த link அ பிடிச்சு போய்ப்பார்த்தா...........
B... L... O... G.... blog ... ஆ !!! அட, வெளி உலகத்துக்குத் தெரியாம, இங்க ஒரு மாய உலகமே இயங்கிட்டு இருக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா, link அ பிடிச்சு பிடிச்சு.... இப்போ தினமும் தமிழ்மணம் முகத்துல முழிக்காடி அந்த நாள், முழுமை அடையாத மாதிரி ஒரு illusion.

சரி, இது வரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இல்ல ...... ஆனா நான் இப்போ எடுத்திருக்க முடிவு... கொஞ்சம் அபாயகரமானது தான். ஆமா, உங்க guess சரி தான், நானும் பதிவர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. முதல் நாளே ஒரு 1000 ஹிட்ஸ் வந்திருச்சுன்னா அத கணக்கெடுக்க முடியாம போயிறக்கூடாதேன்னு, பாருங்க Hits Counter லாம் போட்டு வச்சிருக்கேன் (என்ன ஒரு தன்னம்பிக்கை !!!)

ஆனா, என்ன எழுத ? அட அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ... ( உண்மைதாங்க, எழுத மேட்டரே இல்ல !). ஆனாலும், 2 வருசமா யோசிச்சு, கடைசியா "ப்ளாக்" ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ல, அதுவே பெரிய விஷயம் தானே..

வருசா வருஷம், நான் எழுத ஆரம்பிக்குற டைரிக்கு ஒரு ராசி உண்டு, ஜனவரி 15 ம் தேதி வரை டைரி யா இருக்கும், அப்பறம் பிப்ரவரி 15 ம் தேதில இருந்து, டைரியோட முதல் 15 பக்கங்கள் கிழிக்கப்பட்டு rough note ஆ மாறிடும். பார்க்கலாம், இந்த "ப்ளாக்" எப்படி மாறப் போகுதுன்னு !!!!

இவ்வளவையும் சொல்லிட்டு, என்னை பதிவுலகிற்கு இழுத்துட்டு வந்த அந்த கதை எதுன்னு சொல்லாம இருப்பேனா....... அந்த கதை நம்ம வெட்டியோட "தூறல்"


நன்றி மக்களே !!!

எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"


நட்புடன்,
பாலா.