Tuesday, August 4, 2009

சாமி தரிசனம் !



பழனி மலை முருகன் தரிசனம்...

படியேறி பயணம் தவிர்க்க
'ரோப் கார்' சவாரி - சீட்டுக்கு ரூபாய் நூறு;
வரிசையில் கூட்டம் விலக்கி,
சிறப்பு பூஜை - அதுக்கு ரூபாய் நூறு;

வேலனுக்கு ராஜ அலங்காரம் - எனக்கு
வெள்ளி டம்ளரில் அபிஷேகப் பால் - தட்டுக்கு ரூபாய் நூறு;
கடவுள் பெயரை விட என் பெயரே
அதிகம் உச்சரிக்கப்பட்ட அர்ச்சனை - அதுக்கு இன்னொரு ரூபாய் நூறு;

பின்னால் இருந்தவர் லேசாய் தள்ள,
மனம் பதறிற்று பர்ஸை நோக்கி - அப்போ
சிறப்பாய் நடந்தது தீபாராதனை !

பலநூறு படியேறி,
சில‌நூறு அடிகளுக்கு அப்பால்,
இரும்பு கதவிற்குப் பின்னாலிருந்து...
காக்கிச் சட்டைகளுக்கும்,
காவி வேட்டிகளுக்கும் இடையே,
அலை மோதிய பாமர கூட்டம்,
ஒற்றைக் குரலில் சத்தம் போட்டது,
"அரோகரா அரோகரா" !

பக்கத்திலிருந்தவர் பக்தியுடன் சொன்னார்,
"அருமையான சாமி தரிசனம்!"
'ஆமாம் !ஆமாம்!' என்றேன்,
ஏழைப் பங்காளனான‌ இறைவன்
என்னையும் காப்பான் என்ற
அசட்டு நம்பிக்கையுடன் !

15 comments:

  1. நல்லா இருக்கிறது அண்ணா..

    ReplyDelete
  2. வேதனையான விஷயம் நண்பா.. சாமியும் இன்னும் கொஞ்ச நாளில் காசு கொடுத்தால் தான் தரிசனம் தருவார் போல..

    ReplyDelete
  3. கடவுள் பெயரை விட என் பெயரே
    அதிகம் உச்சரிக்கப்பட்ட அர்ச்சனை - அதுக்கு இன்னொரு ரூபாய் நூறு;
    ///

    மால் வேட்டினாத்தான் எல்லாம்....

    ReplyDelete
  4. சாமிகள் விற்பனைக்கு.. ரொம்ப நல்லா இருக்கு தல‌

    ReplyDelete
  5. Romba arputham bala....naanum pala thadavai ithai ninaithirukkiren..ippovellam enga irukireno angeye swami kumbitukuven..Kovilukku avalavaga povathillai.

    - Aarthi

    ReplyDelete
  6. இது ஒரு விதமான சிவப்பு சிந்தனைதான் பாலா .ஒரு வேலை அந்த இரும்பு கதவுக்கு பின்னால் இருந்தால் உன் மனம் அருகாமை தரிசனத்துக்காக ஏங்கி கிடைத்த தரிசனத்தை தவற விட்டு இருக்கும். அதே போல்தான் அருகாமை தரிசனமும். எளிதாக கிடைக்கும் எதற்கும் நம் மனம் மதிப்பு கொடுப்பதில்லை. எல்லா வக்கிரத்துக்கும் மனம்தான் காரணம்.
    இதில் கடவுளையோ அல்லது பணம் படைதவர்களையோ நொந்து ஒரு பயனும் இல்லை.
    பணமும் கொடுக்க மாட்டேன் .சிறப்பு தரிசனமும் வேணும்னா என்ன நியாயம் பாலா ?
    பணம் இல்லாதவன் பணத்தை சம்பாதிக்க முயற்சி பண்ணலாமே தவிர மத்தபடி வேற என்ன செய்ய முடியும்? ஆமா ,கடவுள் ஏழைக்கு மட்டும்தான் பங்காளன்னு உன்கிட்ட வந்து சொன்னாரா?

    ReplyDelete
  7. புகைப்படம் நல்லா இருக்கு.

    ReplyDelete
  8. ellaame kaasaga maariruchu.....all are money minded...

    kadavul peyara solli pilaippu nadaththum koottam koyil la irukira varai indha nilamai thaan..

    but kadavul la kuttram solli enna bayan?...

    namaiyum,theemaiyum pirar thara vaaraa nu solvaanga...

    naamale yerpaduththi kittathu ithu.....

    ethaarththamaa azhaga ezhuthirukeenga.....very nice......

    ReplyDelete
  9. Super bala .. Kaasae than Kadavulada !!

    ReplyDelete
  10. //பின்னால் இருந்தவர் லேசாய் தள்ள,
    மனம் பதறிற்று பர்ஸை நோக்கி //

    இருக்காத பின்ன, பழனி ஆண்டவரையே சுரண்டி சுரண்டி கொள்ளை அடித்த சனம் ஆச்சே நம்ம சனம்....

    என் நண்பன் பழனி சென்ற போது , அடிவாரத்திலே அர்ச்சனை தட்ட அர்ச்சகர் ஒருவர் பிடுங்கி கொண்டு நூறு ரூபாய் கேட்டாராம்....நல்ல வேளை வேட்டியில் கை வைக்க வில்லை....திருசெந்தூரிலும் இதே லட்சணம் தான்....


    //ippovellam enga irukireno angeye swami kumbitukuven//
    பெட்டெர் தான் ...அதுக்காக கோயில் போகாமல் இருக்க வேண்டாம்....எனக்கு எங்க கும்பல் அதிகமா இருக்குதோ அங்க அவ்ளவா போக பிடிக்காது.....கோயில் உட்பட ....

    //இது ஒரு விதமான சிவப்பு சிந்தனைதான் பாலா //

    அதென்ன சிவப்பு சிந்தனை ....interesting.....வேறு கலர் சிந்தனைகளை பற்றியும் சொல்லவும், மகா...

    //எளிதாக கிடைக்கும் எதற்கும் நம் மனம் மதிப்பு கொடுப்பதில்லை//

    அது என்னவோ ஒரு விதத்தில் உண்மை தான்....

    //ஆமா ,கடவுள் ஏழைக்கு மட்டும்தான் பங்காளன்னு உன்கிட்ட வந்து சொன்னாரா?//

    Good catch மகா......இது எப்டி இருக்குன்னா.....,,

    செந்தில்: எனக்கு வஞ்சகம் இல்லாத மனசுண்ணே ...அதான் நான் குண்டா இருக்கேன்...உங்களுக்கு சூனியம், அதான் எப்பவும் ஒல்லியாவே இருக்கீங்க...

    கவுண்டமணி: டேய் நில்லு, நாட்ல ரொம்ப பேர் இத சொல்லிட்டு இருக்கான்... அதெப்படிடா ....மகன உன்ன... ...நில்லு .. நில்லு டா....

    just Hypothetical statements!

    //all are money minded...//

    நீங்களுமா அப்டி சத்யா?..........(ச்சே ச்சே இருக்காது....:)

    //naamale yerpaduththi kittathu ithu.....//

    இப்போ குத்துதே குடையுதேன்னா.....

    //Kaasae than Kadavulada //

    அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா... ....

    -மதன்

    ReplyDelete
  11. ///பலநூறு படியேறி,
    சில‌நூறு அடிகளுக்கு அப்பால்,
    இரும்பு கதவிற்குப் பின்னாலிருந்து...
    காக்கிச் சட்டைகளுக்கும்,
    காவி வேட்டிகளுக்கும் இடையே,
    அலை மோதிய பாமர கூட்டம்,
    ஒற்றைக் குரலில் சத்தம் போட்டது,
    "அரோகரா அரோகரா" !///

    very nice ............

    எல்லாருக்கும் அரோகரா அரோகரா..............

    ReplyDelete
  12. அனைவருக்கும் நன்றிகள் !

    //Aarthi DayaShankar said...
    ippovellam enga irukireno angeye swami kumbitukuven..Kovilukku avalavaga povathillai.//

    கூட்டமில்லாத கோவிலுக்குப் போய் நிம்மதியா சாமி கும்பிட்டு வரலாமே !

    //isakki said...

    //எளிதாக கிடைக்கும் எதற்கும் நம் மனம் மதிப்பு கொடுப்பதில்லை. //

    இது என்னவோ உன்மை தான்.

    //பணமும் கொடுக்க மாட்டேன் .சிறப்பு தரிசனமும் வேணும்னா என்ன நியாயம் பாலா ?//

    அப்போ கடவுள் தான் சாதா, ஸ்பெஷல்,ஸ்பெஷல் சாதா ன்னு எல்லாம், வரிசை கட்டி வச்சிருக்கிறாரா, மகா ?

    //இது ஒரு விதமான சிவப்பு சிந்தனைதான் பாலா..//

    திட்டுறதுன்னா நேரடியாவே திட்டலாம், ஏன் புரியாத மாதிரி எல்லாம் திட்றீங்க ? :)


    //கடவுள் ஏழைக்கு மட்டும்தான் பங்காளன்னு உன்கிட்ட வந்து சொன்னாரா?//

    ஏழைக்கு(ம்) பங்காளன், இப்ப o.k. வா?

    // தருமி said...
    புகைப்படம் நல்லா இருக்கு... //

    ஆமா சார், யாரோ நல்லா எடுத்து, Net. ல போட்டு வச்சிருந்தார், எடுத்துக்கிட்டேன். :)

    //sathya said ....
    namaiyum,theemaiyum pirar thara vaaraa nu solvaanga... //

    உண்மை தான் ...

    //மதன் said ....
    just Hypothetical statements! ...//

    இதுக்கு பதில் : பூ வை , பூ ன்னும் சொல்லலாம், நான் சொல்ற மாதிரியும் சொல்லலாம், நீங்க சொல்ற மாதிரியும் சொல்லலாம்...

    ReplyDelete
  13. இறைவனை வியாபார பொருளாகிய மானிட தவறுகள்தாம் இவை.

    ReplyDelete
  14. // கார்த்திகைப் பாண்டியன் said...
    வேதனையான விஷயம் நண்பா.. சாமியும் இன்னும் கொஞ்ச நாளில் காசு கொடுத்தால் தான் தரிசனம் தருவார் போல.//.வேதனை

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி, சுந்தர் !

    ReplyDelete