Monday, January 17, 2011

சக்தி கல்யாண வைபோகமே !

******
நீ வைக்கப் போகும் பாயசத்தில் முந்திரிப் பருப்பாக மிதப்பேனா, தெரியாது. ஆனால் நிச்சயம் சக்கரை இனிப்பாக கலந்திருப்பேன்.
******
சுடுதண்ணீர் சமைப்பதை ரசித்துப் பாராட்டத் தோன்றும் இன்றைய மனநிலை பின்னொரு நாளில் உப்பில்லா ரசம் கிடைக்கும் போதும் வாய்த்திருக்கட்டும்.
******
பச்சை மிளகாய் போடாத ஆம்லேட்டாய் இருந்த என் வாழ்க்கைக்கு பெப்பர் தூவலாய் வருபவள் நீ !

******
மல்லிப்பூ இட்லியையும் மிளகாய் பொடியையும் சேர்த்து வைத்து சுவைக்க வைக்கிறது நல்லெண்ணை, வாழ்க்கை உன்னையும் என்னையும் சேர்ப்பதைப் போல.

****** :) ******


நண்பர்கள் அனைவரையும் எங்களது திருமண விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.


திருமணம்: 26/01/2011 காலை 9.30 முதல் 10.30 வரை
வரவேற்பு: 25/01/2011 மாலை 7.35 முதல்.
இடம்: சந்திரகுழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை

நட்புடன்,
பாலகுமார் - சக்திதேவி

******

******

12 comments:

  1. இனிய திருமண நல்வாழ்த்துகள்..!!
    :-)

    ReplyDelete
  2. ஒவ்வொரு வருடமும் உங்கள் திருமண‌ நாளுக்கு, இந்தியா முழுவதும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  3. அடடா, ஒரு நல்ல கவிஞனை இழக்கப் போகிறோமா,
    இல்லை பெப்பர் தடவிய காரக் கவிஞன் பிறக்கப் போகிறாரா :)
    பொறுத்திருந்து பார்ப்போம். திருமண நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. வாவ்...வாழ்த்துக்கள்...:))

    ReplyDelete
  5. திருமண வாழ்த்துக்கள் பாலா

    ReplyDelete
  6. வாழ்த்துகள் மக்கா!! :-)

    ReplyDelete
  7. மதுரையும் சிதம்பரமும் ஒரு சேர மண வாழ்வு சிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  8. very nice bala , congrats
    maha

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கூறுகிறேன் நண்பரே....

    ReplyDelete
  10. திருமணம் என்னும் பந்தத்தில் இரு மனம் இணைய வாழ்த்துகிறேன்.
    ...............................
    வெங்காயமா? இல்ல, தங்கமா?

    ReplyDelete
  11. உங்க மணவாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி !

    ReplyDelete