தெளிவான நீரோடை போல சீராக பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று முகத்தில் வீச, மெல்லிய புன்னகை முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம். கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. கடந்த ஞாயிறு (21/02/2010) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் சந்தித்தோம். கவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...
இன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும் செய்தல் "போலச்செய்தல்". நதியின் வழியெங்கும் கூடவே பயணித்து வருகிறது கூழாங்கல். தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது. கூழாங்கல் போலவே வழவழப்பாகவும், ரேகையுடனும் தான் இருக்கிறது கோலிக்குண்டு. கூழாங்கல் கிடைக்கப் பெறாதவர்கள் கோலிக்குண்டுகளை வாயினுள் சுழற்றி மொழி விளையாட்டு நடத்த முயற்சிக்கும் போது வார்த்தை மேலும் சிதிலமடையத்தான் செய்யும். மாறாக சில நதிக்கரைப் பயணங்கள் கூழாங்கல்லை கண்டடைய வழிவகுக்கும். இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான்.
வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ? இலட்சிய வாசிப்பும் இருக்கிறது, இலக்கில்லா வாசிப்பும் இருக்கிறது. வார்த்தை பிரயோகம் உணர்ந்து, இடம் பொருள் 'ஆ'வல் உணர்ந்து, இன்ன தேவைக்காக வாசிக்கிறோம் என்றுணர்ந்து இலக்கடைவதை இலட்சிய வாசிப்பாகக் கொள்ளலாம். தொடர்ந்த இலட்சிய வாசிப்பு புதிய புதிய வார்த்தைகளைக் கண்டடைய உதவும். இவ்வாறான சில வார்த்தைகளே சூழ் கொண்டு, கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.
பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம். மொழியை வளைத்து, வளர்த்து ஒரு வார்த்தை நீளாமலும், இடை நிறுத்தாமலும் பத்தியம் பார்த்து வைத்தியம் பார்ப்பதெல்லாம் மகப்பேறு வரை தான். கவிதை பிரசவித்த பின் பெற்றவன் இறந்து விடுவான். அது தான் நல்ல கவிதைக்கான அடையாளம்.
ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே மாற்ற முடியும். நம்மில் பலர் ஸ்ரீ எழுதிய "மாமாவின் கவிதை"யை வாசித்திருப்போம். இதில் ஒரே ஒரு வார்த்தையை சேர்க்கும் போது கவிதையின் முகமே மாறி வேறொரு தளத்துக்கு உயர்ந்து விடுகிறது.
"பொதுக் கழிப்பிடங்களின் சுவர்களில்
பேருந்துப் பயண இடை நிறுத்தங்களின்
சாலையோர நீர்க் கழிப்புகளில்
திரையரங்கு இடைவேளைகளில்
என எங்கேயும் பக்கம் பார்த்து
ஒப்பீடு செய்து கொள்கிறேன் .
...................................................
எப்போது பார்ப்பினும்
தவிர்க்க முடியவில்லை,
இன்னும் சற்றே பெரியதாய்
அமைந்திருக்கலாமென்ற நினைப்பை...."
என் பெயர்
இந்த கவிதையில் சேர்க்கப்பட்ட ஒரே வார்த்தை "சுவர்களில்", இறுதியில் நமது நினைப்பை சுக்குநூறாக உடைக்கும் 'குறி'யீட்டுச் சொல் "பெயர்".
பல தரப்பட்ட நினைவுகளைக் கலைத்துப் போட்டு, நடுவில் இணைக்கும் "நார்" போன்று ஒரு வார்த்தையை வைத்து விளையாடும் கவிதை விளையாட்டு நுட்பமானது. வாசிப்பவனே நார் தேடி எடுத்து, உதிர்ந்து கிடக்கும் வார்த்தைகளைக் கோர்த்து சரம் தொடுத்து பூப்பந்து செய்து மணம் நுகர்ந்து கொள்ள வேண்டியது தான். இணைக்கும் நார் தென்படவில்லையென்றாலும் ஒன்றும் மோசமில்லை, உதிரிப் பூக்களுக்கும் அதே மணம் தானே.
இனிதே மணந்தது அந்த ஞாயிறு மாலை. நன்றி நேசமித்ரன்.
பாலா வாசிக்க தெளிவாகவும்,அழகாகவும் இருக்கிறது இந்த பதிவு,இது பதிவல்ல,"பாடம்"
ReplyDeleteதலைப்பே கவிதையாய்.....கலக்கு பாலா..
ReplyDelete:)
ReplyDeleteThanks a lot for your time and hospitality bala ...
ReplyDeletewill speak over phone a well written post
:)
அருமை பாலா.கலக்குறீங்க.
ReplyDeleteயம்மாடி... ஆத்தாடி... இது சூப்பர்.
ReplyDeleteகலக்கல் இடுகை.
அன்பின் பாலா
ReplyDeleteஇடுகை அருமை அருமை - சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொன்ன விதம் நன்று - நல்வாழ்த்துகள் பாலா
ஸ்ரீயின் கவிதையும் ரசிக்கத் தக்கதுதான்
nice bala........
ReplyDeleteu r very much attracted from nesamithran speech.....
ya his opinion is so good...
en peyar .......kavidhai ya maatrina vidhame super.....
congrats to nesamithran...
நல்லதொரு வாசிப்பனுபவம் தல.
ReplyDeleteகவிதைகள் பற்றி அவரது பார்வை, என் நினைவிலிருந்து...
ReplyDeleteஇன்று கவிதை என்று எழுதுபவர்கள் பெரும்பாலும்
இந்த பயணம் என்பது தொடர்ந்த பலதரப்பட்ட வாசிப்பு தான்.
வாசிப்பு என்றால் எல்லாம் வாசிப்பாகுமா ?
கரு வளர்ந்து கவிதையைப் பெற்றெடுத்து விடும்.
பெற்றெடுக்கும் வரை தான் கவிதைக்கான முன் பேறுகால பக்குவம் எல்லாம்
கவிதைக்கான அடையாளம்.
ஒரே ஒரு வார்த்தை ஒரு கவிதைக்கான அடையாளத்தையே
ippadi oru variyin muduvu maru variyin aarambamaaga ezhuthuruppathu super...
Cheers Bala...... :)
எழுத்தில் ஒரு கவித்துவம் இருக்கிறது பாலா.. வாழ்த்துகள்..:-)))
ReplyDelete//தனக்குள் நதியின் ஆயுளை ரேகையாக ஒளித்து வைத்திருக்கிறது. மொழி வளத்திற்காக ஒரு கவிஞன் தன் வாய்க்குள் கூழாங்கல்லை வைத்து சுவைத்து சுழற்றுகிறான். கூழாங்கல் நதியின் குளுமையை வார்த்தை வழி கடத்துகிறது.//
ReplyDeleteதலைப்பும் இடுகையும் கலக்குறீங்க பால குமார் ..
" நெப்டியூன் தேசத்து நேசன் " வாழ்த்துக்கள் ..உங்களுக்கும் ...பாலகுமாருக்கும் ..
//இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே பார்த்து பரவசமடையும் மலையேற்றம். //
ReplyDeleteஅருமையான ஆரம்பம் !
//சுவர்களில் & என் பெயர் //
பாலா, நேசமித்திரன் ,ஸ்ரீ எல்லோரும் சேர்ந்து தமிழ் சினிமாவுக்கு பாடல்கள் எழுதலாம்....அந்த "தெறமே" இருக்கிறது....வாழ்த்துக்கள்......
மாமாவின் "பருவச்சிட்டு " வகையறா கவிதைக்கு,
// கூழாங்கல் & கோலிக்குண்டு // , பில்டப் எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்...
@ சத்யா
எப்பவாவது தமிழிலும் "comment" எழுதினால் நன்றாக இருக்கும்...
-மதன்
வருகை புரிந்த, வாசித்த, கருத்திட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றியும், அன்பும்.
ReplyDeleteoh bala i couldnot get all these things yaar.so confusing. !!
ReplyDeletecool maha, leave it :)
ReplyDelete@ சத்யா
ReplyDeleteஎப்பவாவது தமிழிலும் "comment" எழுதினால் நன்றாக இருக்கும்...
-மதன்
tamil la font varala..ok i have to change my option..thanks madhan..try to put my comment in tamil..
மிக அருமையான பகிரல் பாலகுமார்.நல்ல மொழி வளமை!
ReplyDelete@பா.ரா: வாங்க மக்கா, வணக்கம். என்னடா, நேசன் சந்திப்பு பற்றி எழுதிய எல்லார் பதிவையும் படிச்சாரே, நம்மது கண்ணுல படாம போச்சேன்னு ஒரு சின்ன வருத்தம் இருந்தது. இப்போ இல்ல :) நன்றி.
ReplyDelete