சென்ற வாரம், ஒரு கடை திறப்புவிழா அமர்க்களப் படுத்திட்டு இருந்தாங்க. கடை பெயரைப் பார்த்தா, "விர்ஜின் டிஸ்ட்ரிப்யூசன்" ன்னு இருந்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போய், என்னடா மதுரைக்கு வந்த சோதனை ன்னு பார்த்தா, மொபைல் ஃபோன் கடையாம். பேரு வைக்கிறவய்ங்க கொஞ்சம் யோசிச்சு வைக்கக் கூடாதா, பீதியைக் கிளப்புறீங்களேய்யா ?
*******************
எனக்கு ரொம்ப நாளாகவே ப்ளாகரில் இந்த "ஃபாலோயர்ஸ்" என்ற வார்த்தை கொஞ்சம் தர்மசங்கடத்தை கொடுப்பது போலவே இருக்கிறது. போதாக்குறைக்கு இப்போ கூகிள் பஸ்ஸிலும், அட்ரஸ் புக்கிலிருந்து கொஞ்ச நண்பர்களைத் தூக்கி ஃபாலோயர்ஸ் ஆக்கி விட்டிருக்குகிறது. சரி பதில் மரியாதை செஞ்சா சாபம் விமோசனம் கிடைக்கும்னு துரத்தி துரத்தி ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். நாம் ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஃபாலோ பண்ணிக்குவோம் ன்னு அக்ரிமெண்ட் போடாத குறை தான். ஃபாலோயர்ஸ் என்ற வார்த்தைக்கு பதில் ஆர்குட்டில் இருப்பது போல "ஃபிரண்ட்ஸ் - நண்பர்கள்" ன்னு இருந்தா நல்லா இருக்கும் போல இருக்கு.*******************
சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்""எப்பொருள் யாரார்வாய் கேட்பினும் கொஞ்சம் தள்ளி நின்று கேட்பதறிவு : எச்சில் முகத்தில் தெறிக்காமல் இருப்பதழகு."
"தமிழில் யோசித்து, ஆங்கிலத்தில் டைப்படித்து, அதை தமிழில் பார்த்து, ஒற்றுப்பிழைகளை சரி செய்ய மறுபடியும் ஆங்கிலத்தை தேடி... ஸ்ஸ்ஸ்ஸ் #முடியல்ல"
*******************
சமீபத்தில் மின்னஞ்சலில் வந்த ஒரு இணையதள முகவரி : http://www.view360.in/virtualtour/madurai/ . தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக.360 டிகிரி அமைப்பு அருமையாக உள்ளது. ஒரு சுற்று பார்த்து வாருங்கள்.
*******************
சச்சினை பாரட்டத் துவங்கிய 200 க்கு சற்றுமுன் வரை எல்லோரும் நிச்சயமாக தோனியை திட்டிக் கொண்டிருந்து தான் இருந்திருப்போம். ஒரு சாதனை நிகழவிருக்கும் தருணம் பற்றி தோனிக்குத் தெரியாமலா இருந்திருக்கும். பிறகும் ஏன் பொறுமையை அவ்வளவு சோதித்தார் ? 360, 370 எடுத்தாலும் தென்னாப்ரிக்கா துரத்திப் பிடித்து விடும், இன்னும் கொஞ்சம் சேர்த்துக்கலாம் என நினைத்திருக்கலாம். இல்லை, சச்சினை எதிர்முனையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கலாம். ம்ம்ம்ம் தெரியல, அவரிடம் தான் கேக்கணும்.*******************
சென்ற வாரத்தில் மிகவும் கவர்ந்த பன்ச் "சினிமாவே வேணாம், அரசியலுக்கு வரட்டா?"நன்றி மீண்டும் சந்திப்போம்.
*******************
Good ..
ReplyDeleteCongrats
அடிச்சு ஆடுங்கண்ணே..
ReplyDelete:-))))))))
ReplyDeleteகலாப்ரியா நிகழ்வ மிஸ் பண்ணிட்டீங்க நண்பா..:-(
சினிமாவே வேனாம்கறது நல்ல முடிவு,ஆனா அரசியலுக்கு வரட்டாங்கறது அவ்வளவு சரியில்ல .
ReplyDeletevery nice bala. i always love ur peyarillathavai .
ReplyDeleteசென்ற வாரம், ஒரு கடை திறப்புவிழா அமர்க்களப் படுத்திட்டு இருந்தாங்க. கடை பெயரைப் பார்த்தா, "விர்ஜின் டிஸ்ட்ரிப்யூசன்" ன்னு இருந்த்து. ஒரு நிமிடம் அதிர்ந்து போய், என்னடா மதுரைக்கு வந்த சோதனை ன்னு பார்த்தா, மொபைல் ஃபோன் கடையாம். பேரு வைக்கிறவய்ங்க கொஞ்சம் யோசிச்சு வைக்கக் கூடாதா, பீதியைக் கிளப்புறீங்களேய்யா ?
ha ha i also came across such "meaningful" names .
Dear Bala,
ReplyDeletenallayirukku Bala...eppadi irukkeenga!! indha vaarakkadaiyisil madurai varuven, mudindhaal santhikkalaam...
anbudan
ragavan
athaivida ungal blog amitjain.co.in username pwd ketkuthu. thontharavu.
ReplyDeleteமுதல் பத்தி அசத்தல்!
ReplyDeleteஆசிர், ராஜூ, கார்த்தி, ஸ்ரீ, மகா, ராகவன், விஜயஷங்கர், பரிசல்காரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.
ReplyDelete@கார்த்தி: அன்று கொஞ்சம் அவசர வேலை.
@ராகவன்: கண்டிப்பா சந்திப்போம் :)
@ விஜயஷங்கர்: எனக்கு சரியாக இருக்கிறதே, வேறு கணினியிலிருந்து சோதித்து பார்க்கிறேன், தகவலுக்கு நன்றி.
நல்லா இருக்குது பாலா. ரொம்ப நாள் கழிச்சு உன் ப்ளாக பார்த்தேன்(actually came thru your comments on cable sankar's blog :)). நிறைய மாற்றங்கள் (improvements)...
ReplyDeletetwitter வெறயா? கலக்கு...
மேலே தூக்கி வை (keep it up :))
@தீபா, அப்பப்போ வாங்க ஆபீஸர் :)
ReplyDeleteநட்புவட்டாரம் ப்ளாக்ல நீங்களும் ஆத்தர் தான் ஞாபகம் இருக்கா, ஏதாவது எழுதுங்க.