Monday, December 14, 2009

அப்பா ! ("உரையாடல்" கவிதை போட்டிக்காக.)



இரவிலிருந்தே கூட இருந்தோம்,
காலை மருந்தின்போது கூட
ஒரு முகக்குறிப்பு காட்டவில்லை.

மதியம் வரை தூங்கிவிட்டு
மெளனமாகவே சென்றுவிட்டார்,
என்ன செய்தி வைத்திருந்தாரோ
கடைசிவரை தெரியவில்லை.


தெருமுனையில் வண்டி நிற்க,
நண்பர்கள் துணைகொண்டு
நான்கு மாடி ஏற்றிவிட்டோம்.


வேறென்ன செய்ய வேண்டும்,
யாருக்கென்ன சொல்ல வேண்டும்
எப்போதும் அப்பாதானே கூட்டிப்போவார்,
அவரை எப்படி கூட்டிப்போக?


விஷயம் தெரிந்து வீடு நிறைந்தது...
முன்வந்து முகம் காட்டி,
கண் நனைத்து கட்டிப்பிடித்து,
ஆறுதல் சொல்லி, தேறுதல் கூறி
என்னென்னவோ செய்கின்றனர்...
தாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய !


அங்கும் இங்குமாய் அம்மாவை
ஆளாளுக்கு அலைக்கழிக்க,
ஐஸ்கட்டி பாளத்தில் அப்பா
அவஸ்தையுடன் தான் படுத்திருந்தார்.


"இரவெல்லாம் நாய்க்குட்டி
தனியாக தூங்காது.
காலையில் தானே எடுப்பீங்க,
அதுக்குள்ள வந்துருவோம்"
தொலைபேசி சொன்னது
உயிருக்குயிரான் சொந்தம் சில.


விடிந்ததிலிருந்து
வரவுசெலவு கணக்கெழுதி
இல்லாத பொறுப்பையெல்லாம்
பங்கு வைத்து, பந்தி வைத்து
தலைகீழாய் தாங்கியது
ஒன்றுவிட்ட சொந்தமெல்லாம்,
அப்பா இல்லையென்ற தைரியத்தில்.


தடித்த சத்தம், குறுட்டு வழக்கம்...
யாராரோ அதிகாரம் செலுத்த,
யாராரோ உரிமை வளர்க்க,
முன்னும் பின்னுமாய் எல்லாரும்
தங்கள் பெயரை பொறித்துச் செல்ல,
கொட்டுகிறது பெருமழை.


முச்சந்தியில் அந்நியமாய்
ஒதுங்கி நாங்கள் நிற்கின்றோம்.
அனைத்தையும் மெளனமாய்
பார்த்துக்கொண்டிருந்த அப்பா,
பல்லக்கிலிருந்து முகம் திருப்பி
எங்களைப்பார்த்து லேசாக,
புன்முறுவல் பூக்கின்றார்.


சொன்ன செய்தி புரிந்து கொண்டு
மெல்லமாய் தலையசைக்கின்றோம்.








20 comments:

  1. கவிதை அழகாகவும், அதேசமயம் கணத்துடனும் இருக்கிறது.

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நல்ல கவிதை பாலா.வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. ஒன்றுவிட்ட சொந்தமெல்லாம்,
    அப்பா இல்லையென்ற தைரியத்தில்..

    இந்த வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு தெரியும்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.!

    ReplyDelete
  4. கவிதை பெரும் பாரத்தை சுமந்திருக்கிறது. ஆனாலும் வார்த்தைகள் அருமை.

    ReplyDelete
  5. படிக்க படிக்க‌ வலிக்கிறது

    கணநேரத்தில் வாழ்க்கையே கண் முன்னே தெரிகிறது

    ReplyDelete
  6. ///என்னென்னவோ செய்கின்றனர்...
    தாம் வந்ததை தவறாமல் பதிவு செய்ய !///

    கவிதை அருமை என்று சொல்ல மனம் வரவில்லை. அத்தனை வலி. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. :( :( :( indha kavidhaikku en kudumbaththin kanneer thaan comment........
    unarnthu ezhuthina ungalukkku na remba nanri solla kadama patturukken........but idha ethukku pottikunu anupureenga? :(

    ReplyDelete
  8. அருமையான கவிதை, வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. அருமை பாலா அப்பாவின் செய்தியும் முறுவலும்

    வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. மிக கனமான கவிதை ஈடுஇல்லை

    ஜெயிப்பீங்க பாலா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. அன்பின் பாலா

    இன்றைய நிதர்சனக் கவிதை - நடப்பது இதுதான் எனினும் இதுதான் இயல்பாய் நடக்கிறது. என்ன செய்வது.

    //முச்சந்தியில் அந்நியமாய்
    ஒதுங்கி நாங்கள் நிற்கின்றோம்.
    அனைத்தையும் மெளனமாய்
    பார்த்துக்கொண்டிருந்த அப்பா,
    பல்லக்கிலிருந்து முகம் திருப்பி
    எங்களைப்பார்த்து லேசாக,
    புன்முறுவல் பூக்கின்றார்.


    சொன்ன செய்தி புரிந்து கொண்டு
    மெல்லமாய் தலையசைக்கின்றோம்.//

    நச்சென்ற இறுதிப்பகுதி

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  12. திம்மென்று ஏதோ கனமாய் ஒரு உணர்வு. இதுவே உங்களுக்கு வெற்றிதான்.

    வெற்றிபெற என் வாழ்த்துக்கள்

    -வித்யா

    ReplyDelete
  13. நன்றி க.பாலாசி.

    நன்றி ஸ்ரீ.

    நன்றி annadurai.

    நன்றி பூங்குன்றன்.

    நன்றி திகழ்.

    நன்றி S.A. நவாஸுதீன்.

    நன்றி யாத்ரா.

    நன்றி thenammailakshmanan.

    நன்றி பிரியமுடன்...வசந்த்.

    நன்றி சீனா ஐயா.

    நன்றி Vidhoosh-வித்யா.

    @சத்யா - என்ன சொல்லவென்று தெரியவில்லை.

    ReplyDelete
  14. ayyo bala ,so nice.i really love this.aana idhai padichaa kann nirambaama irukkathu. orae pulllaiya purantha enakku idhai vida adhigamaana kashtam irukkumnu bayamaa irukkuthu.
    maha

    ReplyDelete
  15. நன்றி மகா.

    நன்றி தியா.

    ReplyDelete
  16. INIYA KAVITHAI.VAZTUKKAL BALA.

    ReplyDelete
  17. மிக்க நன்றி, பழனிகுமார்.

    ReplyDelete
  18. Accidentally visited this page...but such an awesome expressive poem with simple words!!!! Hats off to you...

    ReplyDelete
  19. pirivu piriyum pothu puriyaathu..
    puriyum pothu erkaathu..
    punnakaikum appa eppothum kuda varuvaar sinthanail...
    thookam kalaitha migachila kavithaiyil ithuvum ondru
    vetrikani undu
    padma

    ReplyDelete
  20. வருகைக்கு மிக்க நன்றி மகா.

    வருகைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி பத்மா.

    ReplyDelete