Monday, December 21, 2009

சினிமாக்காரன்

அடுத்த பாட்டு முடிந்தவுடன்
பணக்காரனாவேன் என்று தெரிந்தால்,
நானும் கூடத் தான் இந்நேரம்
தொடை தட்டி சவால் விட்டுக் கொண்டிருப்பேன்.

******

என்னை வாழ வைக்கும்
அன்பு தெய்வங்களே,
சீக்கிரம் வந்து என்
செருப்பை துடையுங்கள் !


******

கெட்ட சினிமா பார்த்து
கெட்டுப் போகாதீர்கள் !
நம் அடுத்த படத்தில்
இளமை குலுங்கும்
மூன்று ஹீரோயின்கள்,
மறந்து விடாதீர்கள் !


******

"தமிழ் தான் என் பேச்சு,
தமிழகமே என் மூச்சு !"
படம் அங்கேயும் 
ரிலீஸ் ஆகுதுல்ல, சரி 
இதையே தெலுங்குலயும் 
ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க.


******

அடுத்த பிறந்தநாளுக்கு
ரெயின் கோட் கொடுப்போம்,
நிறைய தோல்விகளை
மூடி மறைக்க வேண்டியிருக்கு !


******

கருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்
கதைக்கருவா ?
கண்டிப்பா பண்ணலாம்.
பேமண்ட் எப்பவும் போல
ப்ளாக்லயே தந்திடுங்க.


******

"பையன் ஒன்னுக்கும் உதவாம
சும்மா தான் சுத்திட்டு இருக்கான்.
அதான் கழுத,
ஹீரோவாக்கிறலாம்னு பார்க்குறேன்.
பின்னால முதலமைச்சர் வேலைக்கு
அப்ளை பண்ணலாம் பாருங்க !"
--- மதுரைப் பக்கமிருந்து
மூட்டையுடன் வந்தவர்,
சந்தேகமாகத்தான் கேட்டார்.
நான் தான் வாழும் 
உதாரணங்களை எடுத்துக் காட்டி,
வரிசையில் நிற்க வைத்திருக்கிறேன்.

******

10 comments:

  1. //கருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்
    கதைக்கருவா ?
    கண்டிப்பா பண்ணலாம்.
    பேமண்ட் எப்பவும் போல
    ப்ளாக்லயே தந்திடுங்க.//

    கலக்கல்.இதைவிட வேறு எப்படியும் சிறப்பாக சொல்ல முடியாது.

    ReplyDelete
  2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, பூங்குன்றன்.

    ReplyDelete
  3. //கருப்பு பணத்தை ஒழிக்கிறது தான்

    கதைக்கருவா ?

    கண்டிப்பா பண்ணலாம்.

    பேமண்ட் எப்பவும் போல

    ப்ளாக்லயே தந்திடுங்க.//

    superb lines....




    "பையன் ஒன்னுக்கும் உதவாம

    சும்மா தான் சுத்திட்டு இருக்கான்.

    அதான் கழுத,

    ஹீரோவாக்கிறலாம்னு பார்க்குறேன்.

    பின்னால முதலமைச்சர் வேலைக்கு

    அப்ளை பண்ணலாம் பாருங்க !"

    --- மதுரைப் பக்கமிருந்து

    மூட்டையுடன் வந்தவர்,

    சந்தேகமாகத்தான் கேட்டார்.

    நான் தான் வாழும்

    உதாரணங்களை எடுத்துக் காட்டி,

    வரிசையில் நிற்க வைத்திருக்கிறேன்.

    arumaiya irukku.......
    vaazhthukal........good one...real a ezhuthirukeenga.....

    ReplyDelete
  4. :-))))))))))))
    அத்தனையும் அருமை.

    ReplyDelete
  5. // சரி
    இதையே தெலுங்குலயும்
    ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க.

    //
    பல தெலுங்கு டப்பிங் படங்களில் சென்னை, செங்கல்பட்டு மதுரை பேரெல்லாம் வருதுல்ல..,

    கார்ட்டூன் சேனல்கள்ல பாண்டி முருகன் பேரெல்லாம் வருதுல்ல தல

    ReplyDelete
  6. //சரி
    இதையே தெலுங்குலயும்
    ட்ரான்ஸ்லேட் பண்ணிக்கோங்க.

    //

    கார்ட்டூன் சேனல்ல பாண்டி, முருகன் பேரெல்லாம் வருதே தல..,

    ReplyDelete
  7. எல்ல கவிதைகளும் மிகவும் அழகாக இருக்கிறது...
    அதுவும் முதல் கவிதை மிக மிக அழகு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. நன்றி சத்யா.

    வருகைக்கும், புன்னகைக்கும் நன்றி ஸ்ரீ.

    டிமோன்&பூம்பா போன்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தமிழ் பேசுவதை ரொம்ப ரசிப்பேன், சுரேஷ். வருகைக்கு நன்றி.

    முதல் வருகைக்கு நன்றி, "சோழநாட்டு" கமலேஷ்.
    //என் தேவைகள் தேடி ஓடிய பயணத்தில் தொலைந்து போன என்னை தேடிகொண்டிருகிறேன் இன்னும்...// சீக்கிரம் கண்டடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Why bala what happened to u? normala inthamathiri kavithai(?) ellam kaevalamana bookla varum.nee eppidi?
    why we people always finding faullt with the people in cine industry(including me) why cant we take cinema as a cinema alone? why we always want the reel life hero to be a real life hero?
    namma muttalthanathukku yaaraio ethukku kurai sollanum.why we are looking into his or her personal life? they have their own life right?

    ReplyDelete
  10. @மகா:
    நேர்மையான் விமர்சனத்திற்கு முதலில் நன்றி.

    நான் சொல்ல நினைத்ததை சரியாக சொல்லவில்லை என் நினைக்கிறேன். சினிமாவை, சினிமாவாக மட்டும் பார்க்காததால் தான், சினிமாக்காரர்கள் தலையில் கிரீடத்தோடு அலைகிறார்கள். அந்த கோபத்தில் எழுதியது.

    ReplyDelete