மதுரையில் ஒரு ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்.
"கவிதையை நினைத்தால் காதல் பிடிக்கும்,
காதலை நினைத்தால் பெண்னைப் பிடிக்கும்
பெண்னை நினைத்தால் பைத்தியம் பிடிக்கும்"
பயபுள்ள, ரொம்ப அடிபட்டிருக்கும் போல!
**************************************
கடந்த ஒரு மாதமாக மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைத்து ஒருவாறு சீர்படுத்தியுள்ளார்கள். முக்கியமாக ரோட்டை அடைத்துக்கொண்டிருந்த தடுப்புகள், செயற்கை நீரூற்றுகள் போன்றவை அகற்றப்பட்டுள்ளன.பெரியார் பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் போக்குவரத்துக்கு ரொம்ப இடையூறா இருந்த ரவுண்டானா எல்லாம் போயே போச்சு. ஆனா கட்டபொம்மன் சிலையை சுற்றியுள்ள இடத்தில் மட்டும் தினம் ஒரு செங்கலா எடுக்குறாங்க போல. ஒரு வேளை கட்டபொம்மனுக்குன்னு ஒதுக்குன இடத்த ஏன் குறைக்கிறீங்கன்னு யாரும் சண்டைக்கு வருவாங்கன்னு யோசிக்கிறாங்களோ, என்னவோ!
மொத்தத்துல நம்ம மதுரையில் இவ்வளவு பெரிய ரோடுகள் இருக்கா என ஆச்சர்யமாத்தான் இருக்கு. போக்குவரத்துத் துறையில், யார் மனதில் தோன்றிய யோசனையோ, அவருக்கு வாழ்த்துக்கள்.
**************************************
மதுரை, மதுரைக் கல்லூரி வழியே பெரியார் நிலையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தேன். வழியில் ஒரு பெரியவர் லிஃப்ட் கேட்டார். சரியென நிறுத்தி ஏற்றிக்கொண்டேன். செல்லும் வழியில், லிஃப்ட் கொடுத்ததற்காக என்னை ரொம்பவே புகழ்ந்து கொண்டு வந்தார். "என்ன, ரொம்ப ஓவரா இருக்கே!" என நினைத்துக்கொண்டே, காதில் வாங்கிக் கொள்ளாதது போல வந்து கொண்டிருந்தேன். பேசிக்கொண்டே வந்தவர், தான் அருப்புக்கோட்டை அருகே ஒரு கோவிலில் அர்ச்சகராக இருப்பதாகவும், தனக்கு அம்மன் அருள் இருப்பதாகவும் சொன்னார். மேலும் எனக்கு இப்போ நேரம் சரியில்லையாம், அவரை கூட்டி வந்த புண்ணியத்திற்காக ஒரு பூஜை செய்து சரி செய்து விடுவதாகவும் அதற்கு ஐநூறு ரூபாய் மட்டும் தந்தால் போதுமென்றும் சொன்னார்.
நான் "ஐயா, பெரியார் நிலையம் வந்துருச்சு, இறங்கிக்கிறீங்களா ?" என்று சொல்லி அவரை இறக்கி விட்டு வண்டியை கிளப்பினேன். இப்பெல்லாம், மக்கள் மார்க்கெட்டிங் பண்றதுல ரொம்ப ஸ்மார்ட்டா மாறிட்டு வர்றாங்கல்ல.
**************************************
சென்ற வாரம், கொஞ்சம் பக்கங்களை நகலெடுக்க, நகலகம் சென்றிருந்தேன். கூட்டம் அதிகமாக இருக்க்வே காத்திருக்க வேண்டியதாயிற்று. உள்ளே, ஊழியர் ஒரு பெரிய புத்தகத்தை நகலெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு இரண்டு நிமிடம் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். கண்ணுக்குள் பூச்சி பறந்து, தலை சுற்றுவது போல் ஆகி விட்டது. பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். இதே வேலையை நாளுக்கு பனிரெண்டு மணி நேரம் வீதம், வருடம் முழுவதும் செய்பவரை நினைத்துப் பார்த்தேன்.கொஞ்சம் மலைப்பாகத் தான் இருந்தது.
**************************************
ரொம்ப நாளா சும்மா தான் வச்சிருக்கேன். சரி, இனி அங்கேயும் கொஞ்சம் கிறுக்க்லாம்னு இருக்கேன். என்னோட ட்விட்டர் முகவ்ரி : http://twitter.com/balatwits . வாங்க நண்பர்களே, கொஞ்சம் கை கொடுங்க.
அப்புறம், என் பழைய ப்ளாகர் மின்னஞ்சல் முகவரி solaiazhagupuram@gmail.com கொஞ்சம் நீளமா தோணுச்சா, அதான் balavinmail@gmail.com ன்னு மாத்தி இருக்கேன்.
ஆர்குட்டில் http://www.orkut.co.in/Main#Profile?rl=ls&uid=11039259661382243826. அனைவருக்கும் அன்பு வரவேற்புகள்.
**************************************ஆர்குட்டில் http://www.orkut.co.in/Main#Profile?rl=ls&uid=11039259661382243826. அனைவருக்கும் அன்பு வரவேற்புகள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மீண்டும் விரைவில் சந்திப்போம்.
**************************************
happy new year yaar!!!
ReplyDeletewhat is that twitter bala?
மதுரை சாலைகள் அகலமாவது மகிழ்ச்சி. :)
ReplyDeleteட்விட்டர் - வாங்க பாலா, கலக்குவோம்.
இசக்கி, ட்விட்டர் பற்றி தமிழில் தெரிந்துகொள்ள ஓசியில் ஓர் உலகத்தந்தி - ட்விட்டர் வாசிக்கவும்.
(ஹி ஹி.. மார்கெட்டிங்)
ட்விட்டர்ல நானும் இருக்கேன்.
ReplyDeleteநன்றி மகா. (நண்பர் பீர் எழுதிய இடுகை புரியும் படி, சிம்பிளா இருக்கும், படிக்கவும்)
ReplyDeleteநன்றி பீர், சேர்ந்தாச்சு.
உங்க முகவரி என்ன, ஸ்ரீ?
என்னமோ போங்கண்ணே.. இப்போ ஊர்ருக்குள்ள போக்குவரத்து இன்னும் கொஞ்சம் ஜாஸ்தி குழப்பமா இருக்கு.. ட்விட்டர்? இருக்கறதுக்கே நேரம் பத்தல.. நீங்கவேற..
ReplyDeleteவருகைக்கு நன்றி கார்த்தி.
ReplyDelete//ட்விட்டர்? இருக்கறதுக்கே நேரம் பத்தல.. நீங்கவேற..//
இப்போ இடம் பிடிச்சு வைப்போம், பிறகு நேரம் கிடைக்கும் போது, வீடு கட்டிக்கலாம். :)
டிவிட்டரில் போட்டாச்சு!
ReplyDeletehappy about twitter......
ReplyDeletehappy new year...
அந்த மூன்று வரி வாசகம் மிக அருமை ....
ReplyDeleteஅந்த மூன்று வரி ஆட்டோ வாசகம் மிக அருமை .
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜபாண்டியன்.
ReplyDelete