Thursday, September 17, 2009

பெயரில்லாதவை !



இதே மாதிரி பிட், பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம்னு போன முறை (சில பல மாதங்களுக்கு முன்ன்ன்னாடி) கேட்டிருந்தேன் . நண்பர்களும் நிறைய பெயர்களை சொல்லி இருந்தீங்க. அனைவருக்கும் நன்றி, ஆனா "பெயரில்லாதவை" ங்கிற பெயரே நல்லா இருப்பது போல தோணுச்சா, அதையே தலைப்பா வச்சிட்டேன்.
**************************************


சமீபத்துல எனக்கும், மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும் நடந்த உரையாடல். 

நான் : குட்டி, உன் பனியன்ல உள்ள "யானை" பொம்மை சூப்பரா இருக்குடா.  
குட்டி : இது "யானை" இல்ல. குனிஞ்சு, குனிஞ்சு நடக்கும்ல அது, "ஒட்டகம்".  
நான் : இல்லடா, இது யானை மாதிரி தானே இருக்கு.  
குட்டி : ஒன்னுமில்ல, யானைனா வாய் பெருசா கீழ வரை தொங்கும் !
நான் : (வேறு வழியில்லாமல்) அப்போ, இது ஒட்டகம் தான்டா ! :):) :) 
**************************************

அப்புறம் சின்னதா ஒரு "பெயரில்லாதது" (கவிதைன்னு சொன்னாத்தான் அப்படியே "எஸ்கேப்" ஆகி ஓடிறீங்களே !


வாழ்க்கைப் பயணத்தின்
வழியோரமெல்லாம்
கவனிக்கப்படாமல்
பூத்துக் கிடக்கிறது,
வாழ்க்கை !
**************************************
ஒரு தடவை மேலோகத்துல நாரதர், மழைக் கடவுளான வருண பகவான்ட்ட போய்,
"சாமி, பூமில மனுசப்பயலுக எல்லாம், செழிப்பா சந்தோசமா இருக்கானுங்க. அதனால ஒரு பயலும் நம்ம நினைக்க மாட்றாய்ங்க. நீங்க கொஞ்ச நாளைக்கு மழைய நிப்பாட்டி வையுங்க, அப்ப தான் அவய்ங்களுக்கு நம்ம அருமை தெரியும்!" ன்னு சொன்னாராம்.  
அதுக்கு மழைக் கடவுளும், 
"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " அப்படின்னு சொல்லி மழைய நிப்பாட்டிட்டாரு. 
பூமில, வறட்சி வர ஆரம்பிச்சிருச்சு. விவசாயம் படுத்திருச்சு. கொஞ்ச நாள் கழிச்சு, சரி, மக்கள் எல்லாம் நம்ம நினைக்கிறாய்ங்களான்னு பார்க்க மழைக் கடவுள் மாறுவேசத்துல பூமிக்கு வந்தாரு.  
பார்த்தா, ஒரு குடியானவன் பாளம், பாளமா வெடிச்சு காஞ்சு போய் கிடக்குற நிலத்துல, ரெட்ட மாட்டு ஏர் பூட்டி உழுதுட்டு இருக்கான்.

கடவுளுக்கு ஒரே ஆச்சர்யம். இவனென்ன சரியான முட்டாப்பயலாவுல்ல இருக்கான்னு நினைச்சுட்டு,
"ஏய், இங்க பாருய்யா, உனக்கென்ன கிறுக்கா புடிச்சிருக்கு? பொட்டு மழை பார்த்து கொல்ல காலமாச்சு. இப்போ போய் புழுதிப் பிஞ்சயில இழுக்க மாட்டாம இழுத்து பாடா பட்டுட்டு இருக்க ?" 
அதுக்கு அந்த குடியானவன் பொறுமையா, 
"இல்லைங்கையா, எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அவன் என்னைக்கும் எங்களை கைவிட மாட்டான். சீக்கிரம் மழை வரும்ன்னு நம்பிக்கை இருக்கு " ன்னு சொல்லி கடவுள் மனசை குளிர்விச்சு, மழை பொழிய வச்சான்னு சொல்லி கதைய முடிக்கிறத விட.....  
அந்த குடியானவன், 
"நானாய்யா கிறுக்குப்பய? மழை பெய்ய வைக்க வேண்டியது மேல இருக்க கடவுளோட வேலை. அதை அவன் செய்ய மறந்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கான் போல. அதுக்காக நானும் எஞ்சிவனேன்னு உக்கார்ந்து இருந்தேன்னா, ஏர் பூட்டுற என் வேலை எனக்கு மறந்துறும், ஒழுங்கா ஏர் இழுத்தோட்டுற வேலைய என் மாடுகளும் மறந்துறும். மழை பெய்யுறப்ப பெய்யட்டும், நாங்களாவது எங்க வேலைய மறக்காம செஞ்சுட்டு இருக்கோம்." ன்னு தொடர்ந்து ஏர் ஓட்டுனானாம். அதைக் கேட்டு மாறுவேசத்துல இருந்த கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்ன்னு சொல்லி கதையை முடிச்சா யதார்த்தமா இருக்கும் தானே..... நீங்க என்ன சொல்றீங்க!
**************************************

வரும் ஞாயிறு (செப்டம்பர் 20, 2009) மாலை, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பதிவர் சந்திப்பு இருப்பதாக, நண்பர் கார்த்தி தொலைபேசி சொன்னார். அதோடு இது வழக்கமான "சும்மா, வந்தோம், பேசினோம், பவண்டோ சாப்பிட்டோம், போனோம்" சந்திப்பல்ல, முக்கியமான விசயம் இருக்கு, பிறகு சொல்றேன்" ன்னு பெரிய பிட்டா போட்டிருக்கார். கலந்து கொண்டு கைகோர்க்க ஆர்வமாக இருக்கிறேன். ("ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!)
**************************************

இப்போதைக்கு இவ்வளவு தான். உங்க கருத்துக்களையும் பின்னூட்டத்துல மறக்காம சொல்லுங்க !
நட்புடன்,
பாலகுமார்.

15 comments:

  1. பெயரில்லாதவை நல்லாத்தான் இருக்கு!!

    ReplyDelete
  2. ஓட்டுப் போட்டுவிட்டேன்!

    ReplyDelete
  3. நல்லா இருக்கு அண்ணே..

    ReplyDelete
  4. //"ஏதாவது செய்யனும் பாஸ்" தொடர்ச்சியா இருக்குமென்று நினைக்கிறேன் !!!//

    அப்படி ஏதும் இருக்குமோ?

    ReplyDelete
  5. //கடவுள் வெக்கப்பட்டு மழை பொழிய வச்சாராம்//

    அவங்கவங்க வேலைய அவங்கவங்க சரியா செய்யணும். கடவுளுக்கு மட்டும் விதிவிலக்கு குடுக்கலாமா :)

    நல்லா இருக்கு பெயரில்லாதவை

    ReplyDelete
  6. நன்றி தேவா சார்.

    நன்றி அன்பு.

    நன்றி தருமி ஐயா.
    (//அப்படி ஏதும் இருக்குமோ// ‍‍‍.... இருந்தாலும் இருக்கும், யாரு கண்டா :) ? )

    நன்றி சின்ன அம்மிணி.

    ReplyDelete
  7. சரி அது யானையா ஒட்டகமா

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா !

    அது ஒட்டகம் தான், நான் தான் சும்மா அவனை கலாட்டா பண்ண நினைச்சேன், அவன் என்னை மடக்கிட்டான். :)

    ReplyDelete
  9. வாழ்க்கைப் பயணத்தின்
    வழியோரமெல்லாம்
    கவனிக்கப்படாமல்
    பூத்துக் கிடக்கிறது,
    வாழ்க்கை !


    nice kavidhai..kavidhainu oththukurom......:) :)

    nice chattings with ur cousin...

    ReplyDelete
  10. வருகைக்கு நன்றி சத்யா !
    //nice chattings with ur cousin...//
    cousin இல்ல, cousin son .... :)

    ReplyDelete
  11. //"சரி தான், எனக்கும் இவிங்களுக்கு நல்லது செஞ்சு செஞ்சு போர் அடிக்குது. கொஞ்சம் விளையாட்டு காட்றேன் ! " //

    ஒரே காரியத்தை தொடர்ந்து செஞ்சா கடவுளுக்கும் போரடிக்கும் போல ... இப்படியே கடவுள் யோசனை பண்ணி ......சும்மா பூமியை சுத்தி கிடே இருக்க கை வலிக்குது கொஞ்சம் நிறுத்தி வேடிக்கை பார்க்கலாமா.....என்றெல்லாம் நினைக்க போகிறார் ...

    //மூன்று வயதாகும் எங்க அண்ணன் பையனுக்கும்//

    //cousin இல்ல, cousin son .... :) //

    cousin - என்றால் எத்தனை உறவுமுறையை தான் குறிக்கும் என்று யாரவது சொல்லுங்களேன்.. dictionary.reference.com பார்த்தால் எனக்கு தலை சுற்றுகிறது....

    //பெயரில்லாதவை ! //

    -க்கு பதிலா < > என்று தலைப்பு வைத்திருக்கலாம் .....எதாவது போட்டு fill பண்ணி நாங்க சந்தோஷ பட்டுக்கலாம்...

    இந்த வாட்டியும் பதிவர் சந்திப்பு பசங்களோட மட்டும் தானா ?......நீங்க வேஸ்ட் .......வலை (மனை) யில் மீன் பிடிக்க தெரியலை!!!

    -மதன்

    ReplyDelete
  12. //வாழ்க்கைப் பயணத்தின் வழியோரமெல்லாம்கவனிக்கப்படாமல்
    பூத்துக் கிடக்கிறது,
    வாழ்க்கை !//
    super.

    ReplyDelete
  13. நன்றி மதன் :)

    நன்றி ஸ்ரீ !

    ReplyDelete
  14. அன்பின் பாலகுமார்

    தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் - பெயரில்லாதவை - நல்லா இருக்கு - பல்வேறி சிந்தனைகளை ஒன்றாகத் திரட்டித் தந்தமை நன்று

    மழைக் கடவுள் கதை நல்லாவெ இருந்திச்சி

    பசங்க கிட்டே மாட்டிக்கிட்டா தப்பிக்க முடியாது ஆமா

    நல்வாழ்த்துகள் பாலகுமார்

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி சீனா ஐயா.

    ReplyDelete