தீபாவளி சிறப்பு பதிவிற்காக சீனா ஐயா அழைத்திருந்தார்.
அந்த பாக்கி பொங்கல் வரை நீளக்கூடாது என்பதற்காக, இப்போதே(?) என் பதில்கள்.
1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு ?
பாலகுமார் (பெரும் குறிப்பு, பின்னாளில் சொல்லுவோம்)
2)தீபாவளி என்றவுடன் உங்கள் நினைவிற்கு வரும் (மறக்க முடியாத) ஒரு சம்பவம் ?
தீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.. (வேற ஒன்னும் தோணலயே ! )
3)2009 தீபாவளிக்கு எந்த ஊரில் இருக்கிறீர்கள்/இருந்தீர்கள் ?
இதுவரை எல்லா வருடமும் மதுரை தான்.
4)தற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவளி பற்றி ஒருசில வரிகள் ?
மதுரை தீபாவளி பெரிய ஊர்த்திருவிழா...
முதல்நாள் இரவு நடைபாதை கடைகள்
மூனு பத்து ரூவா வியாபாரம்
புரோட்டா கடை கூட்டம்
புதுப்படம் தோரணம் கட்டுதல்
கருப்பு தீபாவளி போஸ்டர்கள்
திடீர் வெடி கடைகள்
அங்கங்கே தண்ணீ சலம்பல்கள்
..................................................................
மதுர மதுர தான்...
5)புத்தாடை எங்கு வாங்கினீர்கள் ? அல்லது தைத்தீர்களா ?
இந்த முறை சென்னையில் இருந்து தம்பி எடுத்து வந்தான். ஆயத்த ஆடை தான்.
6)உங்கள் வீட்டில் என்ன பலகாரம் செய்தீர்கள் ? அல்லது வாங்கினீர்கள் ?
கடையில் வாங்கினால் எப்போதும் அம்மாவிற்கு திருப்தி இருக்காது. என்வே கடையில் வாங்குனது போக வீட்டுல செஞ்சது... முறுக்கு, அதிரசம் சீவல், ஜாமுன், இன்னும் பல. (இந்த முறை தங்கைக்கு தலை தீபாவளி, அதனால் இன்னும் நிறைய ஸ்பெஷல் ஐட்டம் எல்லாம் இருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணத்தினால், தங்கையும் மாப்பிள்ளையும் வர முடியவில்லை, என்வே இந்த தீபாவளி ரொம்ப "டல்" தான்.)
7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) ?
இந்த வருடம், வந்த வாழ்த்துக்களுக்கு பதில் மட்டும் குறுஞ்செய்திகள் மூலமாக...
8)தீபாவளி அன்று வெளியில் சுற்றுவீர்களா ? அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உங்களைத் தொலைத்துவிடுவீர்களா ?
இந்த வருடம் வீட்டை விட்டு எங்கும் செல்லவில்லை, டி.வி. யும் பார்க்கவில்லை.
9)இந்த இனிய நாளில் யாருக்கேனும் ஏதேனும் உதவி செய்வீர்கள் எனில், அதைப் பற்றி ஒருசில வரிகள் ? தொண்டு நிறுவனங்கள் எனில், அவற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வலைத்தளம் ?
குறிப்பிடும்படி ஒன்றும் இல்லை.
10)நீங்கள் அழைக்கவிருக்கும் நால்வர், அவர்களின் வலைத்தளங்கள் ?
போதும், ரொம்ப நாளாச்சு.... அடுத்த வருடம் முன்னமே கூப்பிடுவோம். :)
நன்றி !
குறிப்பு 1) இது என் முதல் தொடர்பதிவு, அழைத்த சீனா ஐயாவிற்கு நன்றிகள் !
குறிப்பு 2) என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது, வாழ்த்துக்கள் ! (நான் எனக்கு சொன்னேன், எனக்கு சொன்னேன்.)
அன்பின் பாலகுமார்
ReplyDeleteஅருமையான இயல்பான பதில்கள் - தொடர்ந்ததற்கு நன்றி -
தங்கையின் தலை தீபாவளிக்கு - தங்கை குடும்பத்தினருக்கு நல்வாழ்த்துகள்
ஓராண்டு முடிவினிற்கும் நல்வாழ்த்துகள்
அன்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றி ஐயா !
ReplyDelete//தீபாவளி என்றவுடன் நினைவுக்கு வருவது தீபாவளி தான்.//
ReplyDeleteஎன்னா குசும்பு!
முதல் வருட வாழ்த்துக்கள்!
ReplyDeleteமதுரை வரும் போது ட்ரீட் கொடுக்கனும்!
முதல் வருடத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா..
ReplyDelete// வால்பையன் said...
ReplyDeleteமுதல் வருட வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு நன்றி வால்பையன்...
மதுரை வரும் போது ட்ரீட் கொடுக்கனும்! //
சரி, நீங்க இவ்வளவு பிரியப்படும் நான் வேணாம்னா சொல்லப் போறேன், தாராளமா ட்ரீட் கொடுங்க :)
// Anbu said...
முதல் வருடத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா..//
நன்றி அன்பு !
ayyo!!! .oru varusham aahiruchaa bala,nambavae mudiyalayae fastyaa poiruchae?
ReplyDeleteaama diwalikku veliya engayum pogama,tv paarkaama eppidi pozhuthu pochuthu?
maha
Really nice answers......
ReplyDeleteCongrats for finishing one year....
i wish you write more and more and wil get success in ur life....:)
வாழ்த்துகள் பாலகுமார்
ReplyDeleteஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துகள் பாலா
ReplyDelete// aama diwalikku veliya engayum pogama,tv paarkaama eppidi pozhuthu pochuthu?
ReplyDeletemaha //
சாப்பாடு, தூக்கம், சாப்பாடு, தூக்கம்,சாப்பாடு, தூக்கம்.......... :)
//சத்யா said...
Really nice answers......
Congrats for finishing one year....
i wish you write more and more and wil get success in ur life....:)//
நன்றி சத்யா !
//சொல்லரசன் said...
வாழ்த்துகள் பாலகுமார்//
நன்றி சொல்லரசன்
// கார்த்திகைப் பாண்டியன் said...
ஒரு வருட நிறைவுக்கு வாழ்த்துகள் பாலா//
நன்றி கார்த்தி !
//மதுர மதுர தான்..//
ReplyDelete"இங்கே எல்லாத்துக்குமே famous தான் "
//என் வலைப்பதிவு துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது//
பிறந்த நாள் வரிசையில் வலைப்பூ பூத்த நாளும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதுதான்
போல ....இந்த வருடத்திற்கான வாழ்த்துக்கள் !!!.......ஓராண்டிற்குள் "கல்கி" யில் பதிந்து சென்ற இத்தளம் வரும் நாட்களில் இன்னும் நிறைய மனங்களிலும் பதிவு பெற்று மணம் வீசட்டும்...
-மதன்
//பிறந்த நாள் வரிசையில் வலைப்பூ பூத்த நாளும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டியதுதான்
ReplyDeleteபோல ....இந்த வருடத்திற்கான வாழ்த்துக்கள் !!!.......//
நாங்களே வருடாவருடம் ஒரு பதிவு போட்டு ஞாபகப்படுத்துவோம்ல !:)
முதல் வருட வாழ்த்துக்கள்!
ReplyDelete