Friday, April 29, 2011

பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !


நிறைசூலி ஆட்டை
தின்னக் கேட்கும் சுடலைமாடன்

ஐந்தாம் நாளாய் 
நிற்காத உதிரப்போக்குடன் புதுப்பெண்

வாரிச் சுருட்டி எழும் முன் 
நின்று போகும் நடுநிசி தொலைபேசி அழைப்பு

ஈனும் முதல் குட்டியை
மருந்தாய்க் கொள்ளும் ஒரு விலங்கினம் 

பொருந்தாக் காம அலைக்கழிப்பை
அழிக்கப் போராடும் மேன்சன்காரன்

சுருதி தப்பி ஒலிக்கும் 
ஒருமணி உதிர்ந்த சலங்கை

தற்கொலைக்கு தைரியமில்லாதவனின்
உயிர்க்கொல்லி நோய்

சிறகொடிந்த பட்டாம்பூச்சியை 
கொத்தி விளையாடும்
சிறகொடிந்த கரிச்சான் குருவி

பாவிகளை பிடித்து வைத்து தன்
பிரதாபங்களை பட்டியலிடும்
பரிசுத்த புது ஆவி

இதிலொன்றை கேட்டுப் பெற துணிவின்றி
பொருத்தமற்ற ஏதோவொரு தலைப்பை
விருப்பமின்றி தாங்கி நிற்கும்
பொருளற்ற இந்த கவிதை !

படம் உதவி : இணையம்

13 comments:

  1. ரொம்ப கஷ்டம் தாங்க....

    என்ன சிந்தனை...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  2. ஒவொன்ட்றோடு ஒன்று பொருந்தாவிட்டாலும் ஒவ்வொரு இரு வரிகளிலும் அர்த்தம் இருக்கிறது...


    அருமை.................

    ReplyDelete
  3. "பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பு !"

    ReplyDelete
  4. அன்பு பாலகுமார்,

    நல்லாயிருக்கு கவிதை...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  5. ஆழமான,அர்த்தமுள்ள கவிதை..!!

    ReplyDelete
  6. பொருந்தாமல் நிற்கும் இந்த தலைப்பின் அர்த்தம்,
    அனைவரின் உள்ளத்திலும் பொருந்தி நிற்கிறது . அருமை பாலா .

    ReplyDelete
  7. i couldnt understand bala
    maha

    ReplyDelete
  8. Sweet Vs Spicy
    This Vs That

    -Madhan

    ReplyDelete
  9. அன்பின் பாலா - கவிதை அருமை - தலைப்பும் முடிவும் அருமை - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  10. அன்பின் பாலகுமார் - டெர்ரர் கும்மிப் போட்டிகலீல் முதல் பரிசு வென்றமைக்குப் பாராட்டுகள் -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. பரிசுக்கு வாழ்த்து

    ReplyDelete