Tuesday, April 26, 2011

கடவுளும் தேர்தலும் !



கடவுள் இறந்த பிறகு தான்
அடுத்த கடவுளுக்கான
தேவையும் தேர்தலும் துவங்கியது.

துணைக் கடவுள் முதல்
துவார பாலகர் வரை
அனைவருக்கும் போட்டி.

கஜானாவை காவல் 
காத்தவருக்குத் தான்
வெற்றி வாய்ப்பென்று கருத்துக் கணிப்பு.
காரியதரிசிக்கும், கொள்கை பரப்புச் செயலருக்கும்
உடன்பாடாகி விட்டதாகவும் ஒரு பேச்சு.

பேசாமல் பழைய கடவுளே
தன் மச்சானையோ ஒன்று விட்ட
சித்தப்பா பையனையோ
அடுத்த கடவுளென
சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

எவ்வளவு நேரம் தான்
காப்போன் இல்லாமல்
கலங்கி நிற்கும் மந்தை !

***

6 comments:

  1. nice comparision..


    thookathula kooda therthal ninaippu thaan...... :) :)

    ReplyDelete
  2. சரியான லேபிளுடன் அழகாக வகைப்படுத்தியிருக்கிறீர்கள்.... "நிதர்சனம்"!!!
    எளிமை..... அருமை!! :-)
    மனமார்ந்த வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  3. செத்தும் கொடுத்தான் சீதக்காதி மாதிரி தான் செத்து உங்களை எழுத வச்சாரு பாருங்க பாலா.. அவ்வ்வ்வ்..

    ReplyDelete
  4. நன்றி பிரகாஷ்.

    நன்றி சத்யா.

    நன்றி தருமி ஐயா, yes :)

    நன்றி பிரபு.

    நன்றி கார்த்தி. ம்ம்ம் :) ஜெய் பாபா !

    ReplyDelete
  5. அன்பின் பாலா - நல்ல நேரத்தில் எழுதிய பதிவு - எவ்வளவு நேரம் தான் காப்போன் இல்லாமல் கலங்கி நிற்கும் மந்தை - உவமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete