சார், என்னைத் தெரியுதா சார். நல்லாப் பாருங்க, நாம ஏற்கனவே பலமுறை சந்திச்சு இருக்கோம். சார், கண்டுக்காத மாதிரி போறீங்களே !
சின்ன வயசுல, உங்க வீட்டு மொட்டை மாடில நாம விளையாடிட்டு இருக்கும் போது, அந்த பெரிய ரயில் பொம்மையைக் கொண்டு வந்தானே.... எம்ம்ம்ம்மாம் பெரிய ரயில். அதை நம்மகிட்ட காட்டி, காட்டி வம்பிழுத்தானே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே அதை ........... நல்லா இருந்துச்சுல்ல அன்னைக்கு. இப்போ ஞாபகம் வருதா உங்களுக்கு !
அஞ்சாம் வகுப்புல போயி யாராவது வாட்ச் கட்டிட்டு வருவாங்களா சார். அவுங்க அப்பா வெளிநாட்டுல இருந்தாருன்னா, அந்த குட்டையனும் அங்கயே போய் இருக்க வேண்டியது தானே. சும்மா, சும்மா வாட்ச்சை காட்டி பிகு பண்ணிட்டே இருந்தா கோவம் வரத்தானே செய்யும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கனும்னு தானே நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வாட்ச்சை .......... டீச்சர் க்ண்டுபிடிச்சவுடன் என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு நீங்க ஓடிட்டீங்களே, சார். அது கூட உங்களுக்கு மறந்துடுச்சா !
சார், கல்லூரி சமயத்துல கூட, நாம ஒரே ரூம்ல தானே தங்கி இருந்தோம். அப்போ நாம என்ன என்ன பண்ணோம்னு சொன்னா ....... வேணாம் சார், விடுங்க ...... அதெல்லாம் இல்லாம எப்படி ? அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனா ஒவ்வொரு தடவையும் நீங்க பயந்து, பயந்து சாவீங்க, நான் மனசுக்குல்ல நல்லா சிரிச்சுக்குவேன். இப்போ நீங்க பேசுறதையெல்லாம் பார்க்கும் போது, அது நீங்க தானான்னு லைட்டா டவுட்டு கூட வருது சார் !
ஒரே ஒரு தடவை தான், எப்படி இருக்குனு மட்டும் பார்த்துட்டு வந்துருவோம்னு சொல்லி சொல்லியே யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போவீங்க. எனக்கு நல்லா பழக்கப்படுத்தி விட்டுட்டு, இப்போ நீங்க பொண்டாட்டி, புள்ள குட்டின்னு செட்டில் ஆகீட்டீங்க. ஆனா, என்னால இன்னும் அதை விட முடியல தெரியுமா !
சார், நீங்க பெரிய ஆளு சார், எப்போ பார்த்தாலும் பெரிய பெரிய ஆளுங்களோட தான் சுத்துறீங்க, பெரிய பெரிய அட்வைஸ் எல்லாம் சொல்றீங்க. ஆனா பாருங்க, எப்பவும் உங்க கூடவே இருக்குற என்னை மட்டும் அவுங்க முன்னாடி கண்டுக்கவே மாட்றீங்க. அது சரி, பெரிய ஆளுங்க பேச்சைக் கேட்டா மட்டும், எனக்கென்ன புரியவாப் போகுது !
உங்க மேல, எனக்கு ரொம்ப வருத்தம் சார். நீங்க கூப்பிட்டு தானே, நான் அன்னைக்கு நைட்டு உங்க கூட அங்க வந்தேன். சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !
எல்லாமே, ரெண்டு பேரும் சேர்ந்து தானே சார் செஞ்சிட்டு இருக்கோம். பின்ன எப்படி நீங்க மட்டும் என்னைத் தெரியாத மாதிரி பாவ்லா பண்ணிட்டு, இராத்திரியானா நிம்மதியா தூங்குறீங்க ..... நான் உங்க குறட்டை சத்தத்தைக் கேட்டு தூக்கம் வராம தவிச்சிட்டு இருக்கேன். இப்போக் கூட பாருங்க, யாருக்கோ கதை சொல்ற மாதிரி, நீங்க பாட்டுக்கு சுவாரஸ்யமா படிச்சிட்டு இருகீங்க. எனக்கு தான் சார், நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு மண்டைக்குள்ள எறும்பு போன மாதிரி ஊறிட்டே இருக்கு !
Puriyuthu aana puriyala.... :(
ReplyDeleterealy very nice but in the end something is confusing.........
ReplyDelete//சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !///
ennga pa.........
புரியுது ஆனா புரியலை...
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துக்கள் அண்ணா..
ReplyDeleteஉரையாடல் கதை பத்தி எனக்கு எந்த விஷயமும் தெரியாது.
ReplyDeleteஆனா படிக்க நல்லா இருந்தது. நாம எல்லாருக்கும் ரெண்டு முகம் கண்டிப்பா இருக்கும். பார்க்கவே கேவலமா இருக்கிற முகம்தான் சில நேரங்களில் நம் உண்மையான முகமாக இருக்கிறது. தனித்து இருப்பவர்களின் இரவு மட்டுமல்ல எல்லா பொழுதும் நிம்மதி இல்லாமல்தான் இருக்கிறது. எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவ மாதிரி நடிக்கிறது !!! ஆனா ஒன்னு என்ன மொள்ளமாரித்தனம் பண்ணினாலும் ,எனக்கு நல்லா தூக்கம் வரும் மனசும் சேர்ந்து தூங்குற ஆழ்ந்த உறக்கம்.
ஆமா ஒரு விஷயம் கேக்கணும் இந்த சமுக கலை அமைப்பு நடத்துற போட்டிக்கு எல்லாம் இந்த மாதிரி சுத்தி வளைத்துத்தான் கதை எழுதனுமோ பாலா ? சும்மா கேட்டேன் !!!
உரையாடல் கதை பத்தி எனக்கு எந்த விஷயமும் தெரியாது.
ReplyDeleteஆனா படிக்க நல்லா இருந்தது. நாம எல்லாருக்கும் ரெண்டு முகம் கண்டிப்பா இருக்கும். பார்க்கவே கேவலமா இருக்கிற முகம்தான் சில நேரங்களில் நம் உண்மையான முகமாக இருக்கிறது. தனித்து இருப்பவர்களின் இரவு மட்டுமல்ல எல்லா பொழுதும் நிம்மதி இல்லாமல்தான் இருக்கிறது. எவ்வளவு நாளைக்குத்தான் நல்லவ மாதிரி நடிக்கிறது !!! ஆனா ஒன்னு என்ன மொள்ளமாரித்தனம் பண்ணினாலும் ,எனக்கு நல்லா தூக்கம் வரும் மனசும் சேர்ந்து தூங்குற ஆழ்ந்த உறக்கம்.
ஆமா ஒரு விஷயம் கேக்கணும் இந்த சமுக கலை அமைப்பு நடத்துற போட்டிக்கு எல்லாம் இந்த மாதிரி சுத்தி வளைத்துத்தான் கதை எழுதனுமோ பாலா ? சும்மா கேட்டேன் !!!
"ஏற்கனவே நான் ரொம்ப குழப்பத்துல இருக்கேன்" (கவுண்டமணி style-l வாசிக்கவும்) ...என்ன பாசு நீங்களுமா சேர்ந்து என்னை குழப்புறீங்க .....
ReplyDeleteசத்யா சொல்றது சத்யமா ரொம்ப சரி.....
//Puriyuthu aana puriyala.... :( //
போதாத குறைக்கு isakki வேறு,
//எல்லாருக்கும் ரெண்டு முகம் கண்டிப்பா இருக்கும். பார்க்கவே கேவலமா இருக்கிற முகம்தான் சில நேரங்களில் நம் உண்மையான முகமாக இருக்கிறது. //
அட .. ங்கப்பா !!
இருந்தாலும் isakki சில நல்ல விசயங்களை சொல்லி இருப்பது பாராட்டுக்குரியது...
உ-ம்:
//ஆனா ஒன்னு என்ன மொள்ளமாரித்தனம் பண்ணினாலும் ,எனக்கு நல்லா தூக்கம் வரும் மனசும் சேர்ந்து தூங்குற ஆழ்ந்த உறக்கம். //
//ஆமா ஒரு விஷயம் கேக்கணும் இந்த சமுக கலை அமைப்பு நடத்துற போட்டிக்கு எல்லாம் இந்த மாதிரி சுத்தி வளைத்துத்தான் கதை எழுதனுமோ பாலா ? சும்மா கேட்டேன் !!! //
நல்லா கேட்ட.....
பார்த்தீங்களா! , மெயின் மேட்டர் கமெண்ட் பண்றதா உட்டுட்டு "comments" மட்டும் கமெண்ட் பண்ண ஆரம்பிச்சுட்டேன் ( அவ்வளோ confusion)
பேசாம நீங்க இந்த உரையாடல் கதைக்கு ஒரு கோனார் நோட்ஸ் போட்ருங்க சித்தப்பூ ... அடியேனுக்கு புரியுதான்னு பார்க்கலாம்....இல்லன்ன இந்த கதைய படிச்சுட்டு என் புத்தி கெட்ட கெட்ட தாக யோசிக்க ஆரம்பிக்குது...(உ-ம்: // //சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !/// ...//ennga pa.........//)
சரி ஏதோ சொல்ல வரீங்க..
"உரையாடல்" வெற்றி பெற வாழ்த்துக்கள் !
-மதன்
correct madhan....thanks....
ReplyDelete// //சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !///
enga ninnuttu irukaanganu theriyala...
ellaarukkum puriyura madhiri kadha ezhuthuna innum nalla irunthurkkum..
but onnu puriyuthu..
everybody has two sides of faces...
one side is wrong another one is good..aana manasatchi sirikkuthu indha kadhila......puriyuthu but puriyala..:-)..ellaarudaiya manasaatchiyum avaravargal velai seiyum podhu,thaniththu irukkum iravil nammai ezhuppividum ennangalai kadha madhiri solla vanthurukeenganu puriyuthu aana puriyala...:-)..
///பேசாம நீங்க இந்த உரையாடல் கதைக்கு ஒரு கோனார் நோட்ஸ் போட்ருங்க சித்தப்பூ ... ///
ReplyDeleteகண்டிப்பா கோனார் நோட்ஸ் தேவை தான் brother.......
itha padikkum bothu neraiya perukkulla vitha vithamana sinthanaigal varum ithu athuva irukkuma illa vera enna mean panirukanga, ennane theriyama avanga avanga arivukku thaguntha maari situations varum athu positivavum irukkalam, negativavum irukalam aana ellaraiyum confuse panni think panna vechirukka.
ReplyDeleteyaruvenalum enna venalum fill panikalam andtha gapla avangaloda puthikku thaguntha maari. yellorum antha gapla unmaiyah mattum eluthina comments um sari "uraiyadalum" sari padikara maari irukathu ennaiyum serthuthan :).
aana naan nenachen kadaisila Thodarum..... nu serial la vara maari vechiruppennu :)
appadi yethavathu irukku, realla ennatha nadanthuthunnu parkka.
Oru nanbanin nalla uraiyadal.
Hello Mathan sir,
ReplyDeleteNeenga thamil naadu thana illa bordera kadaikke konaar thamil urrai ketkareenga :(
பாலா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு புரிஞ்சுக்க.
ReplyDeleteThanks Sathya!
ReplyDelete//ellaarudaiya manasaatchiyum avaravargal velai seiyum podhu,thaniththu irukkum iravil nammai ezhuppividum ennangalai.....//
அப்ப எல்லோரும் மனசாட்சியை கழட்டி வச்சுட்டு வேலை செய்றாங்கன்னு சொல்ல வரீங்கள ....??????......இல்ல நீங்க சொல்ல வர்றது புரியுது ஆனா புரியலை :)
Hello tamilarasi madam,
நான் பிறந்தது தமிழகத்து கேரளா எல்லையில்.....பணிபுரிவது கர்நாடகத்து தமிழக எல்லையில்....
//yaruvenalum enna venalum fill panikalam andtha gapla avangaloda puthikku thaguntha maari.//
ரொம்ப சரியா சொன்னீங்க....
Bala, Try something more...v r awaiting...
-மதன்
silathu manasatchi solra padi nadakkathu..silathu manasatchi poorvama seivom atha than sonnen..but neenga ippadi comment ku ellam meaning keka koodathu..:) [enake remba yosika vendi irukkula? :) :)]
ReplyDeleteur thougts r fine Sathya!
ReplyDeleteBut "manasatchi" -kku pathil "manasu/mana" pottu paarthaal thaan meaning sariyaga varuvathaga ninaikkiren....
romba ethaiyum yosikka vendam...etuthen kavizhthen endrum mutikka vendam....(By sumarana thaththuvagnani)
Bala, what abt the result for "uraiyadal" competition?
-Madhan
அனைவருக்கும் மிக்க நன்றி, நண்பர்களே !
ReplyDeleteresult will be around first week of august....
romba ethaiyum yosikka vendam...etuthen kavizhthen endrum mutikka vendam....(By sumarana thaththuvagnani)
ReplyDelete:-) :)
//பாலகுமார் said...
ReplyDeleteresult will be around first week of august....//
enna result vanthacha..............