Monday, January 10, 2011

டிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்கும் கொஞ்சம் பொசியுமாம்


அட! வீரர்களையெல்லாம் யார் ஏலம் எடுத்தா நமக்கென்ன, எந்த நடிகையை எந்த டீம் ஓனர் எடுத்திருக்கார் ஏலம், அதைச் சொல்லுங்க முதல்ல. #IPL4

வெங்காய வடைக்கு முட்டைக்கோஸை பயன்படுத்தலாம் என்று கண்டறிந்த அறிஞன் இந்நேரம் எந்த டீக்கடை முன் வடை போட்டுக் கொண்டிருப்பான். #ஆ!னியன்

பிளைன் பிரியாணிக்கு தயிர் வெங்காயமின்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் இக்கட்டான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் #ஆ!னியன்

ஏதாவது கேட்க வேண்டுமேயென கேட்கப்படும் கேள்விகளுக்கு, ஏனோ தானோவென்று சொல்லும் பதில்களே போதுமானதென்று வைத்திருக்கிறேன்.

எழுந்து போய் படுத்துத் தூங்க அலுப்புப் பட்டு, அரைமணி நேரமாய் சும்மா கணினி முன் உட்கார்ந்திருக்கும் பழக்கம் எனக்கு மட்டும் தானா? #இரவு2மணி

உங்களை மகாத்மாவாய் நிறுவ யுகம்யுகமாய் நீங்கள் செய்த தவமெல்லாம் என் ஒற்றை அவச்சொல்லில் கலையுமென்றால், சாபம் எனக்கா, உங்களுக்கா?

கேப்டனுக்கு அப்படிஎன்ன வயசாயிடுச்சு?ஏன் ஹீரோயின்,டூயட் இல்லாம நடிச்சார். மனசுக்கு ரொம்பசங்கடமாயிருக்கு #சதுரகிரி..மதுரகிரி.ச்சீ.விருதகிரி

நீ எப்படி என்னைப்போலவே இருக்கவேண்டும் என எடுக்கும் வகுப்புகளில், நான் நானாக இல்லாத சமயங்களை வேண்டுமென்றே சொல்லாமல் விடுகிறேன் #தாம்பத்யம்

சுருங்கச் சொல்லுதல் குறித்து எழுதிய ஒரு ட்விட் 140 எழுத்துகளுக்குள் அடங்க மறுக்கிறது. என்ன செய்ய?

யாரைப் பற்றியும் அக்கறை இல்லை என்று சொல்பர்கள் தான் எல்லாரும் தம்மை கவனிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.  
#படித்ததில் பிடித்தது. நன்றி. கா.பா.

"நந்தலாலா மோசமான படம்,ரசித்தவர்களெல்லாம் மடையர்கள்.இதுதான் என் பெஸ்ட்" என இயக்குனர் தன் அடுத்த படத்தை விளம்பரப்படுத்தும் நாளும் சீக்கிரம் வரும் தானே!

இறைவா! நேர்மையில்லாத அல்லக்கைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று, திறமையில்லாத எதிரிகளை நானே விலக்கிக் கொள்கிறேன். #முடியல்ல‌

அண்ணாந்து பார்க்கின்ற ஐ.டி. பில்டிங் பக்கம், தம்மடிக்க சின்ன பெட்டிக்கடை இருக்கும்... சிங்காரச் சென்னையை போற்றுகிறேன்.

தன்னை தாண்டிச் செல்லும் இருசக்கரவாகனப் பெண்னை துரத்தி ஓவர்டேக் செய்து, பின் கண்ணாடிவழி பார்ப்பவன் வீட்டில்போய் நிச்சயம் பெண்ணியம் பேசுவான்.

கால்பந்தாட்டம் போல ஆளாளுக்கு உதைக்கிறார்கள்.சரி,வெற்றியோ தோல்வியோ 2மணிநேரத்தில் முடித்துவிட்டால் எவ்வளவுநல்லாயிருக்கும் இந்தமீட்டிங்கும்

தீபாவளி முதல் நாள் - பலர் லீவு போட்டு வீட்டில் முறுக்கு சுற்றுகிறார்கள், மீதி சிலர் அலுவலகத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு ஊர் சுற்றுகிறார்கள்.

என்னைப் போல் இவர்கள் என்று ட்விட்டர் சிலரைக் காட்டுகிறது. வேணாம் மிஸ்டர் ட்விட்டர் நான் ஒன்னும் அப்படிப்பட்ட ஆளில்லை.

நினைவிலிருந்து மறந்தவர்களைத் தேடிப்பிடித்து அழிக்கும் விளையாட்டு காத்திருக்கிறது. மொபைலில் தொடர்புகள் பதிந்தது 1000 தொட்டு நிரம்பிவழிகிறது

புதிதாய் பழகநேர்கையில் பெரியவர்கள் இயல்பாகவே இருப்பதில்லை.ஒன்று ஹாய்மச்சி என துள்ளிவிளையாடுகிறார்கள் இல்லை 'அந்த காலத்துல' என ஆரம்பிக்கிறார்கள்

13 comments:

  1. டைட்டிலே ஒரு சூப்பர்ஹிட் ட்வீட்!!

    ஒவ்வொன்றும் செம பஞ்ச்....

    அப்புறம் வாழ்த்துக்கள்!!! :)) பதிவுக்கல்ல...
    கேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))

    ReplyDelete
  2. எல்லாம் நல்லா இருக்குதுங்க

    ReplyDelete
  3. அருமை அருமை ,அத்தனையும் அருமை.:-))))))))))))))))))))))

    ReplyDelete
  4. எல்லாமே கலக்கல் பாலா.. டைட்டில் டபுள் கலக்கல்..

    ட்விட்டர் + பஸ்ஸ் + ப்ளாக்
    ஒரே கல்லில் மூணு மாங்காய்???

    ReplyDelete
  5. //பிளைன் பிரியாணிக்கு தயிர் வெங்காயமின்றி ஊறுகாய் தொட்டு சாப்பிடும் இக்கட்டான காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் #ஆ!னியன் //

    தாகத்திற்கு "பாட்டில்" தண்ணி (AQUA) வாங்கியதிலிருந்தே இந்த "இக்கட்டான காலகட்டம்" துவங்கி விட்டது .....என்ன செய்ய...

    தூள் ட்விட்டுகள் !!!

    -மதன்

    ReplyDelete
  6. /கேப்டனுக்கு அப்படிஎன்ன வயசாயிடுச்சு?ஏன் ஹீரோயின்,டூயட் இல்லாம நடிச்சார். மனசுக்கு ரொம்பசங்கடமாயிருக்கு #சதுரகிரி..மதுரகிரி.ச்சீ.விருதகிரி//

    அதான..:)))
    எல்லாமே நல்லா இருந்தது...:)))

    ReplyDelete
  7. \\பிரபு எம் said...
    அப்புறம் வாழ்த்துக்கள்!!! :)) பதிவுக்கல்ல...
    கேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))\\

    என்ன நடந்துச்சுன்னு தெரியாமலேயே,நானும் வாழ்த்துகள்!
    :-)

    ReplyDelete
  8. ayyo ennachu bala ,ethanai thadavai padichathayae padikkirathu
    maha

    ReplyDelete
  9. //\\பிரபு எம் said...
    அப்புறம் வாழ்த்துக்கள்!!! :)) பதிவுக்கல்ல...
    கேள்விப்பட்டேன் ;-) மிக்க மகிழ்ச்சி :))\\

    என்ன நடந்துச்சுன்னு தெரியாமலேயே,நானும் வாழ்த்துகள்!
    :-)//

    நானும் கேள்விட்டேன்.. வாழ்த்துக்கள் பாலா ;-)

    ReplyDelete
  10. எல்லாம் நல்லா இருக்குதுங்க

    ReplyDelete
  11. பொசிந்த நீரில் த்ழைக்கும் ப்யிர் அருமை.

    ReplyDelete
  12. http://blogintamil.blogspot.com/2011/06/3.html

    தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.

    ReplyDelete
  13. ஆகா தலைப்பு நல்லா இருக்கு - ஒவ்வொரு ட்வீட்டுமே தூள் - சூப்பரா எழுதறீங்அக் பாலா - நட்புடன் சீனா

    ReplyDelete