Wednesday, January 13, 2010
இந்த பொங்கலுக்கு......
இந்த பொங்கலுக்கு,
ஃப்ளாஷ் ப்ளேயரில் விர்சுவல் விநாயகருக்கு,
எலியை சுட்டி தேங்காய் உடைப்போம்.
குக்கரின் மூன்றாம் விசிலை
குலவையென நினைத்து
பொங்கலிட்டு கொண்டாடுவோம்.
இலவச எஸ்.எம்.எஸ் தீரும்வரை
வாழ்த்துகளை பெருந்தன்மையுடன்
ஃபார்வேர்டு செய்வோம்.
உலகத் தொலைக்காட்சியில்
முதன்முறையாக
மசாலா படம் ரெண்டோ, மூன்றோ
தவறாமல் பார்த்து ரசிப்போம்.
கடைசியாக......
அல்காரிதம் எழுதி,
அரிசி செய்யும் நாள்
வரும் வரையில்.
இன்னும்...
சுழன்றும் ஏர் பின்னி
உழன்று கொண்டிருக்கும்
எம் உழவர்க்கு
கொஞ்சம்
மனதோரம் நன்றி சொல்வோம்.
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா சொன்னீங்க....
ReplyDeleteஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
வோம்.. வோம்...
ReplyDeleteஇனிய பொங்கல், பூரி, இட்லி, வடை, சாம்பார் வாழ்த்துக்கள் தலைவா! :-)
Wish u very Happy Pongal.... :)
ReplyDeleteபொங்கல், தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeleteஅன்பின் சோலை அழகுபுரம் பாலா - இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
ReplyDeleteசங்கவி, கலையரசன், ஸ்ரீ, சத்யா , திகழ், சீனா ஐயா - வருகைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
Wish u very Happy Pongal.......
ReplyDeleteநாம் எப்போதும் இப்படித்தான்.பழம்பெருமை பேசி இருந்தோம் . பழம்பெருமை நினைத்து இருந்தோம். பழம்பெருமை மறந்தவரை விமர்சிப்போம். நாம் எப்பவும் இப்படித்தான் என் தோழா. கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDelete//அல்காரிதம் எழுதி,
ReplyDeleteஅரிசி செய்யும் நாள்
வரும் வரையில்.
//
கம்ப்யூட்டரில் கத்திரிக்காய் விளையுமா தலைவா .....
அதுவரை "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"
-மதன்