ஃபேஸ்புக் “வாலில்” அவ்வப்போது கிறுக்கியவற்றை வரலாற்றில் செதுக்கும் முயற்சியாக இங்கேயும் பதிந்து வைக்கிறேன்.
**************************************
”செம்பதிப்பு” என்பது கெட்டி அட்டை போட்டு இரண்டு மடங்கு விலை வைத்து விற்பது.
#புத்தகச்சந்தை
**************************************
முத்லல ‘பிரதி’யின் மரணம்னு ஆரம்பிச்சாங்க. அப்புறம் ஆசிரியரை சாகடிச்சாங்க. அந்த வரிசைல இப்போ நாம புதுசா ஒன்னு ஆரம்பிக்கிறோம் “வாசகனின் மரணம்” னு. பாதி படிக்கும் போதே கிழிச்சுத்தூர எறியனும்னு நினைக்கிறவனெல்லாம் ரத்தம் கக்கி சாவான்னு முன்னுரைலயே சொல்லீறோம்.
#போஸ்ட்மார்ட்டமிசம்
**************************************
நம்பிக்கை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பாராமல் பெய்யும் ஒரு பெருமழையும், பருவமழை பொய்க்கும் பொழுதுகளில் எதிர்பார்ப்புடன் செய்யும் கடவுளுக்கான ஒரு பலியும் எங்களை நகர்த்திக் கொண்டு செல்கின்றன.
**************************************
சொல்லிவிட்டு செய்தால் மொழிபெயர்ப்பு, சொல்லாமல் செய்தால் படைப்பு.
#இதுதானாய்யா இன்றைய இலக்கியம் ?
**************************************
கொஞ்சம் வயது முதிர்ந்த முற்போக்குவாதிகளிடம் எனக்கு எப்போதும் கொஞ்சம் பிரச்சனை. “சார்” என்று அழைத்தால், ஆங்கில ஏகாதிபத்யத்தில் ஆரம்பித்து வட அமெரிக்கா, கியூபா வழியாக ரஷ்யா, சீனா வரை செல்கிறார்கள்.
ஒருவரை வாய் தவறி ஒருமுறை “தலைவரே!” என்று அழைத்து விட்டேன். அவ்வளவு தான் சினம் கொண்டு சீறி எழுந்து, தமிழனின் அடிமை குணம் என்றுமே மாறாது என கழுவிக் கழுவி ஊற்றிவிட்டார்.
சரி, பெயர் சொல்லி அழைக்கலாம் என்றால் வயதில் மூத்தவரை பெயர் சொல்லி அழைப்பது அழகா என்று மடக்குகின்றனர். ”அண்ணா” என்று அழைக்கலாம் என்றால் ஒரு அரை மணி நேரத்திற்குக் குறையாமல் சமத்துவ லெக்சர் அடிக்கிறார்கள்.
ம்ம்ம்... வேறு வழியில்லை, அப்படி கூப்பிட வேண்டுமென்று தான் அவர்கள் விரும்புகிறார் போலும். எனக்குத்தான் ஒரே கூச்சமாக இருக்கிறது, இருந்தாலும் தம் பிடித்து சிரிக்காமல் சொல்லி விட வேண்டியது தான், “வணக்கம் தோழர்!”
**************************************
மதுரை - இந்த நகரம், தோளில் கை போட்டு அழைத்துச் செல்லும் ஆத்ம நண்பனைப்போன்ற அருகாமையைத் தருகின்றது. இந்த ஈர்ப்பினால் தானோ என்னவோ எந்த வெளியூர் பயணத்தின் போதும் ஒரு அந்நியத்தன்மையும், பாதுகாப்பின்மையும் தானே குடிகொண்டு விடுகிறது.
#மதுரையைச் சுற்றிய கழுதை வேறெங்கும் செல்லாது.
**************************************
கற்காலத்தின் ஒரு பிரதேசத்தில் அரை மணி நேரம் மின்சாரம் வருகிறது, அடுத்த ஒரு மணி நேரம் நிறுத்தப்படுகிறது. இந்த சுழற்சி தொடர்ந்தால் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் மின்சாரம் இருக்கிறது என்று கணக்கிடவும்?
#பொதுஅறிவுகேள்வி
**************************************
"மாப்பு" என்று எல்லா வயதினரையும் அழைக்கலாமே ! (சிறியவர்கள் என்றால் "மாப்பிள்ளை" என்றும் , பெரியவர்கள் என்றால் "அப்பு - அய்யா " என்றும் பொருள் என்று உடான்சு விட்டு கொள்ளலாம்)
ReplyDelete"மதுரை பாராதவன் கழுதை" என்று முன்பு ஒரு வழக்கு மொழி இருந்ததாம்....மதுரை-யை பார்த்து கொண்டே இருந்தால் "கழுதை" ஆவார்களா என்ன ? (இப்போதைக்கு மதுரை இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியலும் நடக்காது , தமிழ் சினிமா-வும் போணியாகாது)
-மதன்