Tuesday, October 16, 2012

தற்கொலை - மொழிபெயர்ப்பு கவிதை

தற்கொலை
- ஜோர்ஜ் ஃபிரான்சிஸ்கோ இசிடொரொ லூயி போர்ஹே.

இரவில் ஒரு விண்மீனும் எஞ்சியிருக்காது
ஏன் இரவே கூட எஞ்சியிருக்காது.
நான் இறப்பேன், என்னுடன்
சகிக்கவியலாத இந்த மொத்த
பிரபஞ்சமும் இறக்கும்.
நான் பிரமிடுகளையும், நாணயங்களையும்
கண்டங்களையும், 

அனைத்து முகத்தோற்றங்களையும் அழிப்பேன்.
நான் வரலாற்றினை தூசியாக்குவேன்,
தூசியிலும் தூசியாக.
நான் இப்பொழுது
கடைசி சூரியமறைவை உற்று நோக்குகிறேன்.
கடைசிப்பறவையின் குரலைக் கேட்கிறேன்.
நான் எனது வெறுமையை ஒருவரிடமும்
விட்டுவிட்டுச் செல்லவில்லை.

(தமிழில் - வி.பாலகுமார்)

The Suicide
- Jorge Francisco Isidoro Luis Borges

Not a star will remain in the night.
The night itself will not remain.
I will die and with me the sum
Of the intolerable universe.
I’ll erase the pyramids, the coins,
The continents and all the faces.
I’ll erase the accumulated past.
I’ll make dust of history, dust of dust.
Now I gaze at the last sunset.
I am listening to the last bird.
I bequeath nothingness to no-one.

4 comments:

  1. அழகான கவிதை
    அருமையான மொழிபெயர்ப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அன்பு பாலகுமார்,

    கடைசி வரியின் மொழிபெயர்ப்பு, அத்தனை சரியாய் இல்லை என்று தோன்றுகிறது...

    இங்கே வெறுமையை ஒருவரிடத்திலும் விட்டுச் செல்லப்போவதில்லை... என்பது தானே சரி... இதில் தாரை வார்த்து என்பது பொருந்துமா என்று தெரியவில்லை...

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  3. அனைவருக்கும் மிக்க நன்றி.

    @ராகவன் அண்ணா: திருத்தத்திற்கு நன்றி , மாற்றி விட்டேன். :)

    ReplyDelete