Thursday, August 18, 2011

உலர்த்திக் காயப்போட்டிருக்கும் விதை நெல்



இந்த 'டீம் அன்னா'னா யாரு, மிஸ்டுகால் கொடுத்தா, SMS 10 பேருக்கு ஃபார்வேட் பண்ணா புரட்சி வெடிக்கும்னு சொன்னாய்ங்களே, அந்த குரூப் தானே பாஸ்?

வங்கிகளின் கண்காணிப்பு கேமிராக்கள் வாடிக்கையாளர்களை மட்டும்தான் பார்க்குமா? அரட்டையடிக்கும், குமுதம் படிக்கும் அலுவலர்களை கண்டுகொள்ளாதா?

ஆடி மாதத்தில், நாம் தூங்கும் நேரத்தை மாரியம்மன் கோவில் மைக்செட்காரர்கள் தான் தீர்மானிக்கிறார்கள் # விடிகாலை 5 மணிக்கு 'ஆடி வாறா மாரி ...'

'நான்' என்று எழுதாமல், 'நாம்' சென்றோம் 'நாம்' வந்தோம் என்று பதிவெழுதுபவர்கள் பத்திரிக்கைக்காரர்கள். # வெளியே ஒரு உருவம்,உள்ளே பல ரூபங்கள்

’கே’டிவியில் 'முத்து’ திரைப்படம்.ரஜினி யாரையோ நினைத்து மீனாவிடம் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.அல்லது நாம் அப்படி நினைத்துக்கொள்கிறோம்

விலங்கு இறந்ததும், அதற்கு வைக்கப்பட்ட விஷமும் உடன் இறக்கிறது #படித்ததில்பிடித்தது

நடிகர் விக்ரமின் அனைத்து பேட்டிகளிலும் ஒரு 'லபக்குத்தன்மை' இருப்பதை கவனித்திருக்கிறீர்களா!!! ( வீரா இஸ் ய ஸ்வீட் கேரக்டர் யு நோ...)

கிரிக்கெட்டில் வேணுகோபால்ராவ், ரஜத்பாட்டியா, லெக்ஷ்மிரதன்சுக்லா, முரளிகார்த்திக் போன்றோரை கவனிக்கிறீர்களா? நீங்கள் என் இனம்.

அதிகாரத்தையும், செல்வாக்கையும், புகழையும் இப்பொழுதெல்லாம் பணமாக மாற்றி வைத்துக் கொள்ளும் கலையை கற்க ஆரம்பித்து விட்டார்கள் பிரபலங்கள்.

மங்குனிப்பாண்டியர்கள் என்பவர்கள் போரில் வெல்பவர்களும்அல்ல,தோற்பவர்களும்அல்ல.வேடிக்கைபார்த்து கருத்துசொல்லும் புனிதமான இடத்தை சேர்ந்தவர்கள்

சமூக வலைத்தளங்களில் "அடங்கமறு, அத்துமீறு!" ... சமூகத்தில் "அடங்கு, அப்பீட்டாகு!"

உருகிஉருகி எழுதிய கவிதையை படித்துவிட்டு நண்பன் நக்கலாக சிரித்தான்.இந்த‘டீஸர்’கூட உனக்கு புரியலையான்னு நானும் சிரித்து சமாளித்தேன் #யாருகிட்ட

பிரபல எழுத்தாளர்களின் பெயர்தெரியா வாசகர்கள் நுன்னறிவுபடைத்தவர்கள், எழுத்தாளர்கள் சொல்ல விரும்பும் பதிலுக்கான கேள்விகளையே எப்போதும் கேட்கிறார்கள்

கறுப்பு பணத்திற்கு எதிரான பாபாராம்தேவ் உண்ணாவிரதம் அபாரவெற்றி #முதல்ல பாபாவிடமிருந்தே ஆரம்பிக்க சிபிஐ முடிவு #பாஸ், அந்த தீவை மறந்துறாதீங்க‌

'பச்சை'யை சமாளிக்க 'மஞ்சள்'உதவியது.இப்போ 'சிவப்பு'க்கு எதிர்ப்பான் என்னன்னு கண்டுபிடிக்கனுமே #எங்கள் ஆடைகளையும் எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவிமர்சகர்' என்றே நினைத்திருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால்! ;)

உங்களை 'நுன்மான் நுழைபுலம் பெற்ற சிறந்தவாசகர்' என்றே நினைத்துக்கொண்டு இருந்திருப்பேன், நீங்கள் உங்கள் முதல்கவிதையை எழுதாமலே இருந்திருந்தால் ;)

பலே திருடன் என வரையப்படும் 'கபாலி'க்கு எப்போதும் ஏன் கோடு போட்ட பனியனும், கைலியும் மட்டுமே அணிவிக்கப்படுகிறது. # வேட்டிசட்டை?கோட்சூட்??

496/500 எடுத்த மாநிலத்தின் முதல் மாணவியிடம் சன் டி.வி. நிருபர் கேக்குறார், "எந்த பாடத்துல மார்க் குறைந்ததுன்னு நினைக்கிறீங்க?" :(

ஜிலேபிக்கும், ஜாங்கிரிக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து ஏதேனும் திறனாய்வுக் கட்டுரை வந்துள்ளதா?

ஏதோவொரு நெடுந்தொடரில், 'மனுசன்னா நீதி,நேர்மை,மனசாட்சி இருக்கனும்' னு பேசிட்டிருந்தார் 'மகாநதி' துலுக்கானம். ம்ம் எப்படி இருந்த மனுசன் :(

தமிழ்சினிமாவில் கல்லூரி நண்பர்கள் சேர்ந்து புரட்சியெல்லாம் செய்கிறார்கள். இங்கே ஒரு 'டீ'க்கு காசுகொடுக்க மூக்கால்அழுகிறான் உயிர்த்தோழன் :(

சகுனமே சரியில்லை. ரஜினி 'ராணா' படத்தை நிறுத்திடுவார் என்று தான் நினைக்கிறேன். # நிறுத்துனா ஜக்குபாய், வந்தா பாபா?

கடவுள் இறந்த பிறகு தான் அடுத்த கடவுளுக்கான தேவையும் தேர்தலும் துவங்கியது. 

வீட்டில் "திருந்தாத ஜென்மம்" என்று வாழ்த்துப்பெற்றவர்கள் தாம் நாட்டை திருத்த கிளம்பி விடுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பஞ்சர் கடை முன் வண்டி பஞ்சராவது, என் அதிர்ஷ்டமா இல்லை கடைக்காரர்களின் தொழில் ரகசியமா?

கிரிக்கெட் வர்ணனையில் மைக்குடன் கங்குலியைப் பார்க்கும் பொழுது, படையப்பாவில் சுடிதார் அணிந்து, வீணை வாசிக்கும் ரஜினி நினைவுக்கு வருகிறார் :(

நான் கூட விக்கிலீக்ஸ்னா பெரிய புலனாய்வுப் புலி ரேஞ்சுக்கு நினைச்சுட்டேன் #நம்ம ஜல்லிக்கட்டுக்கு ஸ்பெயினிலிருந்து கமெண்ட்ரி தர்ற மாதிரி தான்

கிட்டாதாயினும் கிட்டக்கப் போய் என்னன்னு பார் !

நடுநிசி நாய்களைப் பார்க்க நேரிடும் போது தான், தவமாய் தவமிருந்தவர்களின் மேல் மதிப்பு கூடுகிறது.

விருந்துகளில், "ஒன்னு சரக்கு தீரனும், இல்லை நான் தீரனும்!" என்று முழுமூச்சாய் இறங்கியடிக்கும் நண்பர்கள் மகிழ்வூட்டுகிறார்கள்.

ஹோட்டலில் சில்லிபரோட்டா சாப்பிடாமல் ஏன் போயும் போயும் இட்லி, தோசை ஆர்டர் செய்கிறார்கள் என்று பரிதாபப்பட்ட பால்யம் அழகாக இருந்தது.

தாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, "குடிகாரர்கள்" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்?

7 comments:

  1. ரசிச்சேன் ரசிச்சேன்

    ReplyDelete
  2. நல்ல இருக்கு ரசித்தேன் :)

    ReplyDelete
  3. ட்விட்ஸ் இங்கேயும் கலக்குதே...

    ReplyDelete
  4. as usual nice bala!!!
    maha

    ReplyDelete
  5. //'லபக்குத்தன்மை'//
    இந்த டெர்மினாலஜிக்கு அர்த்தம் என்ன?

    //"குடிகாரர்கள்" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்?//
    ம்ம்ம்ம்ம்ம்ம்..............

    ReplyDelete
  6. "தாம் குடிப்பதை பெருமையாக பறைசாற்றிக் கொள்பவர்ளை, "குடிகாரர்கள்" என்று சொன்னால் மட்டும் தன்மானம் சிலிர்த்தெழுந்து சினம் கொள்வதேன்?"

    -- எங்களுக்கு முகத்திற்கு முன்னாடி புகழ்றது பிடிக்காது பாலா!!

    ReplyDelete
  7. ஆஹா எதை விடுவது எதை எடுத்து கொள்வது? ஒவ்வொன்றும் மாணிக்க வாசகங்கள். நன்றி

    ReplyDelete