"மூன்று முடிச்சு" தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் 'ஸ்ரீ' க்கு நன்றி.
மூன்று என்று எண்ணிக்கையில் இல்லாமல் பொதுவாக எழுதலாம் என நினைக்கிறேன். அப்புறம், இதை புறம் சார்ந்த விஷயமாக கருதாமல் அகம் சார்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
விரும்பும் விஷயம்
தனிமை
அதுவும் இரவில் விடுதி அறையில் கரண்ட் போகும் சமயம் கதவு, ஜன்னல் மற்றும் வெளிச்சம் வரும் எல்லா வழிகளையும் அடைத்து விட்டு இருட்டை நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு இருப்பேன். தனிமை - அமைதி.
விரும்பாத விஷயம்
தற்பெருமை
ஒருவர் தொடர்ந்து தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் அந்த இடத்தில் என்னால் ஒன்றி இருக்க முடிவதில்லை, பெரும்பாலும் ஒன்றும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவேன், சில சமயம் லேசான மனநிலையில் இருக்கும் போது ஏதேனும் சுயபுராண பார்ட்டி மாட்டினால் நான் சொல்லும் ஓரிரு ‘கமெண்ட்டில்’ டோட்டல் டேமேஜ் ஆகிவிடுவார்
பயப்படும் விஷயம்
எனது கோபம்
பூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.
புரியாத விஷயம்
நான் தான்.
’வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்வது’ என்று தான் நினைக்கிறேன். ஆனாலும் எதையோ தேடுவது போல தோன்றிக் கொண்டே இருக்கிறது. எதைத் தேடுகிறேன் என தெரியாமலே ரொம்ப சின்ஸியரா தேடிட்டு இருக்கேன். இலக்கு இன்னும் பிடிபடவில்லை.
மேஜையில் உள்ள பொருள்
இப்பொழுது மடிக்கணினி வைத்து தட்டச்சு செய்து கொண்டிருக்கும் மேஜையில் மடிக்கணினி மட்டுமே இருக்கிறது. இது நான் சிறு வயது முதல் வீட்டுப்பாடம் எழுத பயன்படுத்தும் சின்ன ‘ரைட்டிங் டெஸ்க்’
சிரிக்க வைக்கும் விஷயம்/மனிதர்கள்
சமீபத்தில் சிரிக்க வைத்தவர்கள், கோவை சரளாவும், தேவதர்ஷினியும் - ’காஞ்சனா’ படத்தில்.
தற்போது செய்து கொண்டு இருக்கும் காரியம்
அன்றாட அலுவல் போக, நல்லபடியாய் முடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் துவங்கியிருக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் படிப்பு
வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்
ஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்
உங்களால் செய்து முடிக்கக் கூடிய விஷயம்
காரியம் எதுவாகினும், முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்று நம்புகிறேன்.
கேட்க விரும்பாத விஷயம்
நம்பிக்கைக்குரியவர்களின் பொய் - இதை மட்டும் எப்போதும் ஒத்துக் கொள்ள மனம் வருவதேயில்லை.
கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்
முன்பு புல்லாங்குழல், இப்பொழுது கணினி வரைகலை. பிறகு வாய்ப்பு அமைந்தால் ‘கார்ட்டூன் பொம்மைகளுக்கு’ குரல் கொடுக்க வேண்டும்
பிடிச்ச உணவு வகை?
முன்பு நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு எழுப்பி ஊட்டிவிடப்பட்ட பட்டர் பன், முட்டை பரோட்டா. இவற்றின் சுவை இப்போதும் நாக்கில் ஒட்டிக் கொண்டுள்ளது.
அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்
முணுமுணுப்பதெல்லாம் இல்லை, ஆனால் ஒருவர் பாடக் கேட்டால் கரைய வைக்கும் “கங்கைக்கரைத் தோட்டம்...”
பிடித்த படம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனியாய் போய் படம் பார்க்க பிடிக்காமல், பெங்களூரிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த நண்பனை, வழியில் மதுரையில் இறங்க வைத்து, முதன்முதலாய் பிளாக்கில் டிக்கெட் எடுத்து இரண்டாவது வரிசையில் கழுத்து வலிக்க வலிக்க பார்த்து ரசித்த படம் “ஆட்டோகிராப்”, ஏமாற்றவில்லை ... ம்ம்ம் அது ஒரு காலம் :)
இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்
தன்னம்பிக்கை
இதை எழுத அழைக்கப்போகும் நபர்
அண்ணன் முரளிகண்ணன் - நேரம் இருந்தால் எழுதுங்களேன்.
--
நட்புடன்,
பாலகுமார்.
ஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்
ReplyDeleteஆகா என்ன ஒரு அருமையான சிந்தனை ! இறை ஆசியுடன் நிறைவேறட்டும்.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
ஒரு கல்வி நிறுவனம் துவங்க வேண்டும்
ReplyDeleteso planning to become a future "business man " !!! and dont tell that i am not like that.money has the capability to change every one.
maha
அழைப்புக்கு நன்றி பாலா.
ReplyDelete\\எனது கோபம்பூச்சி போல அமைதியாய் ஊர்ந்து கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறை கொட்டினாலும் வலி உயிர் போய் விடும். ’தேள்’ கொட்டக்கூடாது என்று நினைப்பதில்லை, அதே போல் கொட்ட வேண்டும் என்றும் நினைப்பதும் இல்லை.\\
ReplyDeleteசூப்பர்ண்ணே!
//இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான விஷயம்
ReplyDeleteதன்னம்பிக்கை
//
Hats off Bala...
கருத்திட்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
ReplyDelete//so planning to become a future "business man " !!! and dont tell that i am not like that.money has the capability to change every one.//
@மகா: நிச்சயம் தொழிலாகத் தான் செய்வேன், அதிலும் சேவை இருக்கும். “நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவை” :)
மடிக்கணினியை டெஸ்க்டாப் ஆக மாற்றிய பெருமை உம்மையே சாரட்டும் !
ReplyDelete"ஆனால் ஒருவர் பாடக் கேட்டால்" --- பி.சுசீலா தானே :)
“ஆட்டோகிராப்” ---- நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால் .....
(on comment) “நியாயமான கட்டணத்தில் நிறைவான சேவை” :) --- தெளிவான பதில்
-மதன்