அப்பா,
நேத்து ராத்திரி பூதம் வந்துச்சா?
இல்ல செல்லம்,
பூதமெல்லாம் கிடையவே கிடையாது !
அம்மா சொன்னாங்க,
அப்போ கண்டிப்பா பூதம் இருக்கும்
என்னை மாதிரியே நீங்களும்
சமத்தா தூங்கியிருப்பீங்க,
அதான் உங்களுக்கும்
பூதம் வந்தது தெரியல
என்றவள், சிறிது யோசனைக்குப் பின்
அம்மா மட்டும் பாவம்லப்பா...
டெய்லி, டெய்லி
அம்மா, நான், நீங்க
நாம எல்லாரும்
சீக்கிரமே தூங்கிருவோம், சரியா!
என்று கூறிக் கொண்டே
அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.
சின்ன சின்ன சிலிர்ப்புகளில்
முழுமையடைகிறது வாழ்க்கை.
வாழ்த்துகள்ண்ணேய்!!
ReplyDelete:-)
கற்பனைக்கு கண், காது, மூக்கு வச்சு எழுதினா, அதுக்கும் வாழ்த்து சொல்றீங்களே தம்பி :)
ReplyDeleteநன்றாக இருக்கிறது. Ignorance is bliss என்று சும்மாவா சொன்னார்கள்?
ReplyDelete