Tuesday, July 28, 2009

தொலைந்து நிற்கிறேன் !



பால்சங்கும் ,"ஐடக்ஸ்" கண்மையும்
அப்படியேதான் இருக்கின்றன ‍நான் தான்
நடக்கப் பழகி தொலைந்து போனேன் !
அம்மா கை பருப்பு சாதமும்,
"ஹார்லிக்ஸ்" பாட்டிலும் ,
அப்படியே தான் இருக்கின்றன ‍ நான் தான்
ஐந்தாம் வகுப்பு முடிந்து போய் தொலைந்து போனேன்!
பல்லாங்குழியும், பக்கத்து வீட்டு அக்கா ஸ்பரிசமும்
அப்படியே தான் இருக்கின்றன -நான் தான்
அரும்பிய மீசையில் தொலைந்து போனேன்!
ஊர்த்திருவிழாவும்,கூட்டாஞ்சோறும்
அப்படியே தான் இருகின்றன -நான் தான்
விடுதியில் விழுந்து தொலைந்து போனேன்!
பிடித்த பாடமும், வகுப்பறை வாசமும்
அப்படியே தான் இருகின்றன - நான் தான்
பச்சை சுடிதாரின் ஒற்றை சிரிப்பில் தொலைந்து போனேன்!
முதல் கவிதை தொகுப்பும்,முடித்த பட்டமும்
அப்படியே தான் இருகின்றன -நான் தான்
மூளை விற்று வாங்கிய வேலையில் தொலைந்து போனேன்!
என் வாழ்கையும்,
கொஞ்சம் போராட்டமும்,
நிறைய கற்பனையும்!
என் சிறகுகளும்,
கொஞ்சம் ஆசையும்,
நிறைய வானமும்!
என் தேவதைகளும்,
கொஞ்சம் வரமும்,
நிறைய ஆசிர்வாதமும்!
அப்படியே ,அப்படியே தான் இருகின்றன -நான் தான்
சராசரியாய் மாறி முழுதாய் ...முழுதாய் தொலைந்து நிற்கிறேன்!!!!
(20/09/2004 அன்று எழுதியது)

16 comments:

  1. superb....

    where is that two lines ?

    ReplyDelete
  2. சூப்பர் தலைவா..
    கொன்னுட்டீங்கண்ணே..

    ReplyDelete
  3. Very Nice.......

    // sathya said...
    superb....

    where is that two lines ?//

    ?????????

    ReplyDelete
  4. எங்க..எங்க தொலைந்து போனீர்கள்???...
    உடனே ஷேவ் பண்ணீட்டு போகவேண்டியது தானே??
    அக்கா பல்லாங்குழியோட பாத்துகிட்டிருப்பா...
    :)))

    ReplyDelete
  5. வீட்டுப்பக்கம் போனா அந்த ஹார்லிக்ஸ் பாட்டில மட்டும் கொஞ்சம் பாத்துகொள்ளுங்க...
    காலாவதி ஆகிட போகுது...
    :)))


    ச்சும்மா...
    கவிதை சூப்பர்...
    :)))

    ReplyDelete
  6. So nice bala!!!
    நீ தொலைத்த எல்லாவையும் உன் பிள்ளை வந்த உடன் கிடைத்து விடும்.

    ReplyDelete
  7. Arumayana kavithai....
    Velayai mattum ellarum verupathai kanbikireergale yen..un 60 vayathukku pin athayum vittu nee tholainthu thaan nirpai nanbane...

    ReplyDelete
  8. மயிலவன் said...
    Very Nice.......

    // sathya said...
    superb....

    where is that two lines ?//

    ?????????

    i already read this poem in his diary..two lines are missing..thats y i am asking....:)

    ReplyDelete
  9. பால்சங்கும் ,"ஐடக்ஸ்" கண்மையும்
    அப்படியேதான் இருக்கின்றன ‍நான் தான்
    நடக்கப் பழகி தொலைந்து போனேன் !//

    அசத்தல் பாலகுமார்!!

    ReplyDelete
  10. //sathya//
    நன்றி !

    // டக்ளஸ்...
    சூப்பர் தலைவா..//

    இதுல உள்குத்து ஏதும் இல்லயே ! :)

    கொன்னுட்டீங்கண்ணே..//

    யாரை ? :)

    //மயிலவன் said...
    Very Nice.......

    ... ????????? ///
    sathya said...
    i already read this poem in his diary..two lines are missing..thats y i am asking....:)

    u got the explanation .....

    // கார்த்திகைப் பாண்டியன் //

    நன்றி கார்த்தி .

    // ஸ்ரீ . //

    நன்றி ஸ்ரீ

    // சொல்லரசன் //

    நன்றி சொல்லரசன்.

    // வழிப்போக்கன்
    ச்சும்மா...
    கவிதை சூப்பர்...//

    சும்மா தானே சொல்றீங்க ! :)

    // isakki said...
    So nice bala!!!
    நீ தொலைத்த எல்லாவையும் உன் பிள்ளை வந்த உடன் கிடைத்து விடும்//

    இது என்ன புது லாஜிக்..... ?

    //Aarthi DayaShankar said...
    Arumayana kavithai....
    Velayai mattum ellarum verupathai kanbikireergale yen..un 60 vayathukku pin athayum vittu nee tholainthu thaan nirpai nanbane...//

    இது வெறுப்பது இல்லை, ஆர்த்தி... ஒரு மாதிரி, monotonous ஆ , வந்தோம், போனோங்குற மாதிரி ஒரு தோற்றம், அவ்வளவு தான்.

    // தேவன் மாயம் //

    நன்றி சார்.

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருக்கு தல‌

    ReplyDelete
  12. நல்ல கவிதை நண்பா!

    //i already read this poem in his diary..two lines are missing..thats y i am asking....:) //

    அதென்ன two lines? ...

    -மதன்

    ReplyDelete