Friday, April 17, 2009

மட்டையை பெருமைப்படுத்திய மறத்தமிழச்சி

     எங்க கல்லூரி அரசினர் கல்லூரிங்கிறதால, எப்பவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை தான். அதுக்காக தற்காலிக அடிப்படைல, பி.இ. முடிச்ச freshers சிலரை appoint பண்ணி இருப்பாங்க. அப்படி வர்றவங்க எல்லாம், பாடம் நடத்துறப்போ, அவங்க கல்லூரி சமயத்துல படிக்காம விட்டதை எல்லாம், சேர்த்து வளைச்சு எங்களுக்கு அறிவு அமுதம் ஊட்ட ரொம்ப தான் மெனக்கெடுவாங்க. ஆனா, பசங்க எல்லாம், அவங்க வகுப்புல தான், ரொம்ப குஷியா இருப்பானுங்க. (இருக்காதா, பின்ன !!!) . சும்மானாச்சும், பாடம் கவனிக்கிற மாதிரி ஆக்ட் விட்டு, ஏதாவது அறிவுப்பூர்வமா (?) சந்தேகம் எல்லாம் கேட்டு, " நாஙகளும் படிக்கிற பசங்க தான்" ன்னு நிலை நிறுத்திட்டு இருப்பானுங்க.

 

அப்படி ஒரு நாள்ல தான், நம்ம மட்டையோட திறமை வெளி உலகுக்கு தெரிஞ்சது. அது எப்படீன்னா ..........

 

மட்டை பொறந்து, வளர்ந்ததே சினிமா தியேட்டர்ல தான். அதனால அவனுக்கு கிட்டத்தட்ட எல்லா படத்துல வர்ற பாட்டும் அத்துப்படி. So, மட்டை இந்த மாதிரி வகுப்பை கவனிக்கிற மாதிரி படம் போடுற சமயத்துல, அவங்க பாடம் எடுத்து தாலாட்டுப் பாடுற மெட்டுல ஏதாவது ஒரு சினிமா பாட்டை, பேப்பர்ல எழுதி rounds ல விடுவான். பசங்க எல்லாம் அதை படிச்சுட்டு எங்களுக்குள்ள சிரிச்சுக்குவோம். (அந்த நாயி, இதே நினைப்புல தான் இப்போ பின்னூட்டம் போட சொன்னாக் கூட, ஏதாவது ஒரு பாட்டை பாடிட்டுப் போயிறுது .... )

 

அப்படி ஒரு நாள், கொஞ்ச நாள் முன்னாடி தான் வேலைக்கு சேர்ந்திருந்த ஒரு சேச்சி க்ளாஸ் எடுத்திட்டு இருந்தாங்க. அவங்க, Field Theory பாடத்தை அரைச்சு, திரிச்சு, மாவாக்கி, வேக வச்சு குழாப் புட்டா தர பெரு முயற்சி பண்ணிட்டு இருந்தப்போ......

 மட்டைக்கு மனசுக்குள்ள .... சிலுசிலுவென குளிரடிச்சு , மரம்கொத்திப் பறவை யெல்லாம் மரம் விட்டு மரம் பறக்க ஆரம்பிச்சிருச்சு.

 

பாடத்துக்கு நோட்ஸ் எடுக்குற பேப்பர்லயே " மலையாரக் கரையோரம் தமிழ் பாடும் குருவி, அலையாடை கலையாமல் தலையாட்டும் அருவி ...." ன்னு அந்த பாட்ட முழுசா எழுதி circulation ல விட்டுட்டான்.

 

சேச்சி பாடம் எடுக்குற situation க்கு பாட்டு sync ஆகிருச்சு போல, பசங்க எல்லாம் பாடத்துக்கு background ல பாட்டை dubbing பாட ஆரம்பிச்சுட்டாங்க. வழக்கமா, field theory வகுப்புல சேட்டை பண்ணாம, சமத்தா தூங்குறது தான் நாங்க சேச்சிக்கு கொடுக்குற மரியாதை. ஆனா, மட்டையோட இந்த பாட்டால பசங்களுக்குள்ள லேசா சாரல் அடிக்க ஆரம்பிச்சிருச்சு .... கொஞ்சம் ஓவராத்தான் சிரிச்சுட்டானுக.

 

சேச்சி டென்ஷன் ஆகிட்டாங்க ..... வழக்கமா எல்லா புது ஆசிரியர்களும் சொல்ற் இத்துப் போன டயலாக் தான்... 

"இப்போ சிரிச்சதுக்கு reason சொல்லங்கில் ஞான் இனி க்ளாஸ் எடுக்க வராது !" ன்னு சொல்லிட்டே எங்க டெஸ்க் பக்கம் வந்தாங்க. மட்டைக்கு கொஞ்சம் தெனாவட்டு அதிகம்... சேச்சிக்கு தமிழ் படிக்க தெரியாதுங்குற தைரியத்துல அந்த பேப்பரை டெஸ்க் மேலயே வச்சு இருந்தான். சேச்சி பக்கத்துல வரவும், மட்டை பக்கத்துல உக்கார்ந்திருந்த வாய்க்கா ரொம்ப புத்திசாலித்தனமா பண்றதா நினைச்சு அந்த பேப்பரை எடுத்து மறைச்சு வைக்க முயற்சி பண்ணான். சேச்சிக்கு பொறி தட்டிடுச்சு. வேகமா அந்த பேப்பரை பிடிங்கிட்டு வகுப்பை விட்டுட்டு போயிட்டாங்க.

 

அது மட்டைக்கு கொஞ்சம் அசிங்கமா போச்சு. " ச்சே, சேச்சி கிட்ட இருந்த நல்ல இமேஜ், டேமேஜ் ஆகிருச்சே, இனிமே good morning எல்லாம் சொன்னா, சேச்சி சிரிக்க மாட்டாங்களே !" ன்னு ஒரே ஃபீலிங். அந்த கடுப்புல வாய்க்காவை கொஞ்சம் காய்ச்சி எடுத்துட்டு, அடுத்த க்ளாஸ்க்கு பாட்டெழுத ரெடி ஆகிட்டான்.

 

மறுநாள், காலைல கல்லூரிக்கு வந்தவுடனே, சேச்சி கூப்பிட்டு அனுப்பினாங்கன்னு சொல்லி, மட்டை staff room க்குப் போனான். பசங்க எல்லோருக்கும் உள்ளூர ஒரே சந்தோஷம், "மட்டை இன்னிக்கு சரியான டோஸ் வாங்க போறான் ! "

 

சுமார், ஒரு மணி நேரம் கழிச்சு, மட்டை   " மலையாரக் கரையோரம் தமிழ் பாடும் குருவி ........" ன்னு ரொம்ப உற்சாகமா பாடிட்டே வர்றான்.

வாய்க்கா ஜெர்க் ஆகி, "என்னடா மட்டை, சேச்சி ஒன்னும் சொல்லலியா, ஜாலியா வர்ற ?"

 

"ஏன் சொல்லாம, சேச்சிக்கு என்னோட கவிதைன்னா உயிர் தெரியுமா ?"

 

"அட நாயே, நீ எப்போ கவிதையெல்லாம் எழுத ஆரம்பிச்ச?"

 

" அந்த கொடுமையை ஏன் கேக்குற ! சேச்சி அந்த சினிமா பாட்டை என்னோட கவிதைன்னு நினைச்சுருச்சு டா .... நிங்களொட கவிதை talent வல்லியதானு. ன்னு ஆரம்பிச்சு, ஒரு மணி நேரமா, திகட்டத் திகட்ட டிப்ஸ், அட்வைஸ், என்கரேஜ்மென்ட் ன்னு போட்டுத் தாக்கிருச்சுடா .... நானும் சளைக்காம இன்னும் நாலு, அஞ்சு பாட்ட கவிதையா மாத்திக்கொடுத்துட்டு வந்தேன்....  

ஆனா ஒன்னு டா, சேச்சியாவது சேர நாடு.... தமிழ் சினிமா பார்த்திருக்காதுன்னு விட்டுறலாம்.... சேச்சிக்கு அந்த பாட்ட, நம்ம வகுப்புல உள்ள யாரோ ஒரு மறத்தமிழச்சி தான்டா கவிதை ன்னு சொல்லி அர்த்தம் சொல்லி இருக்கா. அது மட்டும் யாருன்னு தெரிஞ்சா போதும், அந்த தெய்வத்துக்கு  கவிதையாவே காணிக்கை செலுத்துவேன் டா....

 

So, தம்பிகளா, நானும் இப்போ ஒரு கவிஞனா உருவாகிட்டேன்... இனிமே என்னை எல்லோரும் கவிஞர் மட்டை ன்னு தான் கூப்பிடனும்..... " ன்னு சொல்லி சவுண்டு விட்டுட்டே இருந்தான்...

 

"நாட்டுல கவிஞன் எல்லாம் இப்படி தான் உருவாகிறானுங்க போல இருக்கு , எல்லாம் நேரக் கொடுமை டா !"  ன்னு உண்மையான கவலையோட, கன்னத்துல கைய வச்சு உக்கார்ந்துட்டான்.

 

ஆமா, உண்மையிலேயே, கவிஞர்கள் இப்படி தானே உருவாகுறாங்க ?!?!?!?!?!?!?!?!

 

Wednesday, March 18, 2009

ரஜினியை மிஞ்சிவிட்டார் விஜயகாந்த் (வீடியோ ) !

ரஜினிகாந்த் - மேஜிக்





விஜயகாந்த் - மேஜிக்



என்ன தான் இருந்தாலும், பேரரசு அளவிற்கு சுந்தர்.சி. க்கு கிரியேட்டிவிட்டி கிடையாது. 


( வீடியோ படம் போட்டாத்தான் ஹிட்ஸ் கூடுமாமே, அப்படியா ??? )

Thursday, March 5, 2009

வேணாம், கிட்ட வராதீங்க !

இவ்வளவு சொன்ன பிறகும், இந்த பக்கம் வந்திருககீங்கன்னா....... இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல, நேரா கீழே உள்ள " யாராண்ணே இருக்கும் ? " இதை மட்டும் படிச்சுட்டு கிளம்புங்க...
இன்னும் இங்க தான் இருக்கீங்களா, சரி படிங்க, விதி யாரை விட்டது ?



அடரிருள் தேகத்துக்குள் வந்த அக்னி தேவதை !



நினைவுகள் அழிந்த
நடுநிசி நித்திரையில்
ஆதியந்தமேதுமற்ற 
அடரிருள் பிரபஞ்சத்தின்
ஏகாந்த படிமம் தாங்கி
கவிழ்ந்த கனபரிமானத்தில்,
கடிவாளமற்ற புரவியேறி
சூன்யப்பெருவெளியை
சுமக்கின்ற கரும்பள்ளத்தின்
சுழி தாண்டிய பிரதேசத்தின்
புதையல் நோக்கிப் பறக்கின்றேன் !

சுழல்கின்ற சுழியினுள்
உயிர்பெற்ற ஒளிப்புள்ளி
கற்றையென தெறித்து வந்து
எரிதழலாய் வளர்கிறது,
சுழற்சி விதிகள் மாறும் போது
ஜ்வாலையாய் எழுந்து நின்று
விஸ்வரூபம் எடுக்கிறது !

கொழுந்துவிட்டு எரியும் மேனி
முழுவதுமாய் பிரபஞ்ச நெருப்பு,
ஒளிபிம்பத்தின் நிறைந்த கீற்றாய்
வழிநடத்தும் பெருவிழிகள்,
சுடர்மிகு விழிவழியே 
சிரிக்கின்றாள் எனைப்பார்த்து !

புரவி, புதையல் எல்லாம் துறந்து
என் ஆதியந்தம் எல்லாம் மறந்து
சேர்ந்து நானும் எரிகின்றேன்,
தழலோடு தழல் சேர்ந்த
தனித்துவத்தை உணர்கின்றேன் !


சரி, இவ்வளவு தூரம் பொறுமையா படிச்சிருக்கீங்க, நான் என்ன சொல்ல வர்றேன்னு தெரியாமலே போகலாமா ? இதையும் படிச்சுட்டு ஒரு நல்ல பதிலா சொல்லிட்டுப் போங்க !!

யாராண்ணே இருக்கும் ?
நேத்து பொழுதுசாய 
படுத்தது தான் தெரிஞ்சது,
அடிச்சுப் போட்டாப்ல 
அப்படியொரு உறக்கம்ண்ணே !
நட்டநடு ராத்திரில
குப்பறக்க படுத்திருந்தப்ப,
கண்ணக் கட்டி காட்டுல விட்ட மாதிரி
திக்குத் தெரியாத திசையில,
தூரதேசமா போயிட்டிருக்காப்ல,
அப்படியொரு கனவுண்ணே !

அப்போ, இம்மினிக்கானா 
புள்ளி மாதிரி ஆரம்பிச்சு
தீயாட்டம் தகதகன்னு
சுத்தி நின்னு எரியுது !
கொஞ்சம் சுதாரிச்சுப் பார்த்தா...

மோகினியோ, பிசாசோ ஏதோ ஒன்னு
மானத்துக்கும் பூமிக்குமா 
நெருப்பாட்டம் ஜொலிக்குது,
நான் அப்படியே 
வாய் பொழந்து நிக்கிறேண்ணே !
என் கிட்டக்க தாண்ணே,
நிக்கிறாப்புல நிக்குது,
ஆனா கண் கூசுறாப்புல மின்னுதுண்ணே !

அப்படியே லேசா சிரிச்சுக்கிட்டே
என்னை ஒரு பார்வை பார்த்துச்சு பாரேன்,
எனக்கு என்னமோ போல ஆயிருச்சுண்ணே !
ஆடு, குட்டி, காடு, கழனி 
அல்லாத்தையும் விட்டுப்புட்டு 
அது கூடவே செத்துப் போயிரலாம்னு 
தோனுச்சுன்னா பார்த்துக்கோயேன் !



Saturday, February 28, 2009

பாத யாத்திரையில் புல்லரிக்க வைத்த எட்டாவது வள்ளல் !

டிசம்பர் 31 ம்ம் தேதி இரவு ... பசங்க எல்லாம் விடுதி மொட்டை மாடில , புது வருடத்தை வரவேற்க்குறதுல ரொம்ப பிஸி யா இருந்தோம் ... அது கல்லூரியோட கடைசி வருடம், அதனால மனசுக்குள்ள எதிர்காலத்தை பத்தின பயம், லேசா எட்டிப் பார்த்துட்டு இருந்த சமயம். ( எங்களோட எதிர்காலம் இல்லீங்க, எங்க சேவைகளையும், கண்டுபிடிப்புகளையும், புரட்சியையும் எதிர்பார்த்துட்டு இருந்த இந்த சமுதாயத்தோட எதிர்காலத்த பத்திய கவலை தான் ).

So, புது வருடத்த, எந்த வித சேட்டையும் இல்லாம, பக்திகரமா ஆரம்பிக்கிறதா ஒருமனதா தீர்மானம் நிறைவேற்றினோம். 

மறுநாள் காலைல, வருடப் பிறப்பு அன்னைக்கு, திருச்செந்தூர் போய், முருகனுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு வரலாம்னு முடிவு பண்ணோம். காலைல 5 மணிக்கு எல்லோரும் தயார் ஆகனும்னு சொல்லிட்டு , இந்த வருடத்த குறையில்லாம முடிக்கனுமேன்னு கொஞ்சமே கொஞ்சமா ஆட்டம் போட ஆரம்பிச்சோம். எல்லோருக்கும் மனசுக்குள்ள ஒரு குறுகுறுப்பு,
"என்னடா, ஒரு தீர்மானம் நிறைவேற்றி, எல்லோரும் ஒரேடியா ஒத்துக்குற அளவு நாம ஒத்துமையா ஆகிட்டோமா ?" ன்னு காந்தி வாய் விட்டு கேட்கவே செஞ்சுட்டான்.

அப்போ தான், கிருக்கனுக்குள்ள இருக்குற உண்மையான கிறுக்கனுக்கு நிதானம்(?) வந்துச்சு போல ....
"ஆமாம் ல, நீங்க எல்லோரும் நல்லவனா மாறும் போது, நானும் வெறும் நல்லவனாமட்டும் இருந்தா எப்படி? என் கிட்ட மக்கள் இன்னும் நிறைய எதிர்பார்ப்பாங்களே !!! " ன்னு எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டான். 
உடனே காடு உள்ளே புகுந்து, " டேய், டேய், கிறுக்கன யோசிக்க விடாதீங்க டா , குட்டையை குழப்பிருவான் " ன்னு பதறிட்டு இருக்கும் போதே கிறுக்கனுக்கு ஞானஒளி பிறந்திருச்சு .

" மக்களே, திருச்செந்தூர் முருகன், என்னை இப்பவே கூப்பிடுறார். கோவில் இங்க இருந்து ஒரு 80 கி.மீ. தானே இருக்கும், நான் இப்பவே பாத யாத்திரை கிளம்புறேன். காலைல உங்கள கோவில்ல சந்திக்கிறேன்" ன்னு சொல்லி பீதிய கிளப்புனான். 

பசங்க எல்லாம் எவ்வளவு சொல்லியும் கிறுக்கன நிறுத்த முடியல. அதுவும் இல்லாம, இவன் அடிச்ச உடுக்கைல வாய்க்காவுக்கும் சாமி வந்திருச்சு. 
"நானும் வரேன்டா கிறுக்கா, பாத யாத்திரை போய் இவனுங்களுக்கு முன்னாடி, முருகனை நமக்கு வரம் தர வச்சிருவோம் டா !" ன்னு தெளிவா ஏதோ ப்ளான் எல்லாம் போட்டுக் கொடுக்க ஆரம்பிச்சுட்டான். (நாயி, இந்த Logical Reasoning ஐ எல்லாம், Interview ல காட்டி இருந்தா, எங்கயோ போயிருக்கும் )

பசங்க ஒரு முடிவுக்கு வந்தோம். அதான் விதி வழிய வந்து வம்பிழுத்து பாத யாத்திரைக்கு வா, வா ன்னு இழுக்கும் போது, இவனுங்க என்ன பண்ணுவானுக? 
"சரி, நல்ல படியா போய் சேருங்க. நாங்க காலைல சரியா 9 மணிக்கு கோவில் நுழைவாயில் கிட்ட வந்துர்றோம், நீங்களும் அங்கேயே Wait பண்ணுங்க" ன்னு ரெண்டு பேருக்கும் ஆளாளுக்கு தெரிஞ்ச Advice, Tips ன்னு அள்ளி விட ஆரம்பிச்சோம். 

கிறுக்கன், " எல்லாம் எங்களுக்கு தெரியும், நீங்க எல்லாம் கொஞ்சம் அடங்குங்க " ன்னு சொல்லிட்டு வாய்க்காவை இழுத்துட்டு பாத யாத்திரை கிளம்பிட்டான்.

மறுநாள் அதிகாலை நாங்க எல்லோரும், விடுதியில இருந்து கிளம்பி, சரியா 9 மணிக்கு கோவில் நுழைவாயில் கிட்ட போய்ட்டோம். சுமார் ஒரு மணி நேரம் அங்க காத்திருந்தும் இந்த ரெண்டு பேரையும் காணோம். சரி, சீக்கிரம் வந்து சாமி கும்பிட்டுட்டு போய்ருப்பாங்கன்னு நினைச்சு, நாங்க போய் கடல்ல குளிச்சுட்டு, சாமி கும்பிட்டுட்டு, திரும்பி நடந்து பஸ் ஸ்டாண்டுக்கு போய்க் கிட்டு இருந்தோம்.

போற வழில, மட்டை தூரமா எதையோ பார்த்துட்டு " டேய், அங்க பாருங்க டா, அந்த சத்திரத்துல படுத்துருக்கானே, அந்த பிச்சைக்காரனுக்கும், நம்ம காடு க்கும் ஒரே ரசனை டா ... போன மாசம் சூப்பரா இருக்குன்னு சொல்லி, காடு ஒரு புது T-Shirt வாங்கிட்டு வந்து, ஒரே அலப்பறை கொடுத்துட்டு இருந்தானே, அதே மாதிரி T-Shirt ஐ இங்க ஒரு பிச்சைக்காரன் போட்ட்ருக்கான் டா " ன்னு சொல்லி சிரிச்சான். 
காந்தி மெதுவா, "டேய் நில்லுங்கடா, அது அதே மாதிரி T-Shirt இல்ல, அதே T-Shirt தான். நம்ம கிறுக்கன் அந்த T-Shirt ஐ தான்டா போட்டுட்டு நேத்து பாத யாத்திரை கிளம்பினான். 

மட்டை உடனே அறிவுப் பூர்வமா, " ஏன்டா, கிறுக்கன் பாத யாத்திரை தானே வந்தான். வந்த எடத்துல, போட்டுருக்க T-Shirt ஐ கழற்றி ஒரு பிச்சைக்காரனுக்கு கொடுக்குற அளவுக்கு வள்ளல் ஆகிட்டானா? " ன்னு பக்கத்துல போனா .... 

...... கிறுக்க்கனும், வாய்க்காவும் அந்த பிச்சைக்காரனுக்கு கொஞ்சம் தள்ளி, ஆழ்ந்த நித்திரைல இருக்காய்ங்க. அவிங்க படுத்து இருக்குற கோலத்தைப் பார்த்து பதறிப்போய் பசங்க தட்டி எழுப்பினா ... 

கிறுக்கன் எழுந்து உக்கார்ந்து , கூலா... 
"டேய், நாயிங்களா ... நேத்து கிளம்பும் போது ஆளாளுக்கு Advice பண்ணீங்களே டா, பணம் எடுத்தியான்னு கேட்டீங்களா டா, வாய்க்கா வச்சிருப்பான்னு தான், நானே இவன இழுத்துட்டு வந்தேன். இந்த பரதேசி என்னை நம்பி வந்திருக்கு. 
சரி, ஆனது ஆகிபோச்சு. நடந்து வந்தது வேற பயங்கர களைப்பா இருந்ததா, சரி நீங்க எப்படியும் இந்த பக்கமா தான் வருவீங்கன்னு, இங்கயே Rest எடுத்துட்டு இருக்கோம். நீங்க போறப்ப எங்களைப் பார்க்காம போய்ட்டீங்க போல, பரவால்ல, இப்பவாது பார்த்தீங்களே, இல்லாட்டி திரும்பி வரும் போதும், பாத யாத்திரையாத்தான் வந்து சேர்ந்திருப்போம்." ன்னு ரொம்ப அசால்ட்டா சொல்லிட்டு , வாய்க்காவை கிட்டத்தட்ட தூக்கிட்டு எழுந்தான். ஏன் ன்னா வாய்க்கா அந்த நிலைமையில தான் படுத்து இருந்தான்.

"எல்லாம், சரி தான் டா, ஏன் போட்டுருந்த T-Shirt ஐ கழற்றி பிச்சைக்கரன்ட்ட கொடுத்துட்டு பனியனோட நிக்குற ?"

" ஓ அதுவா , விடிய காலையா இங்க வந்தோமா, பாவம் இவர் குளிர் ல ரொம்ப கஷ்டப் பட்டுட்டு இருந்தார், அதான் கொடுத்துட்டேன் டா, சரி விடுங்க டா , இதுக்குப் போய் கண் கலங்கிட்டு, வாங்க வந்து திங்கிறத்துக்கு எதாவது வாங்கிக் கொடுங்க, பசி உயிர் போகுது !"

பசங்க அப்படியே உருகிப் போய், bag ல இருந்து ஒரு சட்டையை கிறுக்கனுக்கு கொடுத்துட்டு , மயக்கத்துல இருந்த வாய்க்காவை தூக்கிட்டு சாப்பிட போனோம். 

போற வழில, "நீங்கல்லாம் என்னடா சாமி கும்பிட்டீங்க, என்னை பாருங்க டா, இந்த மாதிரி இல்லாதவங்களுக்கு தேவை யான சமயத்துல, எதையும் எதிர் பார்க்காம உதவுறது தான் டா, உண்மையான புண்ணியம்" ன்னு கிறுக்கன் சொல்லிட்டு வந்ததை எலலாம், பசங்க ரொம்ப பய பக்தியோட கேட்டுட்டே நடந்தோம்.... 
மட்டை feel பண்ணிக்கிட்டே சொன்னான், " ச்சே, இந்த கிறுக்குப்பய மனசுக்குள்ளயும் ஏதோ இருந்திருக்கு பாரேன் !"

எல்லோரும் Background ல் பொருத்தமா ... "அந்த வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவரே ......." பாட்ட நினைச்சுப் பார்த்துக்கோங்க.

எச்சரிக்கை:
இந்த தொடரை படித்து, இந்நேரம் கிறுக்கனின் ரசிகையாக ( கிறுக்கனுக்கு எப்பவும் ரசிகைங்க மட்டும் தான் ) ஆகி இருப்பவர்கள், தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் )

தேவையில்லாத பின் குறிப்பு : 
சாப்பிட்டு முடித்து, மயக்கம் தெளிந்த பின், கிறுக்கன் எவ்வளவு தடுத்துப் பார்த்தும் கேட்காமல், வாய்க்கா கொடுத்த வாக்கு மூலம் :
"டேய், எப்படியோ கஷ்டப் பட்டு நடந்து வந்து சேர்ந்துட்டோம் டா, சரி நீங்க வர்ற வரை அந்த சத்திரத்துல தூங்கலாம்னு படுக்கும் போது, ரொம்ப கச கச ன்னு இருக்குன்னு, T-Shirt ஐ கழற்றி பக்கத்துல வச்சிருந்தான். கொஞ்சம் அசந்த சமயத்துல, அந்த பிச்சைக்காரன் அதை சுட்டுட்டான். நம்ம கிறுக்கன், அவன் கிட்ட எவ்வளவோ சண்டை போட்டு அதை பிடுங்க பார்த்தான், அவன் இவன மாதிரி கிறுக்கன் இல்ல, ரொம்ப தெளிவா எடுத்து மாட்டிட்டு, எங்க முன்னாடியே படம் காட்டிட்டு இருந்தான். கொஞ்ச நேரம், சண்டை போட்டு, போராடி, அப்பறம் கெஞ்சி, கூத்தாடி, அப்பறம் பேரம் பேசி, ஐஸ் வச்சு எதுவும் படியாம, கடைசில வள்ளல் பட்டம் எடுத்துக்கிட்டான். 
ஆனா பிச்சைக்காரன் கூட தாங்க முடியாத குளிர, நம்ம கிறுக்கன் தாங்கினானே, ச்சே, இவன் கிரேட் டா !" ன்னு சிரிக்காம சொல்லி முடிச்சான்.

Thursday, January 1, 2009

புத்தாண்டு வாழ்த்துகள் - 2009 !


வளம் கொழிக்கட்டும், வாழ்க்கை இனிக்கட்டும்,

மகிழ்ச்சி பொங்கட்டும், மனம் நிறையட்டும்,

அமைதி நிலவட்டும், அன்பு மலரட்டும்,

நிம்மதி நம் வாழ்வில் நிரந்தரமாய் தங்கட்டும்,

மேல்நாட்டு வணிகம் பெருகட்டும், மோகம் குறையட்டும்,

 

வாய்ப்புகளும், வெற்றிகளும் நிரம்பப் பெற்று,

பூத்துக் குலுங்கட்டும் இந்த புத்தாண்டு !


நட்புடன்,  

பாலகுமார்.