இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில்
இணையத்தின் தேவை இன்றியமையாதது. டயல்-அப் இணைப்பில் இருந்து பிராட்பேண்ட் மற்றும் அலைபேசி
மூலம் இரண்டாம் தலைமுறை (2ஜி), மூன்றாம்
தலைமுறை (3ஜி) என்று இணைய வேகம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக கணினியையும்,
அலைபேசியையும் இணைத்த புதிய தொழில்நுட்பம் இன்று சந்தையில் சக்கை போடு
போட்டுக் கொண்டிருக்கிறது. ”வில்லைக் கணினி”(tablet pc) என்று சொல்லக்கூடிய இந்த கையகல கணினியில் அலைபேசிக்கான
வசதிகள் மட்டுமின்றி சிறிய அளவில் ஒரு கணினி செயல்படுவதற்கான தொழில்நுட்பமும் அடங்கியுள்ளது.
தற்பொழுது பரவலாகிக் கொண்டிருக்கும்
மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைபேசி இணைப்பு
மூலம் அதிவேக இணைய வசதி (சராசரி 2 Mbps)
கிடைத்தாலும், அதை அலைபேசி மூலமாக இயக்குவது சற்று
சிரமமான ஒன்று தான். ஏனெனில் தற்பொழுதுள்ள அலைபேசிகளில் உள்ள மென்பொருள் மற்றும் வன்பொருள்
அமைப்பு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதை மனதில் வைத்தே தயாரிக்கப்பட்டவை, அவற்றில் இணையத்தில் உலாவுவதற்கான வசதிகள் சிறிதளவே உள்ளன. எனவே பெருகி வரும்
இணைய பயனீட்டாளர்களின் தேவையைக் கருதி, தற்பொழுது புதிதாக சந்தைப்படுத்தப்
பட்டிருக்கும் இந்த வில்லைக் கணினிகள் பேசும் வசதி மற்றுமின்றி டேட்டா பறிமாற்றத்திற்கும்
இலகுவானதாய் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒரு கணினியின் சீரிய செயல்பாட்டிற்கு அதில் நிறுவியிருக்கும் இயக்குதளம் (operating system) முக்கிய பங்கு வகிக்கிறது. அது போலவே இந்த வில்லைக் கணினி இயங்குவதற்கும் இதில் நிறுவப்பட்டிருக்கும்
இயக்குதளம் இன்றியமையாதது. இந்த இயக்குதளம் எளிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும், பல்வேறு பயன்பாடுகளுக்குத் தேவையான நிரல்களை இயக்குவதற்கு தோதானதாகவும் இருத்தல்
அவசியம். நாம் இப்பொழுது சாதாரண அலைபேசியில் கூட அலாரம், கேல்குலேட்டர்,
பன்பலை வானொலி என ஏகப்பட்ட வசதிகளை உபயோக்கிறோம். இவையனைத்தும் இணையம்
சாராத பயன்பாடுகள் (applications). ஆனால் இதே அடிப்படையில் வில்லைக் கணினி மூலமாக இணையம்
சார்ந்தும், சாராமலும் இன்று இலட்சக்கணக்கான
பயன்பாடுகள் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று நவீன வடிவமைப்பில் வெளிவரும் வில்லைக் கணினியை பார்த்தவுடன் நாம் முதலில்
கேட்கும் கேள்வி, “இது ஆண்ட்ராய்டு
ஃபோனா?” என்பது தான். ஆண்ட்ராய்டு என்பது புதியரக அலைபேசி,
ஸ்மார்ட்ஃபோன் மற்றும் வில்லைக் கணினியை இயக்கப் பயன்படும் ஒரு இயக்குதளம்
தான். இது, கூகுள் மற்றும் சில நிறுவனங்களின் கூட்டமைப்பான “”ஓபன்
ஃஹேண்ட்செட் அலையன்ஸ்”” (open handset alliance) மூலம் வெளிவரும் ஒரு இலவச மென்பொருள் (open source). இது லினக்ஸ்
(linux) இயக்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
இதன் வெற்றியின் இரகசியம் என்னவென்றால், ஒரு நிறுவனத்திற்கு மட்டும் சொந்தம் என்றில்லாமல் பலதரப்பட்ட அலைபேசி நிறுவனங்களும்
இந்த இயக்குதளத்தை தங்கள் அலைபேசியில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதே போல ஆண்ட்ராய்டு
நிறுவப்பட்டுள்ள ஒரு அலைபேசியிலோ, வில்லைக் கணினியிலோ எந்தவிதமான
ஒரு மூன்றாம் நபர் (third party) வடிவமைத்த
பயன்பாட்டினையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஷேர் மார்க்கெட் குறித்த ஒரு பயன்பாடு உங்களுக்கு உபயோகமாக
இருக்கும் என நினைக்கிறீர்கள், ஆனால் அது உங்கள் அலைபேசியில்
இல்லை. இப்பொழுது உங்கள் அலைபேசியில் ஆண்ட்ராய்டு இயக்குதளம் இருந்தால், இணையத்திலிருந்து ஷேர் மார்க்கெட் தொடர்பான தகுந்த பயன்பாட்டை (apps) தரவிறக்கம்
செய்து அதை உங்கள் அலைபேசியில் நிறுவிக் கொள்ளலாம். இப்படி, உலகம் முழுவதுமாக இலட்சக்கணக்கான பயன்பாடுகள்
இணையம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. அந்த பயன்பாடுகள் இலவசமாகவோ இல்லை குறிப்பிட்ட
விலையிலோ இருக்கலாம்.
நிற்க நேரமின்றி ஓடுகின்ற வாழ்க்கை முறை பரவலாகிக் கொண்டிருக்கும் சமூகத்தில், உலகத்து நிகழ்வுகள் அனைத்தையும் தரவுகளாக்கி
விரல் நுனியில் தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பத்தின் தேவை இன்றியமையாததாகிறது. மக்களின்
தேவைக்குத் தீனி போட புதிய புதிய நுட்பங்களும் வந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றைய
உலகில் அலைபேசியின் வருகை மூலமும், அதன் மூலம் இணையத்தை எளிதாக
இயக்கும் வசதியும் அதற்கொரு சிறப்பான மற்றும் எளிய கருவியாக உருவாகி இருக்கும் ஆண்ட்ராய்டு
இயக்குதளத்தின் வளர்ச்சியும் பயன்பாடும் பிரமிக்க வைக்கிறது.
******
Short, Sweet and Simple intro to Android.
ReplyDeleteGood Post !!!
- Madhu
Good post....
ReplyDeleteஆண்ட்ராய்டு பற்றி எதுவுமே தெரியாத நான், இப்போது ஓரளவு தெரிந்து கொண்டுள்ளேன்.
ReplyDeleteஇது எளிய அறிமுகம் மட்டுமல்ல; என்னைப் போன்று பலருக்கும் பயன் தரும் அறிமுகம்.
மிக்க நன்றி.
ஆண்ட்ராய்டு குறித்த தங்கள் பதிவு அதைக் குறித்த பல சந்தேகங்களைப் போக்கியது. பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஎளிய தமிழில் ஒரு இனிய அறிமுகம்....
ReplyDelete(இயக்குதளம் சரியான வார்த்தை தானா ? ....... இயக்குபொறி சரியாக இருக்குமா ? )
-மதன்
தலையைப் பிச்சிக்கிட்டு இருந்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி ....
timely and simple ..keep it up..look forward similar....M.Palaniappan SDE Ellis
ReplyDeletetimely and simple ..keep it up..look forward similar....M.Palaniappan SDE Ellis
ReplyDeleteVERY GOOD AND USEFUL POST.
ReplyDeleteExpect more posts regarding apps for ANDROID.
RaveendranMuthu.
Madurai.
VERY GOOD AND USEFUL POST.
ReplyDeleteExpect more posts regarding apps for ANDROID.
RaveendranMuthu.
Madurai.
Very good and informative post.Expect u to write about apps and more .
ReplyDeleteRaveendranMuthu