Monday, April 2, 2012

நான் மதுவருந்த மறுப்பதற்கு காரணமிருக்கிறது

பரிசுத்தங்கள் போர்த்தியிருக்கும்
பாதாள கிணற்றின் ஆழத்தில்
யட்சிகள் காவல் நிற்க
அமிழ்த்தியிருக்கும் மனக்குடுவை

உள்ளே முடம் வீசும் திராவகம்
வெளியே ஒரு துளி தெறித்தாலும்
சாக்கடைப் புழுவாய் உருமாற்றம்

நிரம்பிக் கொண்டிருக்கிறது குடுவை
சொட்டுச் சொட்டாய்... சொட்டுச் சொட்டாய்...

நீங்கள் மதுவருந்த மறுப்பதற்கான காரணம் புரிகிறது.



படம் உதவி: இணையம்

4 comments:

  1. Tamil la than iruku..but sathiyama onumea puriyala pa...

    ReplyDelete
  2. Tamil la thaan iruku but sathiyamaa onumea puriyala pa...

    ReplyDelete
  3. appo kudikiravanga ellam manasu suthama irukkiravangala bala?
    maha

    ReplyDelete
  4. 'மதுவருந்தினாலும் சில விசயங்கள் வெளிவராது என்று' சமீபத்தில் ஹாய்மதனில் வாசித்ததாய் ஞாபகம். கவிதை அருமை.

    ReplyDelete