Wednesday, May 5, 2010

பெயரில்லாதவை - 05/05/2010


எனக்கு தெரிந்த குட்டிப் பசங்களுக்கு கணினி சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் அப்பொழுது தான் முதன் முறையாக கணினியைக் கையாள்கிறார்கள். எனவே முதலில் "பெயிண்ட்" அப்ளிகேஷனை திறந்து காண்பித்தேன். பிறகு அவர்களே ஒவ்வொருவராக "மௌஸை" பிடித்து இயக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு குட்டிப் பையன் "மௌஸை" இயக்க சிரமமாய் இருந்ததால்,  ரொம்ப ஆர்வக்கோளாறில் தன் சுட்டுவிரலைக் கொண்டு "மை கம்ப்யூட்டர்" ஐகானை சுட்ட ஆரம்பித்து விட்டான்.  எனக்கு சிரிப்பு வந்து விட்டது.  மானிட்டருக்குள்ளே போக இருந்தவனை ஆசுவாசப் படுத்தி, "மௌஸ்" செயல்பாடு பற்றி விளக்க ஆரம்பித்தேன். பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பொடியன், "அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" ன்னு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி பார்த்தான். நான் பல்பை பெற்றுக் கொண்ட திருப்தியோடு பயிற்சியைத் தொடர்ந்தேன்.

**************************************************************************************

குறுந்தகவலில் வந்த ஒரு துணுக்கு:

"மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரனும்னா கல்லூரித் தேர்வையெல்லாம் T20 கிரிக்கெட் முறைக்கு மாற்றனும். தேர்வை ஒரு மணி நேரமாக் குறைச்சு,  இருபது மதிப்பெண்ணுக்கு வைக்கனும். ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும். வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும். தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு முறை "அடிஷ்னல் ஆன்ஸர் ஷீட்" வாங்கும் போதும் "சியர் கேர்ள்ஸ்" நடனமாடனும்." 

**************************************************************************************

சமீபத்திய எனது "ட்விட் ஹிட்ஸ்"

3இடியட்ஸ் தமிழ் வெர்ஸனுக்கு யாராரையோ யோசிக்கிறாங்க. என்னோட டெரர் காம்பினேஷன்: பிரசாந்த், அப்பாஸ், ஸ்ரீகாந்த் #செத்தான்எதிரி.

வீடெல்லாம் ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படுற, ஒட்டடையே வீடா இருக்கேன்னு சிலந்தி என்ன கவலையா படுது? #ஜே.ஜே #டயலாக்

மந்தபுத்தியுள்ள செம்மறி ஆட்டுக் கூட்டம் மட்டுமல்ல, புத்திசாலி வெள்ளாடுகளும் கசாப்புக் கடைகளுக்குத் தான் கொண்டு செல்லப்படுகின்றன. #தேர்தல்

**************************************************************************************

வலைமனை தளத்தில், சுகுமார் சுவாமிநாதன் அவர்கள் ஒரு படம் போட்டு அதற்கு நம் கமெண்ட் கேட்டிருந்தார். நான் சொன்னது அவருக்குப் பிடித்திருந்தது போல. அந்த படமும், அதற்கு என் கமெண்ட்டும், அவரது அனிமேஷனும் உங்கள் பார்வைக்காக (ரொம்ப லேட் ஆகிருச்சோ?)







**************************************************************************************
நன்றி, மீண்டும் சந்திப்போம் !
**************************************************************************************

11 comments:

  1. டச் ஸ்க்ரீன்!!
    ஹா ஹா.... ஹைடெக் தலைமுறைல இப்போ எல்லாம்....!!
    ரசித்தேன்... :)

    ReplyDelete
  2. T20 Exam Format - Superb!!!

    Womens T20 World-cup நடக்குதாமே,
    அங்கே பசங்க Cheer Leaders-ஆ மாறி ஆடுறாங்களா??

    ReplyDelete
  3. /இன்னொரு பொடியன், "அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" /

    !!

    /நான் பல்பை பெற்றுக் கொண்ட திருப்தியோடு /

    :-))

    ReplyDelete
  4. ஹாஹஹ்ஹ்ஹஹ்ஹ்ஹா

    ரசித்தேன் டுவீட்டுகளும் கலக்கல்

    பல்பு மேல பல்பு வாங்கி பாடம் நடத்த வாழ்த்துகள்

    ReplyDelete
  5. //பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த இன்னொரு பொடியன், "அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" ன்னு சொல்லிட்டு என்னை ஒரு மாதிரி பார்த்தான்//

    செம பல்பு. :)

    பாவம்ங்க நீங்க

    போட்டோ கார்ட்டூன் கமெண்ட்ஸ் சூப்பரோ சூப்பர். சுகுமார் சுவாமிநாதன் பிளாக்லியே பார்த்திருந்தேன்

    ReplyDelete
  6. ரசித்தேன் :)

    ReplyDelete
  7. அண்ணே, அவன் "டச் ஸ்க்ரீன்" ன்னு நினைச்சு தொட்டிருப்பாண்ணே !" /

    super bala, i liked it very much
    photo comments nalla irunthathu.

    ReplyDelete
  8. hey super pa..

    ippa ellaam kutti pasanga thaan remba clever a irukaanga..avanga kitta vaai kodukave koodaathu..

    comment nice....animation also nice..

    thangal peyarillaathavai (rasippu thanmai) engalaiyum rasikka vaikuthu...

    ReplyDelete
  9. //ஒவ்வொரு பதினைந்து நிமிடத்துக்கும் "ஸ்ட்ராடெஜிக் ப்ரேக்" விட்டு புத்தகத்தை ரெஃபர் பண்ண அனுமதிக்கனும். வாத்தியார் நடத்தாத பகுதியில் இருந்து கேள்வி வந்தா, "ஃப்ரீ ஹிட் மார்க்ஸ்" கொடுக்கனும். தேர்வில் முதல் முப்பது நிமிடம் "பவர்ப்ளே", தேர்வு அறையில் சூப்பர்வைஸர் யாரும் இருக்கக் கூடாது//

    T20 முறையில் இருந்து இவைகளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் உண்மையில் அறிவு பெருகும்.

    ReplyDelete
  10. //வீடெல்லாம் ஒட்டடையா இருக்கேன்னு நீ கவலைப்படுற, ஒட்டடையே வீடா இருக்கேன்னு சிலந்தி என்ன கவலையா படுது? #ஜே.ஜே #டயலாக்//

    ரசித்தேன். வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. //பிரசாந்த், அப்பாஸ், ஸ்ரீகாந்த் #செத்தான்எதிரி//

    Kalakkal :)

    ReplyDelete