இட்ட முட்டை இரண்டில்
ஒன்றை மட்டும் பொரித்து
டயட் கன்ட்ரோலில் வளர்க்கின்றன,
அபார்ட்மெண்ட் தாழ்வாரத்தில்
கூடுகட்டும் புறாக்கள்.
*****************************
கண்ணாடித் தொட்டி முழுதும்
அழகழகாய் மிதக்கின்றன
வண்ணமயமாய்
பிளாஸ்டிக் மீன்கள்,
தண்ணீர் மாற்றும்
தொல்லையின்றி.
*****************************
சக்கரை பொரிகடலை
சம்பளமின்றி
முனியோட்டம் விரட்டி
கூர்க்கா வேலை பார்க்கிறார்
முச்சந்தி வீட்டின் முன்
கம்பிக்கூண்டு பிள்ளையார்.
*****************************
நல்லாஇருக்கு
ReplyDeleteதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
அசத்தல் !
ReplyDelete-மதன்
முதலிரண்டும் ந்ன்று. அதிலும் 'டயட் கண்ட்ரோல்' என்பது சரியா.?
ReplyDeleteநன்றி பத்மா.
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஆதி, முதலில் "போஷாக்குடன்" என்று தான் எழுதினேன், பிறகு இது தான் நிதர்சனம் போல தோன்றியது.
நன்றி bogy.in, நன்றி மதன்.
ReplyDelete1. வருத்திற்குறிய உண்மை
ReplyDelete2. அதுக்கும் தண்ணீர் மாத்தனும்பா :)
3. ஹாஹா
எல்லா கவிதையுமே நல்லா இருக்குங்க..