”சிவகார்த்திகேயன்” - இன்று தமிழகம் முழுதும் பேசப்படக்கூடிய ஒரு பெயராக மாறியிருக்கிறார். இது அவரது தொடர் உழைப்புக்கும், கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தும் சாமர்த்தியத்துக்கும் கிடைத்துள்ள வெற்றி. அவரைப்பற்றி, ”நமது பக்கத்து வீட்டுப் பையன் போல, நாம் பார்க்கும் போதே விறுவிறுவென வெற்றிப்படிகளை கடந்து கொண்டிருக்கிறான்” என்று பெருமிதம் கொள்வோர் ஒரு புறமென்றால், “நம்ம மாதிரி சாதாரணமா சுத்திட்டு இருந்த பய, அவனுக்கு வந்த வாழ்வா” என பொறாமை கொள்வோரும் மறுபுறம் உண்டு. போதாக்குறைக்கு இந்த விஜய் டீவி செய்த / செய்யும் அலப்பறைகள், ஓவர்-பில்டப்புகள் வேறு. அதே ரூட்டில் விகடன் தொடங்கி பெரும்பாலான பத்திரிக்கைகள், டீவி, இணைய ஊடகங்கள் அனைத்தும் ஏகத்துக்கும் அவரை “அடுத்த சூப்பர் ஸ்டார்” ரேஞ்சுக்கு ஏற்றி வைத்திருக்கின்றன. ”இதெல்லாம் மாய பிம்பங்கள். ஒரு படம் ஊத்திக்கொண்டால், இந்த காக்கா கூட்டம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்” என்று சிவகார்த்திகேயனுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ம்ம்ம்... நாம் விரும்பி என்ன செய்ய !
இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு வந்திருக்கும், சிவகார்த்திகேயன் நடித்த “மான் கராத்தே” படத்தை சென்ற வாரயிறுதியில் பார்த்தோம். ”இது அப்படி இருந்திருக்கலாம், அது இப்படியிருந்திருக்கலாம்” என்று சில பல குறைகள் தெரிந்தாலும் அதை நான் சொல்லி யாரும் கேட்கப்போவதில்லை என்ற கான்ஃபிடன்ஸ் ஹெவியாக இருப்பதால், ”படம் அவ்வளவு மோசமில்லை” என்ற ஒன்றை மட்டும் கூறிக்கொள்கிறேன். ஆனால் “உலகத்திரைப்பட வரலாற்றில் இல்லாத சில பல ஸ்பெஷல்கள் இந்தப்படத்தில் ஆங்காங்கே தென்பட்டன. அவை மட்டும் இங்கே...
வொய் “மான் கராத்தே” பிகம்ஸ் ய மஸ்ட் ஸீ மூவி, லெட்ஸ் ஸீ தீஸ் பாய்ண்ட்ஸ்....
ஹீரோ அறிமுக பாட்டில் சிவகார்த்திகேயன் வேகமா ஓடி வர்றதப்பார்த்து “ஆஹா அடுத்த தளபதி வந்துட்டாரா, போச்சுடா” என்று கிர்ர்ராகி உட்கார்ந்துட்டேன். நல்லவேளை பாட்டு முடிந்தவுடன் நம்ம கண்ணை குத்தி “பஞ்ச் டயலாக்” எல்லாம் பேசாமல், கொஞ்சம் பீட்டரோடு நிறுத்திக் கொண்டார்.
குத்து பாட்டில் அனிருத்துக்கு கொடுத்த இண்ட்ரோவிலே ஆடிப்போயிருக்கும் ஆடியன்ஸுக்கு மேலும் ஒரு இடியாய் ஏ.ஆர்.முருகதாஸைக் காட்டினாங்க. அவர் (”அவர்”னா நம்ம) குட் டைம், தலைவர் டான்ஸ் எதும் ஆடி மரண பீதி ஏற்படுத்தாம ஜெண்டிலா நடந்து கேமராவைத் தாண்டி சென்றுவிட்டார்
டைரக்டர் சிவகார்த்திகேயனுக்கு “புலிக்குட்டி தம்பி பூனைக்குட்டியோட கீரிப்புள்ள ஹேர்ஸ்டைல்” தான் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் அது “கரையான் புத்துக்குள்ள போன கரப்பான் பூச்சி” அளவுக்கு தான் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. சிவா தான் மாஸ் ஹீரோ ஆகிட்டாப்ளேல, அதை வைத்தே சமாளித்து விட்டார்.
காலங்காலமாய் தமிழ் சினிமாவில் தோழிகள் கேரக்டர் என்றாலே “சுமார் மூஞ்சி குமாரி”களேயே பார்த்த வந்த ரசிகர்கள், இதில் “நச்” காஸ்டியூமில் ரெண்டு “ரிச்” கேர்ள்ஸை பார்த்து பரம திருப்தி அடைவதாக உளவுத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன
சிவா அப்படியே வில்லன் கால்ல விழுந்து, மண்ணுல புரள்றாப்புல ஒரு அழுகாச்சி சீன் வச்சா போதும், லேடீஸ் சைடு செம செண்டிமெண்ட் ஃபீலிங்கா இருக்கும்னு ஐடியா கொடுத்த உதவி இயக்குநர் யாரா இருந்தாலும் அவருக்கு ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. “நீயெல்லாம் நல்ல வருவ, தம்பி !”
”குங்பூ பாண்டா” படத்தோட தழுவல் தான் இந்தப்படம்னு அரசல் புரசலா வதந்தி வந்ததே என்று நண்பரிடம் கேட்டேன். அவர் ”இந்தப் படத்துல பாக்ஸிங் தானே இருக்குது, குங்பூ இல்லேல, பிறகெப்படி இது அந்தப்படத்தோட காப்பி ஆகும்”னு விஞ்ஞானப்பூர்வமா பதில் சொன்னார். நான் அப்படியே ஷாக் ஆகி ஆமாம்னு ஒதுங்கிட்டேன்
குமரன் S/o மகாலட்சுமி படத்துல ஐஸ்வர்யா செய்த கேரக்டரை இந்த படத்துல சிவாவோட நண்பரா வர்றவர் செய்திருக்கிறார் போல. சிவா வில்லனை அடிக்கும் போது அவர் காட்டும் ரியாக்ஷன் எல்லாம் “தாருமாறு, தக்காளி சோறு”
அப்புறம், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... படத்துல பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டும் போதே தெரிஞ்சுருச்சு. இது சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான்னு. (இது சைடு கேப்புல சேவல் வெட்டுற சின்ன விளம்பரம், கண்டுக்காதீங்க!)
அவ்ளோதான்பா !!!
******
விளக்கமாற்றுக்கு பட்டுக் குஞ்சமா? மொக்கைப் படத்துக்கு ...
ReplyDeleteஇப்போ நாங்கெல்லாம் படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்களா ? இல்ல வேணாம்னு சொல்றீங்களா? ......ஒரே குழப்பமா இருக்கு பாஸ் ....
ReplyDeleteஹன்சிகா?!
-மதன்
\\”குங்பூ பாண்டா” படத்தோட தழுவல் தான் இந்தப்படம்னு அரசல் புரசலா வதந்தி வந்ததே என்று நண்பரிடம் கேட்டேன். \\
ReplyDeleteநீங்க இந்த வீடியோவா முழுசா பாருங்க பாஸ், மத்ததை அப்புறம் பேசிக்கலாம்!!
https://www.youtube.com/watch?v=v8RkNHmSgns