Saturday, September 7, 2013

பெயரற்றவன் கனவு

குழு நிழற்படங்களின் ஓரத்தில்
பாதியாய் தெரிபவன்

எதற்கான எதிர்வினையாயும்
தலைகவிழந்த ஒற்றை சிரிப்பை உதிர்ப்பவன்

நன்றியறிவித்தலில்
தன் பெயர் விடுபட்டதை
பொருட்டாக எண்ணாதவன்

கடைசிக்கு இரண்டு வரிசை முந்திய
இருக்கையை எப்போதும்
தேர்ந்து கொள்பவன்

மஞ்சள் முடிந்து 
பச்சை தெரியக் காத்து நிற்பவன்

அவனுக்குள்ளும் இருக்குமோ
ஆளம்புசேனை கொண்டு
பிரபஞ்சத்தைக் கட்டியாளும் பெருங்கனவு !


6 comments:

  1. //குழு நிழற்படங்களின் ஓரத்தில்
    பாதியாய் தெரிபவன்//

    இந்துவில் வந்த நம் கீழக்குயில் குடி போட்டோ நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  2. சென்ற வாரம் எனது ரசனையின் டாப் வரிசையில் இடம் பிடித்த இந்தக்கவிதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    http://jeevanathigal.blogspot.com/2013/09/02-to-08-09-2013.html

    ReplyDelete
  3. ""மஞ்சள் முடிந்து
    பச்சை தெரியக் காத்து நிற்பவன்" கனவு,நனவானால் நல்லதே நாட்டிற்கு என நம்பலாம்.

    ReplyDelete