Tuesday, May 28, 2013

மழலை


யானை நடை போட்டு
டொண்டாய்ங் ஆடுகிறோம்
கன்னத்தை பொப் செய்து
பலூன் மூட்டை உடைக்கிறோம்
காக்கா நரிக்கதைக்கு
கைகால் முளைக்கவிட்டு
தூரப் பயணம் போகின்றோம்

மறந்து போன பால்யம் எல்லாம்
சட்சட்டென துளிர்விட்டு
துள்ளல் நடை போடுமிந்த
வரம் தந்து சிரிக்கின்றாள்
மகளென்னும் தேவதை.


****
படம் உதவி: http://www.priestsforlife.org/blog/index.php/todays-pro-life-reflection-176/father-watching-his-infant-sleep


4 comments:

  1. அழகு... அருமை...

    ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மழலை பேசும் அழகிய கவிதை

    ReplyDelete
  3. சரியாகச் சொன்னீர்கள்
    குழந்தைப் பருவத்தின் மகிழ்வினை மீண்டும்
    குழந்தைகள்தான் நமக்குத் தருகிறார்கள்
    நாம் அவர்களுக்கு ஏதோ தருவதான
    தவறாக உணர்ந்து அலுத்துக் கொள்கிறோம்
    மனம்தொட்ட கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. குழந்தைகள் நம் பால்யத்தை மீட்டெடுக்கிறார்கள் என்பதை நினைவுறுத்தும் அழகான கவிதை.

    ReplyDelete