Monday, January 21, 2013

சூறாவளி காற்றில் சுண்டல்


கூகிள் பிளசிலும், ஃபேஸ்புக்கிலும் அவ்வப்பொழுது கிறுக்கியவை, இங்கேயேயும்....

பிறந்த வீட்டுக்கு சென்றால் போதும், பெண்களின் சவுண்டு சிஸ்டம் தானாகவே சிலபல டெசிபல் அதிகரித்துக் கொள்கிறது.

***********************************
இடர்க்காலங்களில் வலியதன் மௌனமும் தன்னை அண்டியிருக்கும் எளியதற்கான துரோகமே !

***********************************
வயிறைக் கட்டி வாயைக் கட்டி சீட்டு கட்டி சிறுகச் சிறுக சேமித்து மொத்தமாய் செலவழிக்கும் நடுத்தரவர்க்கம்.

***********************************
ரோகித் சர்மாவுக்கு எங்கூட்டு சின்னப்பையன் வைத்திருக்கும் பெயர் “சொங்கி மங்கி” :)

***********************************
புதிய வாழ்க்கை முறைக்குப் பழகி விட்டோம். கரண்ட் இருந்தால்   ஒரு பக்கம் ஜெராக்ஸ் எடுக்க ஒரு ரூபாய், கரண்ட் இல்லாவிட்டால் மூன்று ரூபாய்.

யாரைக் குறை சொல்ல ?

***********************************

போங்க தம்பி, நாங்கல்லாம் மிளகா பஜ்ஜிக்கு காரச்சட்னி வச்சு சாப்பிட்றவய்ஙக.. காரக்குழம்புக்கு பட்ட வத்தல் தொட்டுக்கிறவய்ங்க... இங்க வந்து உப்புமாக்கு சக்கரை கேட்டுகிட்டு !

#பிரபல இலக்கியவாதியின் பன்ச்

***********************************
பொருளின் தரத்தை விட,பொருளைப் பற்றிய எதிர்பார்ப்புளை ஏற்றி விட்டு கல்லா கட்டும் வித்தையை எவ்வளவு திறமையாக செய்கின்றனர் திரைத்துறையினர் !

#ஓவர் ஹைப் உடம்புக்கு ஆகாது மச்சி !!!

***********************************
இரண்டு மூன்று வருடங்களாக வியாபாரம் ஆகாமல் இருந்த, பாண்டியராஜனின் ஏதோவொரு படத்தை நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினார்களே... விஸ்வரூபம் அது மாதிரி இல்லையே!

#கோயிந்துகொஸ்டீன்

***********************************
"எனக்கு என் புருசன் தான், எங்களுக்கு எப்பவும் ........... கடை தான்”  - மதுரையில் இன்று பார்த்த ஒரு விளம்பரம்.

#என்னய்யா இப்படி இறங்கிட்டீங்க !!!

***********************************
நான்: ”நாங்கெல்லாம் சூறாவளி காத்துல சுண்டல் சாப்பிடுறவிங்க, அடைமழைல அவல் சாப்பிடுறவிங்க !”

மைண்ட்வாய்ஸ்: இதெல்லாம் அந்தந்த சீசன்ல எல்லாரும் பண்றது தான். இதெப்போய் பெரிசா சொல்லிக்கிட்டு... பேசாம போப்பா!

#ஸ்டேடஸ்அப்டேட்

***********************************
தன் குறட்டை சத்தம் கேட்டு, தானே அலறியடித்து தூக்கம் கலைந்து எழுந்து உட்காரும் நிலை நம் எதிரிக்கும் வரக்கூடாது.

***********************************
வெளியூர் கிளைகளிலிருந்து வரும் அலுவல தொலைபேசி அழைப்புகளில் பேசுவது “சாரா” இல்லை “மேடமா” என புலப்படாத சமயங்களில் சும்மா பொதுவாகவே பேசி வைத்ததும் வரும் பாருங்க ஒரு சங்கடம் .... 

#அலுவலக அசம்பாவிதங்கள்

***********************************
பெருநகர மூட்டைகளிலிருந்து ஒருவழியாக அவிழ்த்துக் கொண்டு, ஐந்தாறு ஊர்திகளில் தொடர் பயணம் செய்து தாமதமாக வீடு சென்று “அக்கடா” என்று தலை சாய்க்குமுன் நம் வரவுக்காக வாசலையும் அலைபேசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு, சமைத்த பலகாரங்களோடும் பரிதவிப்போடும் காத்துக் கிடந்த தாய் தகப்பன், பெண்டு பிள்ளைகளின் கண்ணீர் ததும்பும் சிரிப்பில்... கொண்டாடத்தானே பண்டிகை... அன்பும் நேசமும் எங்கெங்கும் பரவட்டும், அனைவருக்கும் வாழ்த்துகள் !

***********************************
யப்பா... இந்த இண்டெலக்சுவல் வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருக்கிறது !

***********************************

4 comments:

  1. // யப்பா... இந்த இண்டெலக்சுவல் வேடத்தைப் போட்டுக் கொண்டு எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடிக்க வேண்டியிருக்கிறது !//

    ஆடிய ஆட்டம் என்ன !! ???

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  2. "பிறந்த வீட்டுக்கு சென்றால் போதும், பெண்களின் சவுண்டு சிஸ்டம் தானாகவே சிலபல டெசிபல் அதிகரித்துக் கொள்கிறது".
    கரண்டியால் அடிபட்ட சப்தம் இங்குவரை கேட்கிறது "இதெல்லாம் சகஜமப்பா " அடிக்கிற கைதான் அணைக்கும்

    ReplyDelete
  3. சுண்டல் சூப்பர். நீங்க குட்டிக்கரணம் அடிச்சத ஒத்துக்கிட்டீங்க; நாங்க கொஞ்சம் யோசிக்கிறோம். எங்களுக்கும் அச்சம் , மடம், நாணம், அப்புறம் ..... பயிர்ப்பு ...........ஐயையோ, இதெல்லாம் நாம சொல்லக்கூடாதோ. இதுவும் ஒரு வகை குட்டிகரணம் தான் .

    ReplyDelete
  4. சுண்டல் சூப்பர். நீங்க குட்டிக்கரணம் அடிச்சத ஒத்துக்கிட்டீங்க; நாங்க கொஞ்சம் யோசிக்கிறோம். எங்களுக்கும் அச்சம் , மடம், நாணம், அப்புறம் ..... பயிர்ப்பு ...........ஐயையோ, இதெல்லாம் நாம சொல்லக்கூடாதோ. இதுவும் ஒரு வகை குட்டிகரணம் தான் .

    ReplyDelete