Tuesday, May 8, 2012

மனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்



வாகனமியக்குவதன் அரிச்சுவடியை,
சுதந்திரத்தை, தனித்தன்மையை
சொல்லிச் சொல்லி அச்சம் நீக்குவான்

நச்சூதும் சர்ப்ப நாக்காய் நீளும்
சாலைகளின் சூட்சமத்தை,
விதிகளின் புதிர்களை
சதுரங்க நகர்த்தலைப் போல்
ஒன்றொன்றாய் விடுவிப்பான்

தன் குட்டியை வேட்டைக்குப் பழக்கும்
வனமிருகத்தையொத்த லாவகத்துடன்
கர்மசிரத்தையாய் கற்றுத் தருவான்

செல்ல சினுங்கல்களுக்கோ
கொஞ்சலுக்கோ, சிரிப்புக்கோ
திசைதிரும்பாமல்
கனிவாய் பயிற்சியைத் தொடர்வான்.

தாழும் கண்களையும்
பதறும் கைகளையும்
தோள்பிடித்து நேர்செய்து
தன்னம்பிக்கையை வளர்த்தெடுப்பான்.

தகுதிகாண் பருவம் முடிந்து
தனியாய் சிறகடித்து வானம் தொட்டு
திரும்பி கூடடைந்த முதல் நாள்
ஏனோ, அவள் உற்சாகத்தை
கவனமாய் உதாசீனப்படுத்துவான்

கணவன் என்ற இயந்திரத்திற்கு
எழுதியிருக்கும் நிரல் புரியும் நாளில்
அவளும் இதை புன்னகையுடன் கடந்து விடுவாள்.
அதுவரை ....

******
படம் உதவி: http://images.fineartamerica.com/images-medium/angels-vs-demons-patrick-mock.jpg


9 comments:

  1. அருமையாக இருந்தது. ரசித்தேன். ஓர் இடத்தில், தனியே முதல் நாள் போய் வந்த பின் கணவன் உதாசீணப்படுத்துவான் என்பதில் எனக்கு சற்றே புரியவில்லை. சிரமப்பட்டு கற்றுக்கொடுத்தபின் உர்ச்சாகபடுத்தி மகிழ்ச்சியடைவானே தவிர எப்படி உதாசீணப்படுத்துவான்?

    ReplyDelete
  2. superb..real one.....

    me only really understood ur's poem....

    i m enjoying each line......thanks a lot...

    ReplyDelete
  3. It is not only applicable for scooty matter i am sure.experienced a lot!!
    maha

    ReplyDelete
  4. முதலாளி தன் ​பொருளாதார நலன்களுக்காக புதிய ​தொழிலநுட்பங்க​ளை, நவீன கலாச்சாரங்க​ளை கற்றுக் ​கொள்ளச் ​சொல்லி பழகிக் ​கொடுக்கிறான் ​தொழிலாளிகளுக்கு, ஆண் தன் ​பொருளாதார நலன்களுக்காக புதிய ​தொழில்நுட்பங்க​ளை நவீன கலாச்சாரங்க​ளை கற்றுக்​கொள்ளச் ​சொல்லி பழகிக்க ​கொடுக்கிறான் ​பெண்களுக்கு, கற்றுக்​கொண்டவர்கள் தன் எஜமானர்களின் நலன்களுக்கு அவற்​றை பயன்படுத்துவ​தோ நின்றுவிடுவதில்​லை. மனிதகுல வரலாறு இப்படியாக அடுத்த கட்டங்க​ளை ​நோக்கி முன்​னேறிக் ​கொண்​டே இருக்கிறது. நல்ல இலக்கியங்கள் இவற்​றை வாழ்விய​லோடு புரிந்து ​கொள்ளச் ​செய்யும் ​பொழுது ​வெற்றிய​டைந்துவிடுகிறது. நல்ல கவி​தை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வித்தியாசமான களம்....அருமை !!!

    -மதன்

    ReplyDelete
  6. அனைவருக்கும் மிக்க நன்றி !

    ReplyDelete
  7. //அனைவருக்கும் மிக்க நன்றி !//

    அப்புறம் எனக்கு ...?

    ReplyDelete
  8. உங்களுக்கும் மிக்க நன்றி ஐயா :)

    ReplyDelete
  9. எம்புட்டு லேட்டு!!!

    ReplyDelete