Tuesday, January 17, 2012

கந்தழி வட்டப்புள்ளி (அ) தனித்திருப்பவன் காமம்



சதங்கை தெறிக்க ஆடிவந்து
ஆழியை அள்ளிக்குடிக்கும் அலை
கிழக்கு மேற்கு கிழக்கு மேற்கு
என ஏறியிறங்கும் பரமபதம்
மணலும் நுரையும் மீதம்.

உலோகங்களை உருக்கியூற்றும் அச்சில் 
பூஞ்சைக்காளான் பூத்துக் கிடக்கிறது
கோடை தகிக்க, 
தூரத்துவங்குகிறது அமிலமழை.

சன்னல்களற்ற இந்த அறையில்
தங்கிய பிறகு தான்
வானம் சுருங்கத் துவங்கி விட்டது
ஒருமை பன்மை, ஒருமை பன்மை.

தெற்கு நோக்கிப் பறக்கும்
பெயர் தெரியாத பறவைகளே
போய்ச் சொல்லுங்கள்...
மண்ணைத் தின்னும்
தீயைத் தின்னும் ஒருவன் தான் இங்கே 
தங்க முட்டையிட்டுக் கொண்டிருக்கிறான்.

******

4 comments: