என் பரிகாசம், துரோகம்
அலட்சியம், மறுதலிப்பு
அனைத்தையும் புறந்தள்ளி
ஆத்மார்த்தமாய் ஏற்றுக் கொண்டாய் !
உன் கருணை மலர்கள்
மொட்டவிழுக்கும் சிலிர்ப்புகள்
என்னைக் குற்றவாளியாக்கி
கூசச் செய்கின்றன.
எதிர்பார்ப்புகளற்ற உன் அரவணைப்பில்
புழுங்கித் தவிக்கிறேன்.
ஒரு சுடுசொல், சுளிப்பு, அழுகை, வெறுப்பு
ஏதேனும் செய்தாவது
என் ரணங்களைக் கீறி சுத்தப்படுத்து.
அறுவை சிகிச்சை தேவைப்படும்
புரையோடிப்போன புண்ணுக்கு
ஒத்தடங்கள் போதாது.
பொரித்து வெளிவருவேன் என்று
பொறுமையாய் அடைகாக்கிறாய்.
உள்ளே அழுகிப்போயிருக்கையில்,
நிபந்தனைகளற்ற உன் பேரன்பின்
வெப்பம் தாளாமல்
வெடித்துச் சிதறிவிடுவேனோ என்ற
எனது பயம் உனக்குப் புரியவில்லையா?
*************
படம்: இணையம் http://www.mymodernmet.com/profiles/blogs/the-beauty-and-pain-of-love
nice bala!! idhu eppo post panna?i missed to notice it!!
ReplyDeletemaha
very very nice one.....superb...i m reading again and again
ReplyDelete........
வாசிபபோரை யோசிக்கவும், யோசிபபோரை நேசிக்கவும் (குறிப்பாக மனைவியை) வைக்கும் அன்பான வரிகள். வாழ்த்துக்கள் பாலா
ReplyDelete