Wednesday, January 27, 2010

புதுக்குறள் - அதிகாரம் - டைடல்பார்க்

புதுக்குறள் - அதிகாரம் - டைடல் பார்க் - என் இனிய ஐ.டி. தமிழனுக்காக

ரெசியூமில் பொய்சொல்லி சேர்ந்தநல் வேலை
ரெசிசன்வந் தால்போய் விடும்.


எண்ணிமுடிடா அர்யர்செல் லாமில்லை - இல்லையே
மன்னார்அன் கோவிலும் வாய்ப்பு.


ஆப்டியூட் தாண்டிவந் துட்டியா மாப்ளஇரு
ஆங்கில ஜீடிதரும் ஆப்பு.


ராவெல்லாம் போன்பேச்சு ஏசியறை வேண்டாம்போ
கால்செண்டர் ஜோலிகாணல் நீர்.


ஆப்படிக்கும் டீம்லீட் அலறட்டும் சைக்ளோடும்
கேப்பில் தனிஆட்டோ ஓட்டு.


கோக்குடித்து தீர்த்திருப்பாய் கைக்காசை போடாடேய்
கேக்-பர்கர் எல்லாம் வேஸ்ட்.


சோப்போட்டே சாதிப்பார் மற்றெல்லாம் - கம்ப்யூட்டர்
கோடடித்தே செத்தொழி வார்.


அப்ரை சலதுனக்கே ஆப்படித்தால்  டாட்டாபை
தப்பில்லை நீ-கம்பி நீட்டு.


ஆன்சைட்போய் ஆர்குட்டில் போட்டோ-போ டாவாழ்க்கை
பென்ச்சை தேய்த்தே கெடும்.


கல்விதூங்கா மற்கற்ற நற்பயன் கேம்பசில் 
நல்லா-ப்ளே சாகிபென்ச்சில் தூங்கு.


(குறள் வெண்பா முயற்சி...  தளைதட்டினால் சொல்லுங்க. உங்க கருத்தையும் தவறாமல் சொல்லுங்க)
உதவி :
http://ta.wikipedia.org/wiki/வெண்பா
http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

***

4 comments:

  1. thirukural thanthathu thiruvalluvar,indha puthu kural thantha Bala valluvar ku en iniya vaazhthukkal.... :)

    Balakural nallarukula? :)

    ReplyDelete
  2. தளை தட்டுதான்னெல்லாம் பாக்கத் தோணல.அருமை.தொடருங்கள்.

    ReplyDelete
  3. //தளைதட்டினால் சொல்லுங்க//

    அதெல்லாம் எதுவும் நமக்கு தெரியாதுங்க....ஆனா "புது" குறள் ஒன்னு ஒன்னும் fresh ஆக உள்ளது....
    நல்ல நையாண்டி !!!

    -மதன்

    ReplyDelete
  4. அன்பின் பாலகுமார்

    நல்ல முயற்சி - நல்வாழ்த்துகள்

    ReplyDelete