Wednesday, January 20, 2010

ஏதும் கேட்கவில்லையாதலால் ஒன்றும் சொல்லவில்லை.





நடுநிசியில் ஜன்னல் வழியே
மழைத்துளியை
எண்ணிக் கொண்டிருந்தேன்......


தூக்கத்திலிருந்த அப்பா,
சன்னமாய் இருமி விட்டு
ஒருசாய்த்து படுத்துக் கொண்டார்.......


என்ன செய்கிறாய் என கேட்டாலாவது
மழையைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம்.

தகப்பனின் தவிப்பும்,
தனையனின் தயக்கமும் தெரியாமல்
வீசுகிறது குளிர்காற்று.

**********

6 comments:

  1. \\என்ன செய்கிறாய் என கேட்டாலாவது
    மழையைப் பற்றி சொல்லியிருப்பேன்.\\

    கேட்டாலாவது-சொல்லியிருப்பேன்.
    முரணா இருக்கோ..!
    :-)

    ReplyDelete
  2. @ராஜூ
    ...சொல்லிவிடலாம் ன்னு இருந்தா சரியா இருக்குமா ?

    ReplyDelete
  3. மாற்றி விட்டேன் ராஜூ, நன்றி.

    ReplyDelete
  4. அருமை.கொஞ்சம் லேட் கமென்ட்.மன்னிக்க.

    ReplyDelete
  5. @ஸ்ரீ
    காலைல இட்ட இடுகை தான் ஸ்ரீ, சரியான நேரத்தில் தான் வந்திருக்கிறீர்கள், நன்றி.

    ReplyDelete
  6. yethaarththa kavidhai..arumai....

    ReplyDelete