Tuesday, May 26, 2009

மதுரை பதிவர் சந்திப்பு - 24.05.2009


நண்பர் கார்த்திகைப்பாண்டியன், தருமி ஐயா அவர்களின் ஏற்பாட்டில், கடந்த ஞாயிறன்று ரொம்ப சிறப்பா நடந்தது, மதுரை பதிவர் சந்திப்பு.


சாலிசம்பர் அண்ணனை ஏற்கனவே தெரியுமாதலால், சகசமாக ("" போடக்கூடாதுல்ல) பேசினார், ஆனால் பொதுவாக அமைதி தான் ... (ஆனா, அவுங்க கட்சி பற்றிய கேள்விக்கு மட்டும், பட்டாசு .....) 


பதிவில் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்வது பற்றி இளையகவி நன்றாக விளக்கினார். (நண்பர்களை விட்டுக் கொடுக்காமல், ஆனால் நயமாக பேசினார்


தனது பதிவுப்பெயருக்கான விளக்கத்தை "chill-peer" கூறியது ரொம்ப குளுமையாக இருந்தது. ( இனிப்பு, காரம் ஸ்பான்சர் நண்பர் தான்


ரொம்ப சாதாரனமாக, ஆனால் விளக்கமான விடை தேவைப்படக்கூடிய கேள்விகளை அசால்ட்டாக கேட்டு கலகலப்பூட்டினார் வால்பையன். (இவருக்கு 19 வயசு தானாம்.) 


பெயருக்கேற்ற மாதிரி எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார் டக்ளஸ்.  ( தம்பிக்கு நல்ல timing sense) 


அருண் அவர்கள் ரொம்ப formalities எல்லாம் பார்க்காமல் கலகலப்பாக பேசினார். (கடைசீல, உங்க பேனாவை இளைய கவி கொடுத்தாரா இல்லையா ? )


எல்லோருக்கும் ரொம்ப பாசக்காரத்தம்பி ஆகிவிட்டார் அன்பு... ( என்ன சொன்னாலும் நம்புறாருப்பா, ரொம்ம்ம்ப நல்லவர் :) )


தன்னுடைய கருத்துக்களில் இருந்து மாறாமல் நிலையாக பேசினார் ஸ்ரீதர் ( பூ னும் சொல்லலாம், புய்பம் னும் சொல்லலாம், பாமரன் சொல்ற மாதிரியும் சொல்லலாம், விடுங்க சார் :) )


விவாதித்த விஷயங்களை ஊன்றி கவனித்து கருத்து சொன்னார் சூப்பர் சுப்ரா அவர்கள். ( T-Shirt சூப்பர் சுப்ரா சார்


ரொம்ப அமைதியாக, நிதானமாக பேசினார் தேனீ சுந்தர் அவர்கள். ( அமைதியான தேனீ )


தெளிவான நிர்வாகத்திறமையோடு, மக்கள் பேசுவதற்கு புதிய தலைப்புகளை ஆரம்பித்து வைத்தார் கார்த்திகைப்பாண்டியன். ( typical வாத்தியார் :) "இளைய தருமி" னு பெயர் வாங்கிட்டார். )


வந்திருந்த, வர நினைத்த, வராத எல்லாரும் முன்மாதிரியாய் சொன்னது தருமி ஐயாவைத் தான். (Bovonto வாங்கிட்டு வந்தீங்களா, தெரியல


அவசர வேலை காரணமாக சீக்கிரமே கிளம்பி விட்டதால் தேவன்மாயம் அவர்களையும், சீனா ஐயாவையும் சந்த்திக்க முடியவில்லை


தவிர, நன்பர்கள் முருகன், ராஜா, கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டனர்


அப்புறம், நான் பாலகுமர்,  சும்மா வேடிக்கை பார்க்கத் தான் சென்று இருந்தேன்.... ஆனால் நிகழ்ச்சி நிரல் ஏதும் இல்லாமல் நண்பர்கள் அரட்டை அடிப்பது போல, ஒரு சுமூகமான சூழ்நிலை இருந்ததால் சகஜமாக பேச முடிந்தது


அரசுத்துறை, அதிகார வர்க்கம், வரி கட்டுதல், தொலைதொடர்பு,  மென்பொருள், .கலப்பை, தமிழ் எடிட்டர், பின்னூட்டம், மைனஸ் 40 டிகிரி,  zero டிகிரி, கொடைக்கானல், மதுரை, அமைச்சர், சமூகம், கேள்வி, பாமரன், கவுஜ, இன்னும் பல விஷயஙளை கலந்து கட்டி பேசினோம்... 


மொத்ததில் மனநிறைவு தந்த சந்திப்பு...   


நண்பர்களே, மீன்டும் விரைவில் சந்திப்போம்.


 நண்பர்களின் இடுகையையும் படியுங்கள்.


http://dharumi.blogspot.com/2009/05/313.html

http://anbu-openheart.blogspot.com/2009/05/24-05-2009.html

http://abidheva.blogspot.com/2009/05/blog-post_25.html