Wednesday, November 5, 2008

பதிவர்களே ! என் முடிவு சரிதானா ?

எல்லாருக்கும் வணக்கம்ங்க !

நான் பாட்டுக்கு சிவனேன்னு, நான் உண்டு என் வேலை உண்டுன்னு அமைதியா தாங்க இருந்தேன்.. சுமார், ஒரு ரெண்டு வருசத்துக்கு முன்னாடி ஆர்குட் ல பராக்கு பார்த்துட்டு இருந்தப்ப, யாரோ ஒரு கதைய எங்கருந்தோ சுட்டுப்போட்டுருந்தாங்க. ரொம்பத்தெளிவா, சோர்ஸ் எதுன்னு போடாம விட்டுட்டாங்க. கதை வழக்கமா இருக்குற கதை மாதிரி இல்லாம, close to heart இருந்த மாதிரி ஒரு feeling.

அப்பறம், கொஞ்ச நாள் கழிச்சு மெயில் ல அதே கதை forward ஆகி வந்திருந்தது. ஆனா இப்போ சோர்ஸ் கொடுத்திருந்தாங்க. அந்த link அ பிடிச்சு போய்ப்பார்த்தா...........
B... L... O... G.... blog ... ஆ !!! அட, வெளி உலகத்துக்குத் தெரியாம, இங்க ஒரு மாய உலகமே இயங்கிட்டு இருக்கு. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா, link அ பிடிச்சு பிடிச்சு.... இப்போ தினமும் தமிழ்மணம் முகத்துல முழிக்காடி அந்த நாள், முழுமை அடையாத மாதிரி ஒரு illusion.

சரி, இது வரைக்கும் யாருக்கும் எந்த கெடுதலும் இல்ல ...... ஆனா நான் இப்போ எடுத்திருக்க முடிவு... கொஞ்சம் அபாயகரமானது தான். ஆமா, உங்க guess சரி தான், நானும் பதிவர் ஆகலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. முதல் நாளே ஒரு 1000 ஹிட்ஸ் வந்திருச்சுன்னா அத கணக்கெடுக்க முடியாம போயிறக்கூடாதேன்னு, பாருங்க Hits Counter லாம் போட்டு வச்சிருக்கேன் (என்ன ஒரு தன்னம்பிக்கை !!!)

ஆனா, என்ன எழுத ? அட அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல ... ( உண்மைதாங்க, எழுத மேட்டரே இல்ல !). ஆனாலும், 2 வருசமா யோசிச்சு, கடைசியா "ப்ளாக்" ஆரம்பிக்கனும்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ல, அதுவே பெரிய விஷயம் தானே..

வருசா வருஷம், நான் எழுத ஆரம்பிக்குற டைரிக்கு ஒரு ராசி உண்டு, ஜனவரி 15 ம் தேதி வரை டைரி யா இருக்கும், அப்பறம் பிப்ரவரி 15 ம் தேதில இருந்து, டைரியோட முதல் 15 பக்கங்கள் கிழிக்கப்பட்டு rough note ஆ மாறிடும். பார்க்கலாம், இந்த "ப்ளாக்" எப்படி மாறப் போகுதுன்னு !!!!

இவ்வளவையும் சொல்லிட்டு, என்னை பதிவுலகிற்கு இழுத்துட்டு வந்த அந்த கதை எதுன்னு சொல்லாம இருப்பேனா....... அந்த கதை நம்ம வெட்டியோட "தூறல்"


நன்றி மக்களே !!!

எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"


நட்புடன்,
பாலா.

24 comments:

tamilarasi said...

Hi Bala,

Enna blog ellam arambichuta good athuvum "Tamil" rombha good. Nalla irukku athuvum Tamil rombha theliva irukku ya maintain it. post the blog every month without fail. Uthikkum kaviganakku intha tholiyiyin "Thooral" vaalthukkal.

friendship said...

hai friend,

nice introduction......best of luck....i wish you get all success in your creative thinking.......

BABU said...

Hi bala,

This is palaniappan

Welcome to blog!

Endha matterum illamale oru blog eludha mudiyumna - nee than unmaiyana blogger !

எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !" - adadada nattula indha kavidhai eludharavan thollai thanga mudiyalappa ......

friendship said...

nice introduction friend..best of luck.....

சோலை அழகுபுரம் said...

நன்றி நண்பர்களே !!!

:sathya // thank u friend for the wishes

:tamil // நன்றி தோழியே , தொடர்ந்து எழுத முயற்சி பண்றேன் !

: palani //nice to see u ... அவ்வளவு சுலபமா தப்பிக்க முடியாது தம்பி,,, :)

Don said...

உங்களுடைய புதிய முயற்சிக்கு எனது நல்வாழ்த்துக்கள்

என்றும் நட்புடன்,

மயிலவன்

சோலைஅழகுபுரம் said...

: don said...//
thanks da

சோலைஅழகுபுரம் said...

1. testing testing testing

சோலைஅழகுபுரம் said...

2. testing testing testing

சோலைஅழகுபுரம் said...

3. testing testing testing

thaliva said...

ok gi
kalluungaaaaaaaaaaaa
romba kalungathingaaaa
oru alavadu parungaaaaaaaa

தருமி said...

//post the blog every month without fail. //

என்னங்க தமிழரசி
இப்படி சாபம் போடுறீங்க...every day அப்டின்னு சொல்றதுக்குப் பதிலா மறதியாதானே every month சொல்லிட்டீங்க ... அழிச்சி கிழிச்சி மறுபடி சரியா பாலாவுக்கு சொல்லிருங்க..

தருமி said...

//எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"//

எச்சரிக்கை: நாங்க கவிஜ அப்டின்னு ஒரே தாண்டா தாண்டிருவோம்ல...

ஆனாலும் ..
//குரல் உடைந்து அழறாளே,
என் கூறுகெட்ட தாய் மட்டும் ...//

ரொம்ப நல்லா இருக்குதுங்க.

வாங்க
வருக
வளர்க

சோலைஅழகுபுரம் said...

நன்றி ஐயா,

// தருமி said...

என்னங்க தமிழரசி
இப்படி சாபம் போடுறீங்க...every day அப்டின்னு சொல்றதுக்குப் பதிலா மறதியாதானே every month சொல்லிட்டீங்க ... அழிச்சி கிழிச்சி மறுபடி சரியா பாலாவுக்கு சொல்லிருங்க..
//

நம்ம சுறுசுறுப்பு , அவுங்களுக்கு தெரியும், அதான் அப்படி சொல்றாங்க ! :)

DHANS said...

இந்த கதை எனக்கும் forward mail வந்துச்சு அப்புறம் எனக்கும் ப்லோக் பத்தி தெரிய வந்துச்சு அதுக்கு காரணம் நம்ம அருட்பெருங்கோ. அப்புறம் ஒரு வருசமா யோசிச்சு எனக்கு இருந்த ஒரு நெருக்கடியான மோசமான நிலைமைல நானும் எழுத ஆரம்பிச்சேன், இப்ப இருக்க சுமூகமான நிலைமைல என்னால அடிக்கடி எழுத முடியாம போய்டுது.

வாழ்த்துக்கள்.

சோலைஅழகுபுரம் - பாலா said...

வாழ்த்துக்கு நன்றி dhans !

நான் ஆதவன் said...

//எச்சரிக்கை: "நான் கவிதை எல்லாம் கூட எழுதுவேன் !"//

எச்சரிக்கை: "நாங்க கவுஜைகளையும் படிப்போம்"..இத மனசுல வச்சுட்டு கவுஜ எழுதுங்கண்ணோவ்....

உங்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்.

உருப்புடாதது_அணிமா said...

வாங்க வந்து கலக்குங்க..
நல் வரவு...

துளசி கோபால் said...

வலை உலக ஜோதியில் வந்து கலந்துட்டீங்க....இனி எல்லாம் சுகமே.

நல்லவேளை உங்க எச்சரிக்கையைப் படிச்சேன்:-)

இனிய வாழ்த்து(க்)கள்.

குப்பன்_யாஹூ said...

சோலை அழகு புறம், பெயர் அழாகாக உள்ளது,

எழுதுங்க எழுதுங்க, எழுதிகிட்டே இருங்க

குப்பன்_யாஹூ

சோலைஅழகுபுரம் - பாலா said...

அனைவரின் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி !!!

சோலை அழகுபுரம், இப்போ எல்லாருக்கும் அறிமுகாயிருக்கிற "சுப்ரமணிபுரத்துக்கு" ரொம்ப பக்கம்.

sathya said...

hai friend,

nice introduction......best of luck....i wish you get all success in your creative thinking.......

hayyram said...

ஆமாம் சோலையழகு புறத்துல எந்தத் தெருவுங்க. நான் அங்கதான் குடியிருந்தேன்!

regards
www.hayyram.blogspot.com

வி.பாலகுமார் said...

வாங்க hayyram...
4வது தெரு.

Post a Comment