ஒரு பந்தயப் புறா, ஆயிரம் கிலோமீட்டர்கள் தாண்டிய துவக்கப் புள்ளியில்
இருந்து தான் அதுவரை பார்த்திராத நிலப்பரப்பு, வானிலை, காற்று, திசை அதோடு
கொலைப் பறவைகளின் தாக்குதல் ஆகியவற்றைத் தாண்டி, பந்தய இலக்கான தன் வீட்டை
அடைகிறது.
”ஹோமர்” எனும் இந்நாவல் கூடு சேரும் ஒரு பறவையைப் பற்றிய நாவல். ஆனால் அது மட்டுமே அல்ல, மதுரையின் உள்ளூர் அரசியல், அதிலுள்ள போட்டி, அதனால் ஏற்படும் ஒரு கொலை, கொலையில் சம்பந்தப்படும் ஓர் இளைஞனின் தப்பிக்கும் பயணம், கொலையுண்டவரின் குடும்பம் என பல அடுக்குகளாக விரிகிறது நாவல். நாம் இதுவரை பார்க்காத ஒரு புதிய உலகின் வாழ்வையும் தத்ரூபமாகக் கண்முன் நிறுத்துகிறது இந்நாவல். வாசிக்க சுவாரஸ்யமான திரில்லராகவும், அதே நேரம் தமிழ்ல் இதுவரை சொல்லாத ஒரு புதிய களத்தில் அழுத்தமான படைப்பாகவும் உருவாகியிருக்கிறது.
ஒரு பறவையின் வாழ்வுக்கும், மனிதனின் இருப்புக்குமான போராட்டத்தை இயல்பான மதுரைப் பேச்சு மொழியில் பேசும் ”ஹோமர்”, இதோ உங்கள் வாசிப்புக்காக.
இந்நாவல் அமேசான் #pentopublish4 போட்டியில் இருக்கிறது. நாவலை வாசியுங்கள். உங்களுக்குப் பிடித்திருந்தால் அமேசானில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், ஆங்கிலத்தில் சிறு ரெவ்யூவும் எழுத மறக்காதீர்கள்.

நன்றி!
பாலகுமார் விஜயராமன்
No comments:
Post a Comment