Friday, October 29, 2010

கோவை, திருச்சி, மதுரை... அடுத்து சேலம் தானே!

தினமும் அலுவலகம் கிளம்புமுன் மறக்காமல் வேண்டிக்கொள்கிறேன், "கடவுளே, இன்னைக்கு மறந்து வச்சிட்டுப்போற பொருள் முக்கியமில்லாததா இருக்கனும்!"

எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுபவரைப் பழி வாங்க, என்ன சொன்னாலும் புரியாதவனைப்போல் தொடர்ந்து விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன். #ஆள்எஸ்கேப்

நடிகர்களின் நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்களின் கதை, திரைக்கதை படு மொக்கை தானே. இமேஜை காப்பாற்ற எல்லா சேனல்லயும் காசு கொடுத்து தான் ஓட வைக்கிறாங்களாமே :)

ஆகா! ட்விட்டரில் என்னை இதுவரை யாரும் unfollow செய்யவில்லை. இப்படியே எதுவும் எழுதாமல் இருந்து எல்லாரையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

கோவை, திருச்சி, மதுரை. அடுத்து சேலம் தானே... 500 ரூபாயுடன் குவாட்டரோ, சேலையோ காத்திருக்கிறது, ரத்தத்தின் ரத்தங்களே கிளம்பத் தயாராகுங்கள்!

"உழைப்பிற்கு அழகிரி, உல்லாசத்திற்கு ஜெ.. Hello Miss Hello Miss எங்கே வர்றீங்க" - ஜெ. மதுரை மாநாட்டிற்கு திமுக போஸ்டர் தான் அதிகமா தெரியுது.

தன் மகனை ஒரு நடிகை கட்டிப் பிடிப்பதை உள்ளம் பூரிக்க பார்த்து மகிழும் தாய்....ம்ம்ம் அழகிய தமிழ் சமூகம் டிவியில் மட்டும் தான் #விஜய்டிவி

ஐயையோ, மழைக்காலம் துவங்கி விட்டதே! மழைக்கவிதை எழுதுறேன் பேர்வழினு இந்த கவிஞர்கள் தொல்லை தாங்க முடியாதே !

What’s happening? னு நம்மையே கேள்வி கேட்கும் ட்விட்டரை தார் பூசி அழிப்போம், வாருங்கள் ! 

மாங்கு மாங்குனு புத்தகம்முழுதும் எழுதிட்டு இருந்தவனை எச்சரித்து, முக்கிய கேள்வியை மட்டும் குறிச்சுக்கொடுத்து பிட் எழுத வச்சுவன் #நண்பேன்டா!

எட்டாம்வகுப்பு வரை விஜயகாந்தின் தீவிர ரசிகனாய் இருந்த என்னை நல்வழிப்படுத்தி பந்தாவாய ரஜினி ரசிகனாய் மாற்றிய முத்துகிருஷ்ணன். #நண்பேன்டா!

முதன்முதலா ஒருபொன்னை லுக்குவிடசொல்லோ அவகிட்ட பல்பு வாங்குனதை மறைச்சு, "நீங்க 2பேரும் சூப்பர் மேட்ச் மச்சி" னு உசுப்பேத்துறவன் #நண்பேன்டா

முக்கியமான இண்டர்வியூ ஊத்திக்கிச்சுனு கவலைல இருக்கும் போது, "many more happy returns of the day" சொல்லி ட்ரீட் கேக்குறவன் #நண்பேன்டா

கருத்து சொல்றேன்னு கழுத்தறுக்கிறவர்ட்ட இருந்து காப்பாற்ற, "மச்சி, ஒரு முக்கியமான விஷயம். கொஞ்சம் வாயேன்" னு தள்ளிட்டு போறவன் #நண்பேன்டா!

நாளை என் அறையில் நான் இல்லாததை விட சகிக்க முடியாதது, யாரோ இருக்கப்போவது (பலூன்காரன் வராத தெரு / அழகிய நிலா) #படித்ததில்பிடித்தது

2வருடம் முன்கொடுத்த செமினார் pptஐ திறந்தால் பஞ்சுமிட்டாய்கலரில் எரிக்கிறது.என்னாச்சு எனக்கு? இவ்ளோ சீக்கிரம் என் ரசனை மேம்பட வாய்ப்பில்லையே

விளம்பரம் விரும்பும் என் போன்றோர்க்கு அறைகூவல்: உப்பு சப்பில்லாத நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்களை சேனல் மாற்றி புறக்கணிப்போம் வாருங்கள்!

******

11 comments:

Anonymous said...

தினமும் அலுவலகம் கிளம்புமுன் மறக்காமல் வேண்டிக்கொள்கிறேன், "கடவுளே, இன்னைக்கு மறந்து வச்சிட்டுப்போற பொருள் முக்கியமில்லாததா இருக்கனும்!"]


yaarukku mukkiyam illama irukkanum unakkaa illai mathavangalukka?
maha

சத்யா said...

twitter poga blog la vera twits a?
hmmmmm unga nakkal kalantha twitts super.......

பிரபு . எம் said...

உங்க "ட்வி"ருக்குறள்கள் சூப்பர் சார்!! :)

எஸ்.கே said...

சுவாரசியமான எழுத்து நடை!

அருண் பிரசாத் said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்....

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

நன்றி.

ப.செல்வக்குமார் said...

//எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுபவரைப் பழி வாங்க, என்ன சொன்னாலும் புரியாதவனைப்போல் தொடர்ந்து விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன். #ஆள்எஸ்கேப்
//

இந்த ஐடியா செமயா இருக்கும்க ., நானும் சில சமயங்களில் அப்படித்தான் ..!!

Deepa said...

Pls see:
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_02.html

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

kalakkal

வி.பாலகுமார் said...

கருத்திட்ட நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.

வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய நண்பர் அருண்பிரசாத், மற்றும் வலைச்சரத்தின் மூலம் வருகை புரிந்தவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

ஹரிஸ் said...

எல்லாம் தெரிந்ததைப் போல் பேசுபவரைப் பழி வாங்க, என்ன சொன்னாலும் புரியாதவனைப்போல் தொடர்ந்து விளக்கம் கேட்டுக்கொண்டிருந்தேன். #ஆள்எஸ்கேப்/

இது இவ்வளவு நாளா தோனாம போச்சே..ரொம்ப நன்றிங்கனோவ்,,

ஆனந்தி.. said...

//2வருடம் முன்கொடுத்த செமினார் pptஐ திறந்தால் பஞ்சுமிட்டாய்கலரில் எரிக்கிறது.என்னாச்சு எனக்கு? இவ்ளோ சீக்கிரம் என் ரசனை மேம்பட வாய்ப்பில்லையே//
இது செம நச்ச்..
ஆமாம் என்ன புது பதிவு எதையும் காணோம்..?!!!

Post a Comment