Wednesday, October 13, 2010

இன்னும் சில மனிதர்கள்

"நம்ம வடக்குப்பட்டி ராமசாமி தெரியும்ல..."

"தெரியுமாவா ! கடன்கார நாயி... நேத்து கூட பார்த்தேன். கொடுத்த காசை திருப்பித்தர வக்கில்லை, உனக்கெல்லாம் எதுக்குடா வேட்டிசட்டைன்னு மானாவாரியா கேட்டுட்டு வந்தேன்."

"இல்லப்பா, அவர் நேத்து ராத்திரி தூக்கு மாட்டி செத்துட்டாராம்."

"அடடா, தங்கமான மனுசனாச்சேப்பா ! ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டாரே. நேத்து கூட ரொம்ப நேரம் மனசு விட்டு பேசிட்டு இருந்தேன். ஒரு வார்த்தை என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்ல. இப்படித் தான் முட்டாள்த்தனமா ஏதாவது செய்ய வேண்டியது. என்ன மனுசங்களோப்பா !"

***************************************

"என்னண்ணே, இத்தனை வருசமா இந்த டிவிஷன்ல ராத்திரி பகலா வேலை பார்த்திருக்கீங்க. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம தூக்கி அடிச்சிட்டானுகளே, யூனியன் கேஸ் எடுப்போம்ணே!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்ப்பா!"

"இல்லண்ணே, உங்கள வேணும்னே கஷ்டப்படுத்துறாங்கண்ணே!"

"இருக்கட்டும்பா, புது டிவிஷனுக்குப் போய், இதைவிட இன்னும் நல்லா வேலை பார்த்து அவனுக மூக்கை உடைக்கிறேனா இல்லையா பாரு."

"இது என்னண்ணே லாஜிக், சத்தியமா புரியல"

"அது அப்படித்தான்பா!"

***************************************

"மச்சி, ஏற்கனவே கடியான சப்ஜெக்ட், இதுல கொஸ்டீன் பேப்பர் வேற டஃப். கண்டிப்பா நிறைய பேருக்கு கப்பு விழத்தான் போகுது!"

"சும்மா புலம்பாதே, இந்த பேப்பர் எழுதுன எல்லாரும் தூக்குறோமா இல்லையானு பாரு!"

"என்னடா உளர்ற?"

"பின்ன, அட்டானமஸ் காலேஜ்ல ஹச்.ஓ.டி எடுத்த பேப்பர்ல நிறைய அரியர் விழுமா, அதெல்லாம் தலைமை நம்ம காப்பாத்தும்டா!"

" ஓ, இப்படி ஒரு ஈகோ பாய்ண்ட் இருக்குல்ல!"

***************************************


7 comments:

ப.செல்வக்குமார் said...

முதல் சீன் கலக்கலா இருக்குங்க .. அதிலும் முதல்ல அவரு திட்டினாரு .. அப்புறம் இறந்திட்டாரு அப்படின்னு சொன்னதும் நல்ல மனுஷன் அப்படின்னு சொன்னது நல்லா இருக்கு ..

நேசமித்ரன். said...

ம்ம் நடத்துங்க தல ட்விட்லதான் அதகளம்னா இங்கேயுமா :))

isakki said...

romba nalla irunthuchu pa, first one and third one super,

தியாவின் பேனா said...

அருமை

கார்த்திகைப் பாண்டியன் said...

ரெண்டும் மூணும் இயல்பா இருக்கு பாலா..:-)))

சத்யா said...

first one:

real one and true one..

second one:

ur experience a? :)

third one:

good and true.. :) :)

வார்த்தை said...

//பின்ன, அட்டானமஸ் காலேஜ்ல ஹச்.ஓ.டி எடுத்த பேப்பர்ல நிறைய அரியர் விழுமா, அதெல்லாம் தலைமை நம்ம காப்பாத்தும்டா//

:)
அடப்பாவிகளா...

Post a Comment