Thursday, November 5, 2009

பூனையெல்லாம் பூனை தான் !

வாசல்படியில் குழந்தை போல்
அழுதுகொண்டிருந்தது
சாகக்கிடந்த பூனைக்குட்டி.
கொஞ்சம் பாலும், சோறும்
போட்டுவைக்க மிதியடியுள்ளே
படுத்துக் கொண்டது.


நாட்கள் செல்ல, மிதியடியிலிருந்து
மடிவரை வந்து படுத்துக்கொள்ளும்.
செல்லமாய் வளர்க்கும்
புறாக்கூட்டதை பரிவோடு
காவல் காக்கும்.
புறாவுக்கும் பூனைக்கும் ஆகாது
என்று சொன்னவர்க்கெல்லாம்
பூனையெல்லாம் பூனையல்ல,
எங்கள் வளர்ப்பு தப்பாகாது
என்று சொல்லி வாயடைப்போம்.


வீட்டுப்புறா ஒவ்வொன்றாய்
தொலையும் போது
அன்னம் தண்ணீர் கொள்ளாமல்
அழும் அளவு பாசம்,
எங்கள் பாசக்காரப் பூனைக்கு.


புறாக்கள் எண்ணிக்கை குறையக் குறைய,
வளர்த்த வீடு விட்டு, 
வேறு கூடு அடையுமோவென
தினமும் கலக்கத்துடனே
இரை போட்டு வளர்த்தோம்.


பூனைகள் எல்லாம்
பூனையாய் மட்டுமே இருக்க முடியுமென்று,
அந்த நடுநிசி வரை தெரியவில்லை.
நம்வீட்டு பூனை தானே என,
புறாக்கள் தூக்கம் தொடர
எங்கள் பூனையின் பூனைத்தனம்
விழித்துக் கொண்டு வேலை செய்ய,
அடுத்த வீட்டு சந்தில் மட்டும்
பரவிக்கிடந்த புறா இறக்கை.


துரோகமும், கோபமும்
வெறியாய் மாறி 
பூனையைக் கொல்ல துரத்தும் போது,
இடைபுகுந்து ஒருவர் சொன்னார்,
"நூறு புறாவில், பத்து தானே
செத்துப் போச்சு, கோபப்பட்டு
இருக்குற ஒரு பூனையையும்
கொன்னுடாதீங்க !"


எங்கள் வீட்டு புறாவாய் 
இல்லாதிருந்தால், பூனையை
நான் என்ன செய்திருப்பேன் ???


11 comments:

  1. கவிதையும், படம் கவிதையின் முடிவில் இருப்பதும் மிகவும் அருமையாக இருக்கு.

    ReplyDelete
  2. அன்பின் பாலகுமார்

    அருமையான கவிதை - நச்சென்ற முடிவு - நட்பிலும் இது நடைபெறுகிறது -

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. நன்றி வேந்தன் !

    நன்றி சீனா ஐயா !

    ReplyDelete
  4. idhula yaarai thappu solrathu bala?
    romba nalla irunthathuppa!!!!
    maha

    ReplyDelete
  5. nice one.....
    nalla sindhanai...
    picture is absolutely real....
    good ...congrats....

    ReplyDelete
  6. நன்றி மகா.
    நன்றி சத்யா.
    நன்றி கார்த்தி.
    நன்றி ஸ்ரீ.

    ReplyDelete
  7. என்னை நினைக்கும் போதெல்லாம், என்னில் உங்களுக்குப் பிடித்ததை மட்டும் நினைக்கிறீர்கள் ! நான் நானாக வெளிப்படும் போது, நான் மாறி விட்டதாய் சொல்கிறீர்கள் !!

    By
    புறாக்களை தின்ற பூனை .....மியாவ்!!!


    -மதன்

    ReplyDelete
  8. //என்னை நினைக்கும் போதெல்லாம், என்னில் உங்களுக்குப் பிடித்ததை மட்டும் நினைக்கிறீர்கள் ! நான் நானாக வெளிப்படும் போது, நான் மாறி விட்டதாய் சொல்கிறீர்கள் !!

    By
    புறாக்களை தின்ற பூனை .....மியாவ்!!!


    -மதன் //


    பூனையோட பார்வையில், இது ரொம்ப சரி தான்.
    பூனை, பூனை தானே :)

    நன்றி மதன் !

    ReplyDelete
  9. //எங்கள் வீட்டு புறாவாய்
    இல்லாதிருந்தால், பூனையை
    நான் என்ன செய்திருப்பேன் ???//

    realy nice ....

    ReplyDelete