Thursday, November 26, 2009

பி.எஸ்.என்.எல் - 3ஜி மொபைல் சேவை

தொலைதொடர்புத் துறையின் மூன்றாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் (3 ஜி) இயங்கும் செல்போன் சேவையை இந்திய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் சென்னையில் இப்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது.சரி, இந்த 3ஜி என்றால் என்ன, இப்பொழுது பயன்படுத்தப்படும் செல்போன் சேவைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் ?
இருக்கிறது. தற்பொழுதுள்ள தொழில்நுட்பத்தில்(2 ஜி) வாய் வலிக்க வலிக்க பேசலாம், பேசலாம். மிகத் துல்லியமாக பேச்சுக்கள் கேட்க பேசிக்கொண்டே இருக்கலாம். ஆனால் மொபைல் வழி இணையத் தொடர்பு என்பது ஊறுகாய் போலத் தான்.  அதுவும் சும்மா உங்கள் இன்பாக்ஸை எட்டிப்பார்ப்பது, ஒரு சாட் (chat) செய்திக்கு "நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! " என்ற ரீதியில் தான் இருக்கும். ஆனால் இந்த 3ஜி தொழில்நுட்பத்தில் தரைவழி அகண்ட அலைவரிசை (landline broadband) இணைய வேகத்திற்கு இணையாக அதிவேக இன்டர்நெட், வேகமான தரவிறக்கம் மற்றும் மொபைல் டிவி, ஆன்லைன் கேம்ஸ் எனப் பலப்பல வசதிகள் மொபைல்போன் மூலமாகவே சாத்திய்ம். 
ஆனால் இவை அனைத்தையும் விட சிறப்பான ஒரு சேவை 3ஜி ல் இருக்கிறது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நாளில், "இந்த சேவை இல்லாமல் மொபைல்போனா?  போங்க சித்தப்பா, அந்த் காலத்து ஆளா இருக்கீங்களே !" என்று சொல்லத்தான் போகிறோம். அந்த அற்புத வசதி, நம்மை அழைப்பவர் முகத்தைப் பார்த்துக் கொண்டே பேசக்கூடிய "வீடியோ காலிங்" எனும் சேவை. 


ரொம்ப செலவாகுமோ ?
இப்பொழுது தான் சந்தைக்கு வந்துள்ளதால், கட்டணம் எல்லாம் தாறுமாறாக இருக்கும், கொஞ்ச நாள் போகட்டும்னு நினைக்கிறீர்களா, அது தான் இல்லை. ஏனென்றால் இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இருப்பது.... "கிடைத்தவரை சுருட்டிக்கலாம், பின்னாடி போட்டி வந்தா வாடிக்கையாளர்களுக்கு கண்கட்டு வித்தை காட்டி பில்லில் தெரிஞ்சு கொஞசம், தெரியாம கொஞ்சம் முழுங்கிக்கலாம் !" என நினைக்கும் தனியார் நிறுவனங்கள் இல்லை. பில்லிங்கில் என்றும் நம்பகமான்  பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதால், மிகக் குறைந்த கட்டணத்தில் இந்த வசதியை பெற்றுக்கொள்ளலாம்.  சும்மா ஒரு எடுத்துக்காட்டுக்கு,  3ஜி சேவை மூலம் பேசுவதற்கான ( voice call) கட்டணம், அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா, வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ரூ.50 பைசா மட்டுமே.


(கட்டணம் பற்றிய முழு விவரங்களுக்கு : 
மற்றும் http://bsnl.in/service/3G/3GHomepage.htm )
3ஜி வசதி எனக்கும் வேண்டும், நான் என்ன செய்ய வேண்டும் ?
ரொம்ப சுலபம் தான். 
ஒரு எஸ்.எம்.எஸ். மூலமாகக் கூட நீங்கள் பி.எஸ்.என்.எல்  3ஜி க்கு மாறலாம். உங்களது 2ஜி மொபைலில் இருந்து M3Gxxx  (xxx என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ப்ளான்) என டைப் செய்து 53733 எண்ணிற்கு அனுப்பினால் போதும்.  
புதிய இணைப்புக்கு : நீங்கள் சென்னையில் இருந்தால் 
http://chennai.bsnl.co.in/CIP/NewLineRequest.asp?RequestType=PROVIDE%203G%20MOBILE%20SERVICE - இந்த தளத்திற்கு சென்று பதிந்து கொள்ளலாம். 
மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்ய 
http://portal.bsnl.in/BSNLCCA/ThreeGRegistration.aspx ஐ அழுத்தவும்
அல்லது 1500, 1503, 9400024365 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமானது, 3ஜி சேவையைப் பெற உங்கள் செல்போன் ஏற்புடையதாக இருக்க வேண்டும்.
3ஜி வசதியை ஏற்கக்கூடிய சில மாடல்கள
• Nokia N95,N96,N82,N73
       • Nokia 6233, 3120 Classic
• G700, G900, G502
        • K 660i, K 610i, K530i
       • P1i, W980i, W910i, W760i
• Samsung SGH J800
        • Touch wiz, Innov 8
• LG Viewty , LG KU 250
• Motorola Q, A925
        • MotoRazor V9
  • Apple 3G I Phone • HTC
       • Blackberry Bold 9000        
வேறென்ன சிறப்புகள் ?
3ஜி க்கு மாறினாலும் நீங்கள் இப்பொழுது வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல் செல் நம்பரையே தொடர்ந்து பெற்றுக்கொள்ளலாம்.
3G தொழில்நுட்பம் மூலம் "டேட்டா கார்டு" (Data Card) சேவையும் உள்ளது.
இன்னும் ஏகப்பட்ட சிறப்புகள் இருக்கு... விவரங்களுக்கு http://bsnl.in/service/3G/3GHomepage.htm ஐ பாருங்கள்.

தகவல் தொழில்நுட்பமும், தொலைதொடர்பும் விரைகின்ற வேகம் ரொம்ப பிரம்மிப்பா இருக்குல்ல.
தங்கள் கருத்துக்களையும் தவறாது தெரிவியுங்கள்.
நன்றி, தகவல் உதவி...
http://bsnl.in/service/3G/3GHomepage.htm
http://chennai.bsnl.co.in/News/2gto3g.pdf
http://www.chennai.bsnl.co.in/index.html
http://www.bsnl.in/faq/faqans.php?paramCategory=3G%20Mobile%20Services
http://www.viparam.com/index.php?news=18750
http://www.maalaimalar.com/2009/11/19145338/CNI04901901109.html
http://www.dinaithal.com/business/10281--3-
http://therinjikko.blogspot.com/2009/10/blog-post_8694.html#ixzz0XsyCS2fb


11 comments:

Thomas Ruban said...

விரிவான தகவல். தகவலுக்கு நன்றி. (பி.எஸ்.என்.எல் இந்த 3ஜி) சேவையின் தரம் எப்படி உள்ளது என தெரியப்படுத்தவும்.

நன்றி.

cheena (சீனா) said...

அன்பின் பாலகுமார்

அரிய தகவல்களுக்கு நன்றி

நான் மதுரையில் பயன்படுத்தும் மொபைல் - சாம்சங் F480 - நான் 3 G பெற இயலுமா - மதுரைக்கு எப்பொழுது வரும்

நல்வாழ்த்துகள் பால குமார்

சத்யா said...

bsnl staff ngratha prove panniteenga...:)

vaazhga bsnl ! valarga athan 3G tharam...

"நான் இப்போ மொபைலுக்குள்ள இருக்கேன், அப்பாலிக்கா பேசுறேன்", இல்லையென்றால் ஒரு இணையதளத்தை திறந்து வைத்து விட்டு, போய் ஒரு காஃபி குடித்துவிட்டு வந்து பார்த்தால் "என்ன அதுக்குள்ள அவசரம், போய் மதிய் சாப்பாட்டை முடிச்சிட்டு வா ! "

uvamai nalla irukku.....

thaniyaar thurai patrina vilakkamum nalla irukku..unmaiya azhaga sollirukeenga......(profit illaama entha private company pa irukkum?)

nokia N70 ku 3G facility kidaiyaatha?

innum neraiya thgaval sollunga....

urainadai ellaarukkum easy a puriyura madhiri,sirippu kalandha vilangaludan irukku..congrats..write more.....

Anonymous said...

bsnl 3 ஜி விலையும் மிகக் குறைவு 30 பைசா மட்டுமே.. 30 பைசாவில் இனி முகத்தில் முகம் பார்க்கலாம்.... என்று பாடிக் கொண்டே உபயோகப் படுத்தலாம்.. நண்பர் ஒருவர் கிண்டியிலிருந்து அண்ணா சாலையில் அவ்வாறு பேசிக் கொண்டிருந்ததைக் காட்டினார்.. மிகத் துல்லியாகப் படம் ... very good

Anonymous said...

signal cleara varuma

Rajasekaran@vaatthi said...

Anbu nanba

Nee oru Thagaval Pettagam !!!!

Easyaga Ellarum understand Panra mathiri explain pannirukkae


vaazthukkal nanba

வால்பையன் said...

//பில்லிங்கில் என்றும் நம்பகமான் BSNL//

உங்களுக்கும் நல்லா காமெடி வருது தல!

:)

Anonymous said...

Hi Bala,

From my understanding BSNL signal quality is very poor and the connection is not reliable. I would like to know by when they will allow private networks to provide 3G service?

-Senthil Vijay

isakki said...

ada ,super bala,thanks for ur information. illainna idhai pathi googlela thaeda vaendi irukkum illainna yaethavathu BSNL websitela,appurum namma thaai mozhila oru vishayam padikkum pothu udanae purinchurum.illainna ,"the 3G technology of cellphone service is" appadeennu aarambichu ,periya Non-detail padika vaendi vanthu irukum .adhuvum ozhungaa purinchu tholaiyaathu. aama idhukku ellam(un saevaikkkuthaan) BSNL extra kaasu tharrangalao?

maha

பாலகுமார் said...

வருகைக்கு நன்றி Thomas Ruban.

நன்றி சீனா ஐயா. http://www.gsmarena.com/samsung_f480-2268.php இந்த சுட்டியின் படி, உங்கள் செல்போனில் 3ஜி சேவை கிடைக்கும்.

நன்றி Anonymous1, Anonymous2

நன்றி வாத்தி. :)

// வால்பையன் said...
உங்களுக்கும் நல்லா காமெடி வருது தல!//

:) வருகைக்கு நன்றி வால்பையன்!

//isakki said ....
... BSNL extra kaasu tharrangalao?//
அதிக காசெல்லாம் இல்ல, கொடுக்குற சம்பளத்துக்குத் தான் இதெல்லாம் :)
கருத்துக்கு நன்றி !

பாலகுமார் said...

hi trsv,
don't know exactly when private operators r going to start.

anyhow bsnl rates are much cheaper and u can have a try and decide whether signal quality is good or not...
thanks for reading :)

Post a Comment