எட்டுத்திக்கும் கட்டி ஆள்வதாய், என்
அடிமைத் தொழிலுக்கு அர்த்தம் சொல்ல
பத்துத் திண்ணை போதாது
பேசத்தெரியாத அப்பாவுக்கு !
போன வருஷம் வீட்டுப் பசுவுக்கு
ரெட்டைப் பிரசவம் பார்த்தும்,
பேச்சியம்மன் படித்துறையில்
ரெட்டைப் பாம்பை பிடிச்சதும்
பேசிப் பேசி தீரவில்லை
புத்திசாலி அண்ணனுக்கு !
தங்கச்சி வீட்டப் போல
தன் புருசனும் அடிச்சிருந்தா
ஆயிரம் ரூபா காசுக்குப் பதில்
அரைப்பவுனா கிடைச்சிருக்குமே...
உள்ளூர பெருங்கவலை
உடன்பிறந்த பெரியவளுக்கு !
செண்ட் பாட்டிலும் ஜிகினா சட்டையும்
பார்த்து பார்த்து பூரிக்கிறான்
என் பாசக்கார சின்னத்தம்பி !
"பாதி உடம்பா ஆகிட்டியேப்பா,
திரும்பி போய்த்தான் ஆகணுமா....!"
நான் பசியோடு படுத்ததெல்லாம்
பக்கத்திலிருந்து பார்த்தாளோ ....
நான் பட்ட வலிக்கு எல்லாம்
இவ நெஞ்சில் தழும்பிருக்குமோ ?
குரல் உடைந்து அழறாளே,
என் கூறுகெட்ட தாய் மட்டும் ...
nice friend......but unga veetla anna,appa,thambi,thangachi innum pakalaiya? :)
ReplyDeletenalla urainadai.....:)
app appa enn urugakkam..........?
ReplyDeletevalka amma namam
amma valka
nice kavaidhai anna...
ReplyDeleteAs usual Superb... :)
ReplyDeleteEnnoda Position la irunthu ne intha Kavithaiya ivalavu superrrraaa ezhuthiyatharku romba romba nandri!!!!
ReplyDelete//
ReplyDeletethanks all for the comments.
//Blogger dhaya said...
Ennoda Position la irunthu ne intha Kavithaiya ivalavu superrrraaa ezhuthiyatharku romba romba nandri!!!!
செண்ட் பாட்டிலும் ஜிகினா சட்டையும்
பார்த்து பார்த்து பூரிக்கிறான்
என் பாசக்கார சின்னத்தம்பி !
//
ithu thaan unnoda position :) :)
கூறுகெட்ட தாய்க்கு மட்டும் தான் வலி தெரியும் - புரியும் - இயற்கை
ReplyDeleteஆமா மதுரலே இல்ல்லையா ? எந்த வூரு இப்போ பொளைக்கிறது ?
bala sir really superb
ReplyDeleteவலி
ReplyDeleteஎன் வலி அறியும் நீயா!
(போன வருஷம் வீட்டுப் பசுவுக்கு
ரெட்டைப் பிரசவம் பார்த்தும்,
பேச்சியம்மன் படித்துறையில்
ரெட்டைப் பாம்பை பிடிச்சதும்
பேசிப் பேசி தீரவில்லை
புத்திசாலி அண்ணனுக்கு !)
nice kavidhai............. :)
ReplyDeleteits very nice bala
ReplyDeleteits very nice bala
ReplyDeleteUyir ulla kavithai..
ReplyDeleteUnara mudinthathu vali-yai
தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி யாழினி...
ReplyDelete