Friday, November 7, 2008

வலி

எட்டுத்திக்கும் கட்டி ஆள்வதாய், என்
அடிமைத் தொழிலுக்கு அர்த்தம் சொல்ல
பத்துத் திண்ணை போதாது
பேசத்தெரியாத அப்பாவுக்கு !

போன வருஷம் வீட்டுப் பசுவுக்கு
ரெட்டைப் பிரசவம் பார்த்தும்,
பேச்சியம்மன் படித்துறையில் 
ரெட்டைப் பாம்பை பிடிச்சதும்
பேசிப் பேசி தீரவில்லை
புத்திசாலி அண்ணனுக்கு !

தங்கச்சி வீட்டப் போல
தன் புருசனும் அடிச்சிருந்தா
ஆயிரம் ரூபா காசுக்குப் பதில் 
அரைப்பவுனா கிடைச்சிருக்குமே...
உள்ளூர பெருங்கவலை 
உடன்பிறந்த பெரியவளுக்கு !

செண்ட் பாட்டிலும் ஜிகினா சட்டையும்
பார்த்து பார்த்து பூரிக்கிறான் 
என் பாசக்கார சின்னத்தம்பி !

"பாதி உடம்பா ஆகிட்டியேப்பா,
திரும்பி போய்த்தான் ஆகணுமா....!"

நான் பசியோடு படுத்ததெல்லாம் 
பக்கத்திலிருந்து பார்த்தாளோ ....
நான் பட்ட வலிக்கு எல்லாம் 
இவ நெஞ்சில் தழும்பிருக்குமோ ?

குரல் உடைந்து அழறாளே,
என் கூறுகெட்ட தாய் மட்டும் ...


14 comments:

  1. nice friend......but unga veetla anna,appa,thambi,thangachi innum pakalaiya? :)

    nalla urainadai.....:)

    ReplyDelete
  2. app appa enn urugakkam..........?
    valka amma namam
    amma valka

    ReplyDelete
  3. Ennoda Position la irunthu ne intha Kavithaiya ivalavu superrrraaa ezhuthiyatharku romba romba nandri!!!!

    ReplyDelete
  4. //
    thanks all for the comments.


    //Blogger dhaya said...

    Ennoda Position la irunthu ne intha Kavithaiya ivalavu superrrraaa ezhuthiyatharku romba romba nandri!!!!
    செண்ட் பாட்டிலும் ஜிகினா சட்டையும்
    பார்த்து பார்த்து பூரிக்கிறான்
    என் பாசக்கார சின்னத்தம்பி !
    //
    ithu thaan unnoda position :) :)

    ReplyDelete
  5. கூறுகெட்ட தாய்க்கு மட்டும் தான் வலி தெரியும் - புரியும் - இயற்கை

    ஆமா மதுரலே இல்ல்லையா ? எந்த வூரு இப்போ பொளைக்கிறது ?

    ReplyDelete
  6. வலி

    என் வலி அறியும் நீயா!

    (போன வருஷம் வீட்டுப் பசுவுக்கு
    ரெட்டைப் பிரசவம் பார்த்தும்,
    பேச்சியம்மன் படித்துறையில்
    ரெட்டைப் பாம்பை பிடிச்சதும்
    பேசிப் பேசி தீரவில்லை
    புத்திசாலி அண்ணனுக்கு !)

    ReplyDelete
  7. Uyir ulla kavithai..

    Unara mudinthathu vali-yai

    ReplyDelete
  8. தங்கள் வருகைக்கும் , வாழ்த்துக்கும் நன்றி யாழினி...

    ReplyDelete