Sunday, August 8, 2010

சமகால ட்வித்துவ தெறிப்புகளின் இன்னொரு காப்பி.

எழுத்தாளர்கள் சிலர் ஏன் பெண்பெயரில் எழுதுகிறார்கள் என ஓர் உளவியல் புத்தகம் எழுதுனும். அதை ஒரு பெண்பெயரில் எழுதலாமா என்று தான் பலத்த யோசனை.

என் கிருபை மட்டும் உனக்குப் போதும். அதற்கு மேல் கேட்டால் கெட்ட கோபம் வரும்.

கலாநிதிமாறன் இது செய்து, கலாநிதிமாறன் அது செய்து, கலாநிதிமாறன் ஏதேதோ செய்த எந்திரன் படத்தில் ரஜினி என்று யாரோ ஒருவர் நடித்திருக்கிறாராம்.

வீணாப்போனோர் அமைப்பின் தானைத்தலைவர் திடீரென காணாமல் போனதால் காணாப்போனோர் கழகத்தின் தலைவர் தானாக கூடுதல்பொறுப்பு வகிக்கிறாராமே, உண்மையா?

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவின் பரிசுத்த ஆவிவே, ஊற்றி வைத்திருக்கும் மாவை சீக்கிரம் வேகவைத்து இட்லியாக்கிக் கொடும! பசி உயிர் போகுது.

உன்னை நீயாக இருக்கவிடாத சுமையை உன் நன்மைகருதி ஒளித்துவைத்திருந்தேன். விமர்சனத்தைப் பொறுக்க முடியாத நீ இனி முகஸ்துதியை சுமந்து செத்தொழிவாய்

ஐயையோ, எனது ட்விட்டர் ஐடி "writer" என துவங்கவில்லையே. அப்போ நான் பெரிய எழுத்தாளனாகி தமிழுக்கு சேவை செய்யவே முடியாதா! #வருதுபாருங்கசந்தேகம்

இன்று கோமாளிமுகமூடி அணிந்துள்ளதால் என்ன வெறுப்பேற்றினாலும் சிரிப்புதான். ஒருநாள் போராளிமுகமூடி கிடைக்கையில் தெரியும் இந்தசிரிப்பின் வன்மம்

பிரபலஎழுத்தாளர் தன்பெயர்மறைத்து வெளியிடும் இணையபத்திக்கும் பயங்கரவரவேற்பென்றார்.அவர் எழுதுனார்னு தெரிஞ்சாத்தான் ஒருபய எட்டிப்பார்க்கமாட்டானே

மதுரையில் கக்கன் நூற்றாண்டுவிழா. நண்டு சிண்டுகளுக்கெல்லாம் வானுயர பேணர்கள். பார்க்கும் நமக்கே சிரிப்பையும் தாண்டி ஒருமாதிரி கூச்சமாயிருக்கு.

கவிதைப் புத்தகங்கள் பன்முகப்பயன் கொண்டவை. பக்கத்துக்கு 4 வரி தவிர மீதமுள்ள காலியிடம் அனைத்தும் பால் கணக்கு பேப்பர் கணக்கெழுத மிக்க உபயோகம்

புத்தகம் முதல்பக்க வாசிப்பு முடியுமுன்னரே அதுபற்றி பதிவெழுத கை அரித்தால், சிரங்குக்கு வைத்தியம் புத்தகத்தை மூடி வைத்து விடுவது தான்.

மதராசபட்டினம் படத்தின் "மேகமே, ஓ மேகமே பாடல்", Rain rain go away பாட்டின் Remix தானே !

100வது ட்விட் ஏதும் சிறப்பாக தோன்றாததால் இந்த இடம் காலியாக விடப்படுகின்றது. இருக்கும் 99ல் பிடித்த ஒன்றை 100வதாக நினைத்துக் கொள்ளுங்களேன்.

பந்த் முழுவெற்றி என்றால் பந்த் முழுவெற்றி என மட்டுமே கொள்ள வேண்டும்.அப்போ, பெட்ரோல்விலை குறைந்து விட்டதா என துடுக்குற்றால் மூக்குடை தான்.

"தி"னாக்கு "தி"னா போடணும்னு திருச்சி திமிங்கலம் என்றெல்லாம் பெயர் வச்சு கொல்றாங்க.திருச்சில எப்படிய்யா திமிங்கலம்? #சன்டிவி சங்கீதயுத்தம்

குடிகார நண்பர்கள் பற்றி ஒரு குறையுமில்லை, குடித்து சலம்பும் போது கூட சேர்ந்து ரசிக்கலாம். ஆனால்... சென்றவாரம் குடித்துவிட்டு சலம்பியது பற்றி இப்பொழுது பெருமையடிப்பதெலாம் ரொம்பஓவர். that that enjoyment,that that time,thatsall இல்லையா?

தொட்டனைத் தூறும் மணற்கேணியெல்லாம் இப்பல்ல, எட்டு இன்ச் போர் போட்டு இறக்கு.
  
திறப்பது மட்டுமல்ல, பூட்டுவதும் அதே சாவி தான் - தத்துவமியம்பிய நண்பனுக்கு அமுக்குப்பூட்டுகள் விதிவிலக்கென்று புதியஏற்பாட்டை பதியச்சொன்னேன்.

******

6 comments:

எஸ்.கே said...

எல்லாமே நன்றாக உள்ளன :-)

ப.செல்வக்குமார் said...

///என் கிருபை மட்டும் உனக்குப் போதும். அதற்கு மேல் கேட்டால் கெட்ட கோபம் வரும்.
///
நல்ல கோபம் வராதா ...??

///இன்று கோமாளிமுகமூடி அணிந்துள்ளதால் என்ன வெறுப்பேற்றினாலும் சிரிப்புதான்///
கோமாளின்னு என்னயவா சொல்றீங்க ...??

isakki said...

கலாநிதிமாறன் இது செய்து, கலாநிதிமாறன் அது செய்து, கலாநிதிமாறன் ஏதேதோ செய்த எந்திரன் படத்தில் ரஜினி என்று யாரோ ஒருவர் நடித்திருக்கிறாராம்.

too much bala ,very bad aishwarya may be waste,yaarumae illainaalum rajinikkaga mattum padam oodum.


பிரபலஎழுத்தாளர் தன்பெயர்மறைத்து வெளியிடும் இணையபத்திக்கும் பயங்கரவரவேற்பென்றார்.அவர் எழுதுனார்னு தெரிஞ்சாத்தான் ஒருபய எட்டிப்பார்க்கமாட்டானே


ha ha nice ver nice

வி.பாலகுமார் said...

நன்றி எஸ்.கே.

நன்றி செல்வக்குமார், கோப‌ம்னாலே கெட்டது தானே.

//கோமாளின்னு என்னயவா சொல்றீங்க ...??//
நான் என்னை சொன்னேன், என்னை சொன்னேன் :)

@மகா,
//too much bala ,very bad aishwarya may be waste,yaarumae illainaalum rajinikkaga mattum padam oodum.//

எந்திரன்னாலே ரஜினி மட்டும் தானே, கலாநிதி மாறனுக்கு இந்த அல்லக்கைங்க பண்ற பில்டப் தாங்க முடியல, அந்த கடுப்புல தான் இப்படி எழுதினேன்.

vinu said...

tweeetunathu ellam ok ok, aana eatho thaththuvam sollurathaa solli irruntheengalea athu eangea paaaa

கமலேஷ் said...

அத்தனையும் அருமை...

மிகுந்த சுவை.

மிக நன்றாக தேர்வு செய்து இருக்கிறீர்கள்.

Post a Comment