Tuesday, March 23, 2010

என் பிரிய இளம் தம்பதியினரே !

என் கல்லூரி சமயத்தில் வாசித்து, பிடித்துப் போய் விடுதி அறை சுவரில் எல்லாம் மாட்டி இருந்த "கலீல் கிப்ரானின்" திருமணம் பற்றிய வாசகங்கள். இப்பொழுது தற்செயலாக வாசிக்க நேர்ந்தது. அழகிய மனக்கதவு திறப்பது போல இருக்கிறது. தமிழ்ப்படுத்த முயற்சித்திருக்கிறேன். எப்படி இருக்கிறது என சொல்லுங்கள். 


"திருமணம் பற்றி கலீல் கிப்ரான்" 


என் பிரிய இளம் தம்பதியினரே !


நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் என்பதாகவே பிறந்தீர்கள்,
காலந்தோறும் இரண்டறக் கலந்தே இருப்பீர்கள்.

மரணத்தின் இறகுகள் உங்களை வருடும் தருவாயிலும்,
இல்லறத்தில் இணைந்தே இருப்பீர்கள்.

என் பிரிய இளம் தம்பதியினரே !
எங்கெங்கும் மௌனமாய் வியாபித்திருக்கும் 
இயற்கையின் நினைவலைகளிலும் இன்பமாய் சேர்ந்திருப்பீர்கள்.

ஆனால்,

உங்கள் இணைபிரியா நெருக்கத்திலும் 
சிறு இடைவெளி இருக்கட்டும்.
அந்த இடைவெளியில் உங்கள் இருவருக்குமான 
தனித்துவம் தென்றலாய் வீசட்டும்.

காதலில் திளைத்திருங்கள், அதையே விலங்காக்கி இறுக்கிக் கொள்ளாதீர்கள்.
மாறாக மனதின் கரைகளை முத்தமிட்டு உள்செல்லும்,
நுரையும் அலையுமான கடலைப் போல காதலியுங்கள்.

மகிழ்வின் கோப்பையை ஒருவருக்கொருவர் நிரப்பிக்கொள்ளுங்கள்,
உணவைப் போலவே அன்பையும் பரிமாறிக் கொள்ளுங்கள்,
ஆனால், உங்கள் துணைக்கான உணவிற்கும் 
உங்களையே சார்ந்திருக்கும்படி செய்துவிடாதீர்கள்.

ஜோடிக் குயில்களாய் பாடித் திரியுங்கள், அதே சமயம்
தனிமையின் சங்கீத்திலும் மனமுருகப் பழகிக் கொள்ளுங்கள்.
குழலாயினும் துளைகள் தனித்திருந்தால் தானே இன்னிசை பிறக்கும்.

உங்கள் இதயத்தை உங்கள் துணைக்காகவே அர்ப்பணியுங்கள்,
ஆனால் அதன் சுமையை உங்களை 
அறியாமல் கூட அவர்மீது அழுத்தி விடாதீர்கள். 
உங்கள் இருவர் இதயங்களின் ஒத்த இசையை
வார்த்தைகள் அல்ல, வாழ்க்கை தீர்மானித்துக் கொள்ளட்டும்.

இணைந்தே இருங்கள், சார்ந்திருக்கும் நிலைக்கு சென்றுவிடாதீர்கள்
பிரகாரத் தூண்கள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதில்லை, 
இணைந்தே கலசத்தைத் தாங்கி நிற்கின்றன.

வேம்பும் அரசுமாய் சேர்ந்து வளரலாம் - ஆனால்
ஆலமரமாய் வியாபிக்க நினைத்தால் அதன் நிழலில்
வேறெந்த செடியும் தளிர்விட முடியாது.

**************************************************************************
மூலம்:"Kalil Gibran on Marriage"

You were born together, and together you shall be forevermore.
You shall be together when white wings of death scatter your days.
Aye, you shall be together even in the silent memory of God.
But let there be spaces in your togetherness,
And let the winds of the heavens dance between you.
Love one another but make not a bond of love:
Let it rather be a moving sea between the shores of your souls.
Fill each other's cup but drink not from one cup.
Give one another of your bread but eat not from the same loaf.
Sing and dance together and be joyous, but let each one of you be alone,
Even as the strings of a lute are alone though they quiver with the same music.
Give your hearts, but not into each other's keeping.
For only the hand of Life can contain your hearts.
And stand together, yet not too near together:
For the pillars of the temple stand apart,
And the oak tree and the cypress grow not in each other's shadow.

**************************************************************************

6 comments:

isakki said...

romba nalla irukkuthu bala,nalla nerthiyana thamizhakkam .enakkae puriyura alavukku ezhuthi irunthiyae
athunalathaan sonnaen.
naanthan indha thadavai first comment ezhuthinaen (!!!)

isakki said...

college padikkumpothaevaa? romba over bala ,enakku idhhu ellam suthama purinchu irukkathu !!!!

padma said...

அழகான மொழி பெயர்ப்பு.u have done full justice .hats off
.இந்த வரிகளை விட்டு விட்டீர்களோ
Even as the strings of a lute are alone though they quiver with the same music

சத்யா said...

ரெம்ப சூப்பரா இருக்கு பாலா...
இத ஒவ்வொருத்தரும் யோசிக்கனும்..செயல்படுத்தனும்..
congrats........really good one....... heart touching words...

வி.பாலகுமார் said...

@மகா: நன்றி :)

@பத்மா: நன்றி, கவனக்குறைவு :) இப்பொழுது சேர்த்து விட்டேன். //"குழலாயினும் துளைகள் தனித்திருந்தால் தானே இன்னிசை
பிறக்கும்."//

@சத்யா: நன்றி :)

Balaraman said...

நன்று திரு பாலகுமார்! 'மொழி பெயர்க்காமல்" ,"மொழியாக்கம்" செய்துள்ளீர்கள்!
வாழ்த்துக்களும் நன்றிகளும்!

பலராமன் - கடலூர்.

Post a Comment