Saturday, December 26, 2009

சட்டென மலரும் காட்டுப்பூ ...

உறுமீனைத்
தப்பவிட்ட நாரைக்கு,
ஆறுதல் சொல்கிறது
அழியப் போகும் குளம்.

******
எரிக்கிறது நெருப்பு
துடிக்கிறது காடு
எதிர்க்கிறது காற்று,
துணைபோவது தெரியாமல்.

******
திசைமாறிய பறவைக்கு
உணவாகக் காத்திருக்கிறது,
உமி நீக்கிய பச்சரிசி
விரித்திருக்கும் கண்ணிக்குள்.

******
மழை பெய்து ஊர்செழிக்க
மனதார வேண்டிக் கொண்டன,
சேர்த்து வைக்கப்பட்ட 
கழுதைகள் ரெண்டும்.

******
குளிர்ந்திருக்கும் நதியை
ஒளித்து வைத்து சிரித்திருக்கும்
சூரியனைப் பார்த்து
கண்சிமிட்டும் கூழாங்கல்.

******
பறந்து கொண்டே இருக்கிறது,
பழம் தின்ற பறவை.
விழப்போகும் விதைக்காக
காத்துக் கொண்டே இருக்கிறது,
வானம் பார்த்த பூமி.

******
மகரந்தம் சுமக்க
சோம்பல்படும் வண்டை,
வலைவீசி அழைக்கிறது
மணம் பரப்பும் காற்று.

******
பெய்யென சொன்னதும்
பெய்தது பெருமழை
நில்லென தடுத்தும்
நிற்காமல் நனைகிறது,
காற்றும், நெருப்பும் ஒன்றாக.

******

14 comments:

  1. சின்ன சின்ன மலர்களைக் கோர்த்து தொடுத்த மலர்ச்சரம் போல.. அழகாய் இருக்கிறது பாலா..

    ReplyDelete
  2. உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க தமிழ்10 திரட்டியுடன் இணையுங்கள் .இதில்
    enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

    உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
    ஓட்டளிப்புப் பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

    ReplyDelete
  3. /மகரந்தம் சுமக்க
    சோம்பல்படும் வண்டை,
    வலைவீசி அழைக்கிறது
    மணம் பரப்பும் காற்று./

    /பறந்து கொண்டே இருக்கிறது,
    பழம் தின்ற பறவை.
    விழப்போகும் விதைக்காக
    காத்துக் கொண்டே இருக்கிறது,
    வானம் பார்த்த பூமி.
    /

    /எரிக்கிறது நெருப்பு
    துடிக்கிறது காடு
    எதிர்க்கிறது காற்று,
    துணைபோவது தெரியாமல்./

    அருமை நண்பரே

    தொடர்க‌

    வாழ்த்துகள்

    ReplyDelete
  4. நன்றி கார்த்தி.

    இணைச்சாசு தமிழினி. :)

    நன்றி திகழ், முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  5. ///பறந்து கொண்டே இருக்கிறது,
    பழம் தின்ற பறவை.
    விழப்போகும் விதைக்காக
    காத்துக் கொண்டே இருக்கிறது,
    வானம் பார்த்த பூமி.///


    இதுதான் கவிதைங்கிறது.
    super.

    ReplyDelete
  6. //உறுமீனைத்
    தப்பவிட்ட நாரைக்கு,
    ஆறுதல் சொல்கிறது
    அழியப் போகும் குளம்.

    ******
    எரிக்கிறது நெருப்பு
    துடிக்கிறது காடு
    எதிர்க்கிறது காற்று,
    துணைபோவது தெரியாமல்.//

    அருமை !!!

    -மதன்

    ReplyDelete
  7. /பறந்து கொண்டே இருக்கிறது,
    பழம் தின்ற பறவை.
    விழப்போகும் விதைக்காக
    காத்துக் கொண்டே இருக்கிறது,
    வானம் பார்த்த பூமி./
    அடடா!அருமை...அருமை!

    ReplyDelete
  8. மகரந்தம் சுமக்க
    சோம்பல்படும் வண்டை,
    வலைவீசி அழைக்கிறது
    மணம் பரப்பும் காற்று.

    nice poem.......

    Really good one...

    சின்ன சின்ன மலர்களைக் கோர்த்து தொடுத்த மலர்ச்சரம் போல.. அழகாய் இருக்கிறது பாலா..

    me too feel like this...(Above lines)

    ReplyDelete
  9. மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. பெரிய சங்கதிகளை சொல்லும் சின்ன சின்ன கவிதைகள் அசத்தல்.

    புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. @பூங்குன்றன்
    மிக்க நன்றி. தங்களுக்கும் அன்பும், வாழ்த்தும்.

    @பா.ராஜாராம்
    மிக்க நன்றி மக்கா.

    ReplyDelete
  12. எரிக்கிறது நெருப்பு
    துடிக்கிறது காடு
    எதிர்க்கிறது காற்று,
    துணைபோவது தெரியாமல்.
    ----------------------------------
    கவிதை அழுத்தமாக உள்ளே இறங்குகிறது வெளியே எழ முடியாமல்
    ----------------------------
    வாழ்த்துக்கள் . தொடர்ந்து செய்க.
    புதிய திசைகளில் செல்க
    ----------------------------
    நந்தினி மருதம்
    நியூயார்க், 2012,ஜூன் 27

    ReplyDelete