Saturday, July 18, 2009

இன்று நல்ல நாள் தான் !



வாரந்தோறும் போவேன் தான்...
இன்று மட்டும் ஏனோ,
பதினாறு கைகளும், கைகளில்
பதினாறு திவ்ய ஆயுதங்களுமுடைய‌
சக்க‌ரத்தாழ்வார்
நல்ல மூடில் இருந்திருப்பார் போல...
நான் அர்ச்சனைத் தட்டில் காசு போடாத போதும்,
கையாயுதத்தைக் கீழே வைத்துவிட்டு
கழுத்திலிருந்து ஒரு மாலையைக் கழற்றி
என் கையினில் திணித்தார்
தலைகுணிந்து பெற்றுக் கொண்டு
மெல்ல நகர்ந்து விட்டேன்...

பிரகாரத்தை சுற்றும் போது
மாலை பாரம் மனதை அழுத்த,
திரும்பவும் வந்து உண்டியலில்
காசைப் போட்டு வெளியே வந்தேன்.
அப்பாடா, இன்று நல்ல நாள் தான்...
என்றும் இல்லாத திருநாளாய்
துளசி மாலை பெற்ற யோகம் எனக்கு,
நான்கு ரூபாய் மாலையை
ஐந்து ரூபாய்க்கு விற்ற யோகம்
சக்க‌ரத்தாழ்வார்க்கு!

11 comments:

  1. ஆகா மொத்தம் சாமியையும் வியாபாரி ஆக்கியாச்சு ."பழைய மாலைய கழட்டி கொடுத்தா
    புது மாலை வாங்கி கொடுப்பான்னு பார்த்தா ,இப்படி நடந்து போச்சே !!! atleast ஒரு பிச்சை எடுக்கிறவனுக்கு பைசா போட்டுருந்தா கூட இவன் புண்ணிய கணக்கை கூடி இருக்கலாம் ,
    உண்டியல்ல காசு போட்டா அது எப்போ நமக்கு வந்து சேர ,பேசாம இவன் பாவ கணக்கை கூட்ட வேண்டியதுதான் ,வேற வழியே இல்லை"ன்னி நினச்சு இருப்பார்.

    ரொம்ப நல்லா இருந்தது பாலா !!!

    ReplyDelete
  2. நன்றி கார்த்தி...

    நன்றி மகா...

    ReplyDelete
  3. Still ur going to temple on saturday.....great......
    Nice Kavithai........

    ReplyDelete
  4. //நான்கு ரூபாய் மாலையை
    ஐந்து ரூபாய்க்கு விற்ற யோகம்
    சக்க‌ரத்தாழ்வார்க்கு//

    வழக்கமா பூசாரியைதான் வியாபாரி என்பார்கள் நீங்க கடவுளையே வியாபாரி ஆக்கிட்டீங்க வித்தியாசமான கற்பனை.
    நீங்க எப்ப மாலை மாற்ற போறிங்க?

    ReplyDelete
  5. kadavul kitta vaanginaalum kaasu koduththu than vaanguveengala?

    oru naaththeegana kooda kavidhai ezhuthamudiyum nu prove panniteenga... :)

    nalla irukku sir........ :)

    ReplyDelete
  6. நன்றி சொல்லரசன் !!!

    //நீங்க எப்ப மாலை மாற்ற போறிங்க//

    மாலைக்கு பூ கட்ட ஆரம்பிச்சாச்சு, சீக்கிரம் மாத்திடலாம்... :)

    //sathya //
    thanks madam...

    ReplyDelete
  7. "திருமலை தென் குமரி" என்றொரு பழைய படம்....அதில் ...

    "திருப்பதி கோவிலில் ஒருவர் முன்பு வேண்டியது நிறைவேறியதால் தன் மோதிரம் காணிக்கையாக செலுத்த வேண்டிய காட்சி....அது சமயம் அவருக்கு ஏனோ மோதிரம் காணிக்கையாக செலுத்த மனம் இல்லை....மோதிரத்திற்கு பதிலான பணத்தை உண்டியலில் போடும் போது அவர் கை தவறி பணத்துடன் மோதிரமும் உண்டியலில் விழுந்து விடுகிறது"

    அது போல இதுவும் ...கஞ்சனாக இருக்க நினைப்பவனிடம் கடவுள் நிறைய்ய பிடுங்கு கிறார் போலும்.....

    "யதார்த்த" கவிதைகள் வரவேற்க படுகின்றன....Keep it up....

    // மாலைக்கு பூ கட்ட ஆரம்பிச்சாச்சு, சீக்கிரம் மாத்திடலாம்... :)

    //sathya //
    thanks madam... //

    அட... :)

    -மதன்

    ReplyDelete
  8. ENNA BALA KALAKRINGA SUPER.

    ENGALUKKUM SOLLUNGA EPPDI ELUTHU VENDUM ENDRU

    ReplyDelete