Friday, June 5, 2009

பெயரில்லாதது

எங்கள் தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சின்ன சந்தில் திரும்புகையில், குட்டி சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு அஞ்சு வயசு பையன் குறுக்கால புகுந்த்துட்டான்நான் சுதாரிச்சு பைக்கை சைடு சுவர்லசாய்ச்சு நிறுத்திட்டேன். அந்த குட்டி, சைக்கிள் ஓட்டிட்டு வர்றஅழக பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிச்சது அதுக்கு கோவம் வந்திருச்சு போல. டக்குன்னு சொல்லிச்சு,
 "அண்ணே  பார்த்த்ப்போண்ணே! நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க"
 "சரிங்க சார்,  ஸாரிங்க சார் :) " சிரித்துக்கொண்டே கிளம்பினேன்
கடவுளின் ஸ்பரிஸம், அப்பபோ கிடைக்கத் தான் செய்கிறது.
**************************************
 சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில், "அறை எண் 305ல் கடவுள் ஓடிக்கொண்டிருந்தது. வசனங்கள் சில, பல இடங்களில் நன்றாக இருப்பது போலத் தோன்றவே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடவுள் பவர்(?) கிடைத்த சந்தானம், ஒரு கட்டத்தில் மென்பொருள் துறையினர் அதிக சம்பளம்  வாங்குகிறார்கள் என்பதற்காக, அவர்களின் விரல்களை மொன்னையாக்கி விடுவார். நான் சேனலை மாற்றி விட்டேன்.
 என்ன ஒரு தட்டையான சிந்தனை !!! 
**************************************
 நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார்
"இந்திய கிரிக்கெட் உருப்படவே உருப்படாதுப்பா
"ஏங்க அப்படி சொல்றீங்க?"
 "பின்ன என்ன, இப்போ உலகக் கோப்பை போட்டிக்கு ஜடேஜாவை டீம்ல எடுத்துருக்காங்க?" 
"அதனால என்னங்க, சமீமபா, அவர் நல்லாத் தானே விளையாடிட்டு இருக்கார்." 
"இருந்தாலும், சூதாட்ட ஊழல்ல சிக்கினவரைப் போயி ........"
 "ஹலோ, அது வேற ஜடேஜாங்க"
 "என்னதான் இருந்தாலும் ஜடேஜா, ஜடேஜா தானேப்பா." 
(அடங்கொய்யால, அவனா நீ, இவ்வளவு நேரம் இது தெரியாம பேசீட்டு இருந்துட்டேனைய்யா? )
**************************************
 கடந்த ஞாயிறு அன்று, " நீயா,நானா?" பார்த்துக் கொண்டிருந்தோம். யாரையும் சேனல் மாற்றவிடாமல், நான் உன்னிப்பாக நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன். என் தம்பி கேட்டான்.
 "என்ன, இன்னிக்கி அதிசயமா, இவ்வளவு ஆர்வமா நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்க?"
 "இல்ல, எனக்கு தெரிஞ்வர் இன்னிக்கி கெஸ்ட்டா வர்றார்"
 அவர் வந்து பேச ஆரம்பித்தார்.  நன்றாகப் பேசினார்.
 தம்பி மறுபடி கேட்டான்,
 "யாரு, காலேஜ் ஃப்ரண்டா?"
 "இல்ல
"கூட வேலை பார்க்கிறவரா?"
 "இல்ல"
 "பின்ன?"
 "ப்ளாக் ரைட்டர்"
 "!"
 (அந்த ""விற்கு என்ன அர்த்தமென்று எனக்கு இன்னும் புரியவில்லை :) ஆனந்த விகடன்ல கவிதை எழுதுறவர்னு சொல்லி இருக்கனுமோ!  )
**************************************
 அப்புறம் சின்னதா ஒரு ............... 
ஓரே கூட்டம்...
பட்டனிப் போரட்டமும்,
உணவுத் திருவிழாவும்
அடுத்தடுத்த மேடைகளில்.
**************************************
 இந்த மாதிரி பிட்டு, பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம் ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேன். அவியல், குவியல், பொறியல், டரியல், இட்லி, சாம்பார், சட்னி,வடை, பொங்கல், புளியோதரை, பட்டாணி, சுன்டல், பஞ்சாமிருதம், ஜிகிர்தண்டா,காக்டெய்ல், ஊறுகாய் னு எல்லாரும் ஆளுக்கொரு பேரா, காபிரைட் வாங்கி வச்சிருக்காங்க. எனவே, இப்போதைக்கு தனிப்பெயர் இல்லாமலே போஸ்ட் பண்றேன். ஏதாவது நல்ல தலைப்பு தோனுச்சுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க‌ மக்களே !!!!
**************************************

21 comments:

  1. How does "KADHAMBAM" or "POONGOTHU"(boquet) sound?

    ReplyDelete
  2. மதுர மல்லி!......நல்லா இருக்கா!

    ReplyDelete
  3. \\ நண்பன் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார்,\\

    திடீர்னு எப்டி நண்ப'ன்' , அவ'ர்' ஆனார்.

    பேசாம் "பிச்சைப் பாத்திரம்"னு வச்சுருங்க பாலா அண்ணே. அதுலதான் எல்லாமே கலந்து வரும்

    ReplyDelete
  4. //azhagan said...
    How does "KADHAMBAM" or "POONGOTHU"(boquet) sound?//

    நன்றி அழகன்..... அதையும் மனசுல வச்சுக்குறேன்,,,, :)

    // Raj said...
    மதுர மல்லி!......நல்லா இருக்கா!//

    மதுர மல்லி, படிச்சவுடனேயே, மணம் வீசுதே ! நன்றி ராஜ்.

    // டக்ளஸ்....... said...
    திடீர்னு எப்டி நண்ப'ன்' , அவ'ர்' ஆனார். பேசாம் "பிச்சைப் பாத்திரம்"னு வச்சுருங்க பாலா அண்ணே. அதுலதான் எல்லாமே கலந்து வரும்//

    டாங்ஸ் தம்பி, திருத்தி விட்டேன்.
    பிச்சை பாத்திரம் கூட, இன்னொருத்தர், பிடிங்கி, தலைப்பா வச்சிருக்காரே, என்ன பண்ண ? :(

    ReplyDelete
  5. :)


    ப்ரூட் மிக்ஸ் ...பேரு பரவாயில்லையா ?

    ReplyDelete
  6. ஓரே கூட்டம்...

    பட்டனிப் போரட்டமும்,

    உணவுத் திருவிழாவும்

    அடுத்தடுத்த மேடைகளில்.


    ithu than therinja visayam aache.....oru pakkam kastam,oru pakkam mahilchi.........neenga nenaika than mudiyum..onnum maathhta mudiyaathu itha......

    ReplyDelete
  7. ஓரே கூட்டம்...

    பட்டனிப் போரட்டமும்,

    உணவுத் திருவிழாவும்

    அடுத்தடுத்த மேடைகளில்.


    ithu than therinja visayam aache.....oru pakkam kastam,oru pakkam mahilchi.........neenga nenaika than mudiyum..onnum maathhta mudiyaathu itha......

    ReplyDelete
  8. சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில், "அறை எண் 305ல் கடவுள் ஓடிக்கொண்டிருந்தது. வசனங்கள் சில, பல இடங்களில் நன்றாக இருப்பது போலத் தோன்றவே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடவுள் பவர்(?) கிடைத்த சந்தானம், ஒரு கட்டத்தில் மென்பொருள் துறையினர் அதிக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதற்காக, அவர்களின் விரல்களை மொன்னையாக்கி விடுவார். நான் சேனலை மாற்றி விட்டேன்.

    என்ன ஒரு தட்டையான சிந்தனை !!!

    poraamaila ippadiyum sila manithargal power iruntha IT makkala koduma panraanganu sollirukaanga pa.......uyarntha sinthanaiyum,thattaiyana sinthanaiyum ore padathula yosirichurukkaar antha director nu nenachukonga...:)

    ReplyDelete
  9. // யூர்கன் க்ருகியர்..... said...
    :)
    ப்ரூட் மிக்ஸ் ...பேரு பரவாயில்லையா ?//

    ந‌ன்றி, காரணப் பெயரா ? :)

    // sathya said...
    ithu than therinja visayam aache.....oru pakkam kastam,oru pakkam mahilchi.........neenga nenaika than mudiyum..onnum maathhta mudiyaathu itha......//

    சத்யா,
    ஏன் இவ்வளவு கோபம், relax please ..... :)

    ReplyDelete
  10. எங்கள் தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சின்ன சந்தில் திரும்புகையில், குட்டி சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு அஞ்சு வய‌சு பையன் குறுக்கால புகுந்த்துட்டான். நான் சுதாரிச்சு பைக்கை சைடு சுவர்ல‌ சாய்ச்சு நிறுத்திட்டேன். அந்த குட்டி, சைக்கிள் ஓட்டிட்டு வர்ற‌ அழக பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிச்சது அதுக்கு கோவம் வந்திருச்சு போல. டக்குன்னு சொல்லிச்சு,


    "அண்ணே பார்த்த்ப்போண்ணே! நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க"

    "சரிங்க சார், ஸாரிங்க சார் :) " சிரித்துக்கொண்டே கிளம்பினேன்.

    கடவுளின் ஸ்பரிஸம், அப்பபோ கிடைக்கத் தான் செய்கிறது.

    good thought........kuzhanthaikalidaththil kadavulai paarunu chummava sollirukaanga..:)

    ReplyDelete
  11. (அந்த "ஓ"விற்கு என்ன அர்த்தமென்று எனக்கு இன்னும் புரியவில்லை :) ஆனந்த விகடன்ல கவிதை எழுதுறவர்னு சொல்லி இருக்கனுமோ! )

    antha ohh ku ithu than arththam

    pera sollama ippadi seen vida koodathunu arththam...:)

    ReplyDelete
  12. நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார்,

    "இந்திய கிரிக்கெட் உருப்படவே உருப்படாதுப்பா"

    "ஏங்க அப்படி சொல்றீங்க?"

    "பின்ன என்ன, இப்போ உலகக் கோப்பை போட்டிக்கு ஜடேஜாவை டீம்ல எடுத்துருக்காங்க?"

    "அதனால என்னங்க, சமீமபா, அவர் நல்லாத் தானே விளையாடிட்டு இருக்கார்."

    "இருந்தாலும், சூதாட்ட ஊழல்ல சிக்கினவரைப் போயி ........"

    "ஹலோ, அது வேற ஜடேஜாங்க"

    "என்னதான் இருந்தாலும் ஜடேஜா, ஜடேஜா தானேப்பா."

    hmmmm always these people are like that only....:) thiruththa mudiyathu ,ivangala thiruththave mudiyathu.......:)

    ReplyDelete
  13. இந்த மாதிரி பிட்டு, பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம் ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேன். அவியல், குவியல், பொறியல், டரியல், இட்லி, சாம்பார், சட்னி,வடை, பொங்கல், புளியோதரை, பட்டாணி, சுன்டல், பஞ்சாமிருதம், ஜிகிர்தண்டா,காக்டெய்ல், ஊறுகாய் னு எல்லாரும் ஆளுக்கொரு பேரா, காபிரைட் வாங்கி வச்சிருக்காங்க. எனவே, இப்போதைக்கு தனிப்பெயர் இல்லாமலே போஸ்ட் பண்றேன். ஏதாவது நல்ல தலைப்பு தோனுச்சுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க‌ மக்களே !!!!


    hmm:) i give a choice pa..choose any title for this ur own story..
    a)santharppa thundugal
    b)santharppa nenaivugal
    c)saththiyama sondhama yosicha en nenaivugal :)
    d)sila nihalchigal
    e)sila baathippugal..

    ippadi eththanaiyo irukkula? :)
    c)

    ReplyDelete
  14. இந்த மாதிரி பிட்டு, பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம் ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேன். அவியல், குவியல், பொறியல், டரியல், இட்லி, சாம்பார், சட்னி,வடை, பொங்கல், புளியோதரை, பட்டாணி, சுன்டல், பஞ்சாமிருதம், ஜிகிர்தண்டா,காக்டெய்ல், ஊறுகாய் னு எல்லாரும் ஆளுக்கொரு பேரா, காபிரைட் வாங்கி வச்சிருக்காங்க. எனவே, இப்போதைக்கு தனிப்பெயர் இல்லாமலே போஸ்ட் பண்றேன். ஏதாவது நல்ல தலைப்பு தோனுச்சுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க‌ மக்களே !!!!


    hmm:) i give a choice pa..choose any title for this ur own story..
    a)santharppa thundugal
    b)santharppa nenaivugal
    c)saththiyama sondhama yosicha en nenaivugal :)
    d)sila nihalchigal
    e)sila baathippugal..

    ippadi eththanaiyo irukkula? :)

    ReplyDelete
  15. விரிவான விமர்சனம் எழுதி, கலக்கிட்டீங்க, சத்யா.... நன்றி....

    //c)saththiyama sondhama yosicha en nenaivugal :)//

    அட !!!!! :)

    ReplyDelete
  16. தல சூப்பரா எழுதியிருக்கீங்க. கொலாபேசாம் "பிச்சைப் பாத்திரம்"னு வச்சுருங்க பாலா அண்ணே. அதுலதான் எல்லாமே கலந்து வரும்

    ReplyDelete
  17. நல்ல கலெக்ஷன் பாலா.. அந்த சின்னப் பையன் சொன்னதை மிகவும் ரசித்தேன்..

    ReplyDelete
  18. நன்றி இளையகவி. :)

    நன்றி கார்த்தி.

    நன்றி ஸ்ரீதர்.

    ReplyDelete
  19. // "அண்ணே பார்த்த்ப்போண்ணே! நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க" //

    அந்த குட்டி பையன் , இந்த காதல் படத்துல வர்றவன் இல்லையே!!!!!

    //என்னதான் இருந்தாலும் ஜடேஜா, ஜடேஜா தானேப்பா." //

    "அதெல்லாம் எங்களுக்கு தெரியாது, வார்டன் -ன்ன நாங்க அடிப்போம்" --- இது அந்த பாதிப்பு தான் .....பெருசா எடுத்துக்காதீங்க பாசு......

    //நான் சேனலை மாற்றி விட்டேன்//

    இப்போ எல்லாம் , இதுக்கெல்லாம் கூட சேனல் மாத்த ஆரம்பிச்சுட்டே.....நீ ரொம்ப மாறிட்ட டா பாலா :)

    //a)santharppa thundugal
    b)santharppa nenaivugal
    c)saththiyama sondhama yosicha en nenaivugal :)
    d)sila nihalchigal
    e)sila baathippugal..//

    ////c)saththiyama sondhama yosicha en nenaivugal :) ......அட !!!!! :) //

    மத்த தலைப்பு எல்லாம் ஒகே....ஆனா இந்த "c) " மட்டும் சரிப்பட்டு வராது போலிருக்கே...இதெல்லாம் நடந்த நிகழ்ச்சி பதிவுகள்..."yosicha" ....கிடையாது - கவிதை தவிர - இல்லையா!......(யாரவது ஏதாவது உருப்படியா சொன்னா கூட நொள்ள சொல்லியே பழகிபோச்சு.....ம்ம்ம் என்ன பண்றது)

    என் பங்குக்கு நானும்,

    1) உளறல் களஞ்சியம் *** (நினைவு களஞ்சியம் / உணர்வு களஞ்சியம் - கூட வச்சுக்கலாம் )
    2) கொத்துகறி பரோட்டாவும் , ஆம்லெட்டும் (என் range-kku வாங்கப்பு....)
    3) ஆச்சரிய அலும்புகள்
    4) முத்துமணிமாலை
    5) தூவான சிதறல்கள்
    6) கொறிக்க.....கடிக்க....இளிக்க......

    *** - முதல் தலைப்பு / தமிழில் தலைப்பு வைத்தால் தமிழக அரசிடம் இருந்து "வரிவிலக்கு" கிடைத்தாலும் கிடைக்கலாம்.

    -மதன்

    ReplyDelete
  20. COCKTAIL HOW IS IT?????????????????

    ReplyDelete